பட்ஜெட் முடிஞ்ச கையோடு அரோகரா சொன்ன பிரதமர் நரேந்திர மோடி..!!

modi26-1769940075

  செய்திகள்

பட்ஜெட் முடிஞ்ச கையோடு அரோகரா சொன்ன பிரதமர் நரேந்திர மோடி..!!

News oi-Devika Manivannan By Published: Sunday, February 1, 2026, 15:33 [IST] Share This Article

2026- 2027 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியான ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

பட்ஜெட்டில் பல்வேறு துறையினரும் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தனர். வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் இந்தியர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல மூத்த குடிமக்கள் தங்களுக்கு வரி சலுகை கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீட்டு கடன்களுக்கான வரி சலுகைகள் மற்றும் மலிவு விலை வீடுகளுக்கான வரையறைகள் மாற்றி அமைக்கப்படும் என கூறின.

பட்ஜெட் முடிஞ்ச கையோடு அரோகரா சொன்ன பிரதமர் நரேந்திர மோடி..!!

மற்றொருபுறம் தேர்தலை எதிர்கொண்டு இருக்க கூடிய மாநிலங்களுக்கு பிரத்தியேகமான திட்டங்கள் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு அபார அறிவிப்புகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் நீண்ட கால வளர்ச்சியை இலக்காக கொண்டும் வளர்ந்து வரும் துறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Also Readமத்திய பட்ஜெட் நம் வீட்டு பட்ஜெட்டில் கை வைக்கிறதா? இனி எந்தெந்த பொருட்களின் விலை உயரும்? குறையும்?மத்திய பட்ஜெட் நம் வீட்டு பட்ஜெட்டில் கை வைக்கிறதா? இனி எந்தெந்த பொருட்களின் விலை உயரும்? குறையும்?

இதன் காரணமாக பல்வேறு துறையினரும் பட்ஜெட் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் .இத்தகைய சூழலில் பட்ஜெட் முடிந்த கையோடு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. புனிதமான தைப்பூச திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கட்டும் நல்ல ஆரோக்கியம் , வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசிர்வதிக்கப்படட்டும் என அதில் பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார். சமூக வலைதளங்களில் இது டிரெண்டாகி வருகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரும் நிலையில் பிரதமரின் இந்த பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended For Youவருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை!! கோடிக்கணக்கான இந்தியர்கள் ஏமாற்றம்!!வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை!! கோடிக்கணக்கான இந்தியர்கள் ஏமாற்றம்!!

முன்னதாக பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் சிறப்பு கனிம வள தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொதிகை மலையில் மலையேற்ற திட்டம், பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலா திட்டம், ஆதிச்சநல்லூர் தொல்லியல் இடத்தில் சிறப்பு மையம் ஆகியவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்திற்கு அதிவேக ரயில் சேவை திட்டம் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Share This Article English summary

After Union Budget, PM Modi wishes Tamil people for Thai Poosam

As the Union Budget speech by Nirmala Sitharaman draws heavy criticizing from poltical parties from Tamilnadu, Prime Minister Wishes the Tamil people on the occasion Thai Poosam. Story first published: Sunday, February 1, 2026, 15:33 [IST] Other articles published on Feb 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *