பத்த வச்சிட்டியே பரட்ட: காலையில் விலை இறங்கிய தங்கம் மாலையில் உயர்வு..டிரம்ப் செய்த சம்பவமே காரணம்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, January 3, 2026, 17:35 [IST] Share This Article
சென்னையில் இன்று காலை விலை குறைந்த தங்கம், மாலையில் அதிரடியாக உயர்ந்திருக்கிறது. இந்திய சந்தையை பொறுத்தவரை தங்கத்தின் விலையை சர்வதேச காரணிகளும் உள்ளூர் காரணிகளும் தான் நிர்ணயம் செய்கின்றன. உலக அளவில் ஏதேனும் ஒரு புவிசார் பதற்றம் ஏற்பட்டு விட்டாலே உடனடியாக தங்கத்தின் விலை தான் உயரும்.
புவிசார் பதட்டங்கள், இரு நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் ஏற்படும் போது பெரும்பாலான முதலீட்டாளர்களும் முதலீட்டு நிறுவனங்களும் தங்களுடைய பணத்தை பாதுகாப்பான முதலீடாக கூறப்படும் தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்த ஒரு சம்பவம் மீண்டும் தங்கத்தின் விலையை உயர செய்திருக்கிறது.

சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சற்றே குறைந்திருந்தது . அதாவது நேற்றைய விட இன்றைய தினம் கிராமுக்கு 60 ரூபாய் தங்கத்தின் விலை குறைந்து 12,520 ரூபாயாகவும் ஒரு சவரனுக்கு 480 ரூபாய் விலை குறைந்து 1,00,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் காலையில் குறைந்த தங்கம் விலை அப்படியே நீடிக்கும் ஞாயிற்றுக்கிழமையும் குறைந்த விலைக்கு தங்கத்தை வாங்கலாம் என மக்கள் எண்ணினர். ஆனால் தடாலடியாக மாலையில் தங்கத்தின் விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.
சென்னையில் இன்று மாலை தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் 12,600 ரூபாயாக மாறி இருக்கிறது . அப்படி பார்க்கும்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை 640 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது. அதாவது சென்னையில் தற்போது ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1,00,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா நாட்டின் மீது திடீரென ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது . அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தி இருக்கிறது. பல்வேறு இடங்களிலும் குண்டுமழை பொழிந்திருக்கிறது. வெனிசுலாவின் துறைமுகம் ,விமான நிலையம் ,அதிபர்மாளிகை ,ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Also Read
கொளுத்தி போட்ட டிரம்ப்: வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!! அதிபர் மதுரோ சிறைபிடிப்பு!!
அமெரிக்க ராணுவம் வெனிசுலா அதிபரையும் அவருடைய மனைவியையும் சிறை பிடித்து நாடு கடத்தி இருப்பதாகவும் டிரம்பே தெரிவித்திருக்கிறார் . இந்த தகவல் உலக அளவில் ஒரு பதட்டமான சூழ்நிலையை உண்டாக்கி இருக்கிறது . அமெரிக்க அரசாங்கத்தின் இந்த ராணுவ நடவடிக்கை தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் விலையை நிச்சயம் உயர்த்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழலில் தான் சென்னையில் மாலையில் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது . தங்கத்தை போலவே வெள்ளியின் விலை உயர்வு கண்டிருக்கிறது.சென்னையில் இன்று காலை 2:6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி மாலை ஒரு ரூபாய் விலை உயர்வு கண்டு 257 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Recommended For You
வெனிசுலா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்: இனி தங்கம், வெள்ளி விலையை கையில பிடிக்க முடியாது!!
தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் மீண்டும் விலை உயர தொடங்கி இருக்கிறது. அடுத்ததாக வெனிசுலா அமெரிக்கா இடையினாலான இந்த மோதல் எப்படி செல்கிறதோ அதை பொறுத்து தான் திங்கட்கிழமை தடாலடியாக விலை உயர போகிறதா அல்லது இப்படியே நீடிக்க போகிறதா என்பது தெரிய வரும். ஒருவேளை இந்த மோதல் நீடிக்கிறது எனும் போது தங்கம் விலை மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர தொடங்கும் என்பதை மறுக்க முடியாது.
Share This Article English summary
Gold Rate in Chennai increased in the evening as US attacks Venezuela
Gold Rate in Chennai increased in the evening as the US military attacks Venezuela and Trump’s claim about capturing Maduro gains attention. Story first published: Saturday, January 3, 2026, 17:35 [IST] Other articles published on Jan 3, 2026
