பட்ஜெட் 2026: கல்வி முதல் விளையாட்டு துறை வரையில் மிடில் கிளாஸ் மக்களுக்கு பயனுள்ள டாப் அறிவிப்புகள்! – Allmaa

befunky-collage-2026-02-01t173850-097-1769947758

  செய்திகள்

பட்ஜெட் 2026: கல்வி முதல் விளையாட்டு துறை வரையில் மிடில் கிளாஸ் மக்களுக்கு பயனுள்ள டாப் அறிவிப்புகள்!

News oi-Pugazharasi S By Published: Sunday, February 1, 2026, 17:39 [IST] Share This Article

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் ஆனது சலுகைகளை விட, சேமிப்புக்கு வழிவகுக்கும் என்று சொல்லலாம். நேரடியாக பணத்தை விட, நீண்டகாலத்தில் சாமானிய மக்களின் மருத்துவ செலவுகள், பயண செலவு மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவதில் இது அதிக கவனம் செலுத்தியுள்ளது.

கல்வி துறை முதல் வேலை வாய்ப்பு வரை!

கல்வி என்பது வெறும் ஏட்டு சுரைக்காய் ஆக இல்லாமல், அது மாணவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பையும் தேடித்தர வேண்டும் என்ற நோக்கில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2026:கல்வி முதல் விளையாட்டு துறை வரையில் மிடில் கிளாஸ் மக்களுக்கு பயனுள்ள டாப் அறிவிப்புகள்

மாணவியர் விடுதி (STEM)

அறிவியல் (Science), தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering) மற்றும் கணிதம் (STEM) சார்ந்த உயர்கல்வி பயிலும் மாணவிகள், நீண்ட நேரம் ஆய்வகங்களில் செலவிட வேண்டியிருக்கும். இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாணவியர் விடுதி வீதம் நாடு முழுவதும் விடுதிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையும் அதிகரிக்கும். இது மாணவியர்களின் எதிர்காலத்தையும் உறுதி செய்யும்.

விண்வெளி ஆராய்ச்சிக்கு மெகா பூஸ்ட்

வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறையில் இந்தியாவை முன்னிலைப்படுத்த 4 புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கி உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். குறிப்பாக லடாக்கில் உள்ள இமாலய சந்திரா தொலைநோக்கி மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் தேசிய அளவிலான சூரிய தொலைநோக்கி மற்றும் விண்வெளி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும். இது இளைஞர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய ஆர்வத்தை ஏற்படுத்தும். இது இத்துறையில் முதலீடுகளை அதிகரிக்க உதவும். வேலை வாய்ப்பையும் நீண்ட கால அடிப்படையில் பெருக்க உதவிகரமாக இருக்கும்.

கல்வி – வேலை – தொழில் குழு

கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் (Education to Employment and Enterprise – E3) என்ற உயர்மட்டக் குழு அமைக்கப்படும். இது AI போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்களின் திறன்களை வளர்க்க உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் 2047-க்குள் உலகளாவிய சேவை துறையில் இந்தியா 10% பங்கை பெறுவதை உறுதி செய்ய உதவிகரமாகவும் இருக்கும்.
தொழில் வழித்தடங்களில் பல்கலைக்கழக நகரங்கள்:
முக்கியத் தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்து வழித்தடங்களுக்கு (Industrial Corridors) அருகிலேயே 5 புதிய பல்கலைக்கழக நகரங்கள் உருவாக்கப்படும். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சியும், எளிதான வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

MSME-களுக்கு என்ன அறிவிப்பு?

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் MSME துறையை உலகத் தரத்திற்கு உயர்த்த, அரசு ஒரு முப்பரிமாண (Equity, Liquidity, Professional Support) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

MSME-களுக்கான நிதி உதவி: வளர்ந்து வரும் சிறு தொழில்களுக்கு உதவும் வகையில் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் கடன் மட்டுமல்லாமல், முதலீட்டு (Equity) ரீதியாகவும் நிறுவனங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இது சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

தற்சார்பு இந்தியா நிதி: மைக்ரோ நிறுவனங்களுக்கு ஆபத்து காலங்களில் நிதி வழங்க இத்திட்டத்திற்கு கூடுதலாக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
TReDS தளம்: சிறு தொழிலதிபர்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகையை) எளிதாகப் பெற 7 லட்சம் கோடி ரூபாய் நிதி புழக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் மித்ரா

சிறு தொழிலதிபர்கள் சந்திக்கும் சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் ஆவணக் குளறுபடிகளை சரிசெய்ய, கார்ப்பரேட் மித்ரா என்ற புதிய நிபுணர் குழு உருவாக்கப்படும். இவர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கணக்கு வழக்குகளை சரி பார்க்க உதவுவார்கள்.

திவ்யாங்ஜன் கௌஷல் யோஜனா (Divyangjan Kaushal Yojana)

இது மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டமாகும்.
தொழில்துறை இணைப்பு: வெறும் பயிற்சி மட்டுமல்லாமல், தற்போதைய கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படும்.
தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி: ஒவ்வொருவரின் உடல் மற்றும் மன திறனுக்கு ஏற்ப, அவர்கள் செய்யக்கூடிய வேலைகளுக்கான பயிற்சிகள் இதில் அடங்கும். இதன் மூலம் அவர்களுக்கு கௌரவமான வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.

திவ்யாங் சஹாரா யோஜனா (Divyang Sahara Yojana)
இத்திட்டம் மாற்று திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களின் (Assistive Devices) தரத்தை மேம்படுத்துவதிலும், அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
ALIMCO நிறுவனம் நவீனமயமாக்கப்பட்டு, செயற்கை கால்கள் மற்றும் பிற உபகரணங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும். அது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக மெல்லிய மற்றும் எடையற்ற உபகரணங்களை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும். நாடு முழுவதும் உள்ள பிரதமர் திவ்யாஷா மையங்கள் மூலம் இந்த நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும்.

கேலோ இந்தியா மிஷன்

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவை ஒரு விளையாட்டு வல்லரசாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், விளையாட்டு துறைக்கான ஒரு மாபெரும் திட்டத்தையும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இது வெறும் ஒரு வருடத்திற்கான திட்டம் அல்ல, அடுத்த 10 ஆண்டுகளுக்கான விளையாட்டுத்துறை மாற்றத்திற்கான ஒரு செயல்திட்டம் ஆகும். இதன் மூலம் கிராமப்புற மற்றும் அடிமட்ட அளவில் உள்ள திறமையான சிறுவர், சிறுமியரை சிறு வயதிலேயே கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சி மையங்களை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு மிடில் கிளாஸ் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை இந்த பட்ஜெட் 2026 அறிவித்துள்ளது.

Share This Article English summary

How doesBudget 2026 empower middle-class families through its major focus on educationto university townships,sportsm MSMEs?

Budget 2026 introduces five university townships, girl hostels, and the Khelo India Mission, while slashing overseas tourism TCS to 2%, fostering affordable, world-class growth. Story first published: Sunday, February 1, 2026, 17:39 [IST] Other articles published on Feb 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *