பட்ஜெட் 2026ன் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.. வருமான வரியில் மாற்றம் வருமா..? உண்மையில் சாத்தியமா..?
News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Sunday, February 1, 2026, 8:17 [IST] Share This Article
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட் அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பே வருமான வரி குறையுமா என்பது தான். விலைவாசி உயர்வு, நுகர்வு சந்தையில் மந்தநிலை இப்படி காரணங்களை காட்டி இந்த பட்ஜெட்டில் கட்டாயம் வருமான வரி குறைக்கப்படும் என பல கணிப்புகள் வந்துள்ளது.
ஆனால் மத்திய அரசு கடந்த பட்ஜெட் அறிக்கையில் அறிவித்த வருமான வரி குறைப்பு நாட்டின் வளர்ச்சியில் எந்த அளவுக்கு நன்மை அளித்துள்ளது என்பதை கணக்கிட்ட பின்பே புதிய வருமான வரி குறைப்பை அறிவிக்க முடியும். இதேவேளையில் ஒரு வருடத்திற்கான கணக்கீடு போதுமா என்றால் மிகப்பெரிய கேள்வி தான்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2025இல் புதிய வரி முறையின் (new tax regime) வரி அளவுகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்தார். இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2025 முதல் 2025-26 நிதியாண்டுக்கு அமலுக்கு வந்தது. வரி அமைப்பை எளிமையாக்குவதும், பல்வேறு வருமான அளவுகளில் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
பழைய மற்றும் புதிய வரி முறைகளின் முக்கிய வேறுபாடுகள்:
புதிய முறையில் அடிப்படை விலக்கு வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது (பழைய முறையில் ரூ.2.5 லட்சம்). அதிகபட்ச வரி விகிதம் ரூ.24 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் (பழைய முறையில் ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம்). டாக்ஸ் ரிபேட் ரூ.60,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (பழைய முறையில் ரூ.12,500). இதனால் ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு நடைமுறையில் வரி இல்லாமல் போகிறது (பழைய முறையில் ரூ.5 லட்சம் வரை மட்டுமே).
புதிய வரி முறையின் வரி அளவுகள் (FY 2025-26 / AY 2026-27):
ரூ.4 லட்சம் வரை – வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – 5 சதவீதம்
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை – 10 சதவீதம்
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை – 15 சதவீதம்
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை – 20 சதவீதம்
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை – 25 சதவீதம்
ரூ.24 லட்சத்துக்கு மேல் – 30 சதவீதம்
பழைய வரி முறை மாற்றமின்றி தொடர்கிறது.
ரூ.2.5 லட்சம் வரை – வரி இல்லை
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை – 5 சதவீதம்
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை – 20 சதவீதம்
ரூ.10 லட்சத்துக்கு மேல் – 30 சதவீதம்
பழைய முறையில் பிரபலமான வரி கழிவுகள் அனுமதிக்கப்படுகின்றன. 80C, 80D, 80G, 80TTA, HRA, LTA, வீட்டுக் கடன் வட்டி (பிரிவு 24), கல்விக் கடன் வட்டி (பிரிவு 80E) போன்றவை இதில் அடங்கும். ஆனால் புதிய வரி முறையில் இந்த வரி கழிவுகள் என எதுவும் இல்லை.
புதிய வரி முறை இப்போது வருமான வரி செலுத்துவோருக்கு default ஆக உள்ளது. ஆனால் பழைய முறையில் கழிவுகள் அதிகம் தேவைப்படுபவர்களுக்கு அது சிறந்ததாக இருக்கும். புதிய முறையில் ரூ.12 லட்சம் வரை வரி இல்லாதது சாதாரண மக்களுக்கு பெரிய நிவாரணம்.
இந்த நிலையில் பட்ஜெட் 2026ல் நிர்மலா சீதாராமன் வருமான வரியில் ஏதேனும் மாற்றம் செய்தால் இந்த வரி அளவில் இருந்து தான் குறைக்க முடியும். தற்போதைய சந்தை கணிப்பில் இருந்து பார்க்கும் போது டாக்ஸ் ரிபேட் அளவில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share This Article English summary
Budget 2026: Does nirmala sitharaman able to cut Income tax this time? – What are present tax rate and tax slabs
Budget 2026: Does nirmala sitharaman able to cut Income tax this time? – What are present tax rate and tax slabs Story first published: Sunday, February 1, 2026, 8:17 [IST] Other articles published on Feb 1, 2026
