தமிழ்நாட்டில் விற்பனையை தொடங்கியது உலக புகழ்பெற்ற IKEA நிறுவனம்!! விரைவில் சென்னையில் கடை!! – Allmaa

ikea2-1768899933

  செய்திகள்

தமிழ்நாட்டில் விற்பனையை தொடங்கியது உலக புகழ்பெற்ற IKEA நிறுவனம்!! விரைவில் சென்னையில் கடை!!

News oi-Devika Manivannan By Published: Tuesday, January 20, 2026, 14:38 [IST] Share This Article

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரபல மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் தான் IKEA. தரமான பொருட்களை விற்பனை செய்து உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் இந்த நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே கால்பதித்துவிட்டது.

டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் நேரடி விற்பனை நிலையங்களை அமைத்துள்ளது. ஆனால் சென்னையில் இதுவரை கால்பதிக்கவில்லை. இந்நிலையில் தான் IKEA நிறுவனம் முதன்முறையாக தமிழ்நாட்டில் விற்பனையை தொடங்கி நற்செய்தி தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் டெலிவரி செய்வதை தொடங்கி இருப்பதாக IKEA நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பேட்ரிக் அந்தோணி தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் விற்பனையை தொடங்கியது உலக புகழ்பெற்ற IKEA நிறுவனம்!! விரைவில் சென்னையில் கடை!!

சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்களுக்கும் தங்களுடைய ஆன்லைன் டெலிவரி சேவை கிடைக்கும் என கூறியிருக்கிறார். IKEA நிறுவனத்தின் மரச்சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மெத்தை உள்ளிட்டவற்றை மக்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம் என IKEA இந்தியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 6400 தயாரிப்புகள் டெலிவரி செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறி இருக்கிறது.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் நகர மக்கள் IKEA பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மூன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் டெலிவரி செய்யப்பட்டு விடும் என்றும் இந்த பொருட்களுக்கு 5 முதல் 25 ஆண்டுகாலம் வரை வாரன்டி கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமில்லாமல் ஓராண்டு கால ரிட்டர்ன் பாலிசி இருக்கிறது. தற்போதைக்கு இ-காமர்ஸ் முறையில் விற்பனையை தொடங்கி விரைவில் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் நேரடி விற்பனை நிலையங்களை அமைக்க இருப்பதாக IKEA நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Also Readஅமெரிக்கா டாலருக்கு குட் பை சொல்ல தயாராகும் இந்தியா!! ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான யோசனைஅமெரிக்கா டாலருக்கு குட் பை சொல்ல தயாராகும் இந்தியா!! ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான யோசனை

தமிழ்நாட்டு சந்தையில் விற்பனையில் தற்போது தான் களமிறங்கி இருக்கிறது என்றாலும் IKEA நிறுவனம் ஏற்கனவே தாங்கள் விற்பனை செய்யக்கூடிய மெத்தைகளை தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய நிறுவனங்களிடமிருந்து தான் கொள்முதல் செய்கிறது. சென்னை வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாகவே IKEA நிறுவன தயாரிப்புகளுக்காக காத்திருக்கின்றனர் என கூறும் IKEA நிறுவனம் ஏராளமானவர்கள் பல மைல் தூரம் பயணம் செய்து வந்து நேரடியாக எங்கள் கடையில் பொருட்களை வாங்குவதை பார்க்க முடிகிறது, இதனால் தான் நாங்கள் தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் டெலிவரியை தொடங்கி இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறது.

முன்னதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா IKEA நிறுவனத்தை சென்னைக்கு வரவேற்கிறோம் என கூறியிருக்கிறார். கூடிய விரைவில் இந்த நிறுவனம் சென்னையில் தன்னுடைய நேரடி விற்பனை நிலையத்தை தொடங்க வேண்டும் என தெரிவித்திருக்கும் அவர் IKEA நிறுவனம் தமிழ்நாட்டை நோக்கி வருகை தந்திருப்பது உலக நிறுவனங்கள் நம்பிக்கையோடு தமிழ்நாட்டின் நோக்கி வருகை தருவதற்கு ஒரு முன் உதாரணம் என கூறியிருக்கிறார்.

Recommended For You5 ஆண்டுகளில் 36 லட்சம் வேலைவாய்ப்புகள்.. ரூ.12.16 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள்..!!5 ஆண்டுகளில் 36 லட்சம் வேலைவாய்ப்புகள்.. ரூ.12.16 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள்..!!

தற்போது IKEA நிறுவனம் ஹைதராபாத், பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நேரடி விற்பனை நிலையங்களை வைத்திருக்கிறது. மகாராஷ்டிரா , ஆந்திரா , தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஆக்ரா, சண்டிகர் ,கான்பூர் ,ஜெய்பூர், லக்னோ, லூதியானா ,வாரணாசி, கோவா நகரங்களில் ஆன்லைன் டெலிவரி சேவையை வழங்கி வருகிறது.

Share This Article English summary

IKEA Launches Online Deliveries in Tamil Nadu from January 22

Swedish retailer IKEA begins online home furnishing deliveries across Chennai, Madurai, Coimbatore, and Salem in Tamil Nadu, offering over 6,400 products fulfilled via its Bengaluru hub. Story first published: Tuesday, January 20, 2026, 14:38 [IST] Other articles published on Jan 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *