தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை: கிராம் ரூ.15,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி!! இனிமே இப்படிதானா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 19, 2026, 10:04 [IST] Share This Article
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்துக்கு நிகராக வெள்ளியும் போட்டி போட்டு கொண்டு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு சாமானிய மக்களுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து 13,450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் நேற்று 1,06,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் 1360 ரூபாய் விலை உயர்ந்து 1,07,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராம் தங்கத்தை பொறுத்தவரை 1,34,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 220 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1760 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. இரண்டே நாளில் தங்கத்தின் விலை இவ்வளவு அதிகமாக உயர்ந்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 12,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் 13,450 க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இந்த 19 நாட்களில் ஒரு கிராமுக்கு 1010 ரூபாயும், ஒரு சவரனுக்கு 8080 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது.
Also Read
பற்றி எரியும் கிரீன்லாந்து விவகாரம்!! டிரம்பின் அறிவிப்பால் தாறுமாறாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!!
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 186 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 15 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகிறது. சென்னையில் இன்று 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,673 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,17,384 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 1,46,730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று தடாலடியாக உயர்ந்திருக்கிறது. கிராமுக்கு 140 ரூபாய் விலை உயர்ந்த 11,230 க்கும் ஒரு சவரன் 89,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு இருக்கிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 318 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 8000 ரூபாய் விலை உயர்வு கண்டு 3,18,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் வெள்ளியின் விலை தடாலடியாக கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஜனவரி ஒன்றாம் தேதியன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 256 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்றைய தினம் 318 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது இந்த 19 நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு 62 ரூபாயும் கிலோவுக்கு 62,000 ரூபாயும் உயர்வு கண்டிருக்கிறது.
Recommended For You
தங்கம் விலையை குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா? கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்ப்பு!!
கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார். இதனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது, டிரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு 10% இறக்குமதி வரியை அறிவித்துள்ளார், அதற்கு போட்டியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வரி விதிக்க தயாராகி வருகின்றன. இந்த மோதல்கள் உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலையை வரலாற்று உச்சத்தை தொட வைத்துள்ளன. இந்திய சந்தையிலும் இது எதிரொலிக்கிறது. இந்த விவகாரம் தணியும் வரை தங்கம், வெள்ளி விலையை கையில் பிடிக்க முடியாது.
Share This Article English summary
Chennai gold and silver rates reached new high due to Greenland issue
Due to Greenland issue between US and EU countries gold and silver rates have reached all time high both in global and local market. In Chennai gold and silver rates reached new high. Story first published: Monday, January 19, 2026, 10:04 [IST] Other articles published on Jan 19, 2026
