தமிழ்நாட்டில் அடுத்த டைடல் பார்க் எங்கே வருது தெரியுமா..? முக.ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!! – Allmaa

தமிழ்நாட்டில் அடுத்த டைடல் பார்க் எங்கே வருது தெரியுமா..? முக.ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!! – Allmaa

  செய்திகள்

தமிழ்நாட்டில் அடுத்த டைடல் பார்க் எங்கே வருது தெரியுமா..? முக.ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!!

News oi-Prasanna Venkatesh By Published: Monday, November 10, 2025, 17:48 [IST] Share This Article

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்பை இன்று நடந்த முக்கியமான கூட்டத்தில் அறிவித்தார். ஏற்கனவே நியோ டைடல் பார்க் திட்டம் தமிழ்நாட்டில் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்து வரும் வேளையில் புதிய டைடல் பார்க் அமைப்பதற்கான திட்டத்தை முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டைடல் பார்க் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளையும், ஹைடெக் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பாதையை அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் முதல்வர் முக.ஸ்டாலின் புதுக்கோட்டை நிகழ்ச்சியில் 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நியோ டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

தமிழ்நாட்டில் அடுத்த டைடல் பார்க் எங்கே வருது தெரியுமா..? முக.ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!!

முக.ஸ்டாலின் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வேளையில், இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் 6 முக்கியமான திட்டங்களை அறிவித்து புதுக்கோட்டை மக்களை மகிழ்வித்தார்.

ஆறு முக்கிய அறிவிப்புகள்
முதல் அறிவிப்பாக புதுக்கோட்டைியில் நியோ டைடல் பார்க் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். இதை தொடர்ந்து பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும் ஆவுடையார்கோயில் அருகே வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். இப்பகுதியில் இருக்கும் முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும் என அறிவித்தார். இறுதியாக கீரமங்கலம் விவசாயிகள் பலன் பெறும் வகையில் ரூ.1.6 கோடியில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

இதோடு இந்த கூட்டத்தில் முக.ஸ்டாலின் ரூ.348 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 44000 பேருக்கு வழங்கினார். மேலும் ரூ.207.70 கோடி மதிப்பிலான 103 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து ரூ.223.06 கோடி மதிப்பிலான 577 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார் முதல்வர்.

வேலைவாய்ப்பு
இந்த 6 அறிவிப்பில் தொழில்நுட்ப துறைக்கும் முக்கியதுவம் கொடுக்கப்பட்டு உள்ளது, விவசாய துறைக்கும் முக்கியதுவம் கொடுக்கப்பட்டு உள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

மேலும் மாவட்டம் தோறும் பொறியியல் கல்லூரி அமைத்த தமிழ்நாடு அரசு, இப்போது நியோ டைடல் பார்க் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. இது இளைஞர்களுக்கு தொழில்நுட்ப வாய்ப்புகளை அதிகரிக்கும். மாநிலத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தும்.

முக.ஸ்டாலின் நவம்பர் 5 அன்று வேலூரில் கட்டிமுடிக்கப்பட்ட டைடல் நியோ பார்க் திறந்து வைத்தார். இந்த நியோ டைடல் பார்க் வேலூர் வட்டத்தில் மேல்மொனவூர் -அப்துல்லாபுரம் கிராம பகுதியில் அமைந்துள்ளது. தரைத்தளம் மற்றும் 4 மேல் தளங்கள் கொண்ட 60,000 சதுர அடி மினி ஐடி பார்கை ரூ.32 கோடி செலவில் கட்டப்பட்டது. வேலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஐடி, ஐடிஇஎஸ் நிறுவனங்களுக்கு இது பெரிய அளவில் உதவும்.

தமிழ்நாடு அரசு மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் பாதையில் கல்வி, வேலைவாய்ப்பு மேம்படுத்துவதையும், நீண்ட கால அடிப்படையிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகப்படியான முக்கியதுவம் கொடுத்து வருகிறது. ஒருப்பக்கம் உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்த்தாலும், புதிய தொழில்நுட்பத்தில் முதலீடுகளையும், நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதில் குறியாய் நிற்கிறது.

Share This Article English summary

Tamil Nadu CM Stalin Announces Neo TIDEL Park in Pudukottai: One Per District by 2030 for $1 Trillion Goal

Tamil Nadu CM MK Stalin unveiled Neo TIDEL Park for Pudukottai during district tour, pledging one IT park per district by 2030 to boost jobs and education. Story first published: Monday, November 10, 2025, 17:48 [IST] Other articles published on Nov 10, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *