தங்கம் Vs வெள்ளி: லாப வேட்டையில் ஜெயிக்கப்போவது எது? இதைத் தெரியாம இன்வெஸ்ட் பண்ணாதீங்க! – Allmaa

befunky-collage57-1766113413

  செய்திகள்

தங்கம் Vs வெள்ளி: லாப வேட்டையில் ஜெயிக்கப்போவது எது? இதைத் தெரியாம இன்வெஸ்ட் பண்ணாதீங்க!

News oi-Pugazharasi S By Published: Friday, December 19, 2025, 8:34 [IST] Share This Article

தங்கம் விலையானது கிட்டத்தட்ட லட்சத்தை எட்டப் போகிறது. இனிமேல் எங்கே ஏறப்போகிறது? என்று நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு. நிபுணர்களின் கணிப்பு படி, புல்லியன் சந்தையில் அசல் ஆட்டமே இனிதான் ஆரம்பமாகப் போகிறது. ஒரு பக்கம் தங்கம் பாதுகாப்பு புகலிடமாக ஜொலிக்கிறது என்றால், மறுபுறம் வெள்ளி யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் லாபத்தை அள்ளித் தரும் என கணிப்புகள் கூறுகின்றன.

நடப்பு ஆண்டில் தொடர்ந்து விலை ஏறிக் கொண்டே இருக்கும் இத்தகைய சூழலில், இப்போது வாங்குவது புத்தாலித்தனமா அல்லது விலை குறையும் வரை காத்திருக்க வேண்டுமா? என்ற குழப்பம் உங்களிடம் இருக்கிறதா? அதுமட்டுமல்ல, உங்கள் முதலீட்டில் அதிக லாபம் தரப்போவது தங்கமா அல்லது வெள்ளியா? விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் புத்திசாலித்தனமாக முடிவெடுத்து முதலீடு செய்து லாபம் ஈட்டுவது எப்படி என்பதை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே புல்லியன் சந்தையில் ஏற்றம் கண்டு வருகிறது என்றாலும், இது ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான குணம் உண்டு என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

தங்கம் Vs வெள்ளி: லாப வேட்டையில் ஜெயிக்கப்போவது எது? இதைத் தெரியாம இன்வெஸ்ட் பண்ணாதீங்க!

தங்கம் பாதுகாப்பு அம்சம்!

சர்வதேச அளவிலான போர் பதற்றங்கள் அல்லது பொருளாதார மந்த நிலை போன்ற நிச்சயமற்ற காலகட்டங்களில், தங்கம் பாதுகாப்பு புகலிடமாக திகழ்கிறது. அந்த சமயத்தில் பங்குச் சந்தை போன்ற அம்சங்கள் கடும் சரிவை சந்திக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கின்றனர். மேலும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஸ்திரத்தன்மையுடன் வைத்துள்ள, ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி வருகின்றன. இதுவும் தங்கம் விலை சரியாமல் இருக்க காரணமாக அமைகிறது.

வெள்ளியின் போக்கு!

வெள்ளியை பொறுத்த வரையில் தொழில்துறை தேவை அதிகம். தங்கம் ஒரு ஆபரண முதலீடு என்றால், வெள்ளி ஒரு தொழில்துறை சார்ந்த முதலீடு. இது சோலார் பேனல்கள், 5G தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதோடு தங்கத்தோடு ஒப்பிடும்போது வெள்ளியின் விலை குறைவு என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் வெள்ளியில் முதலீடு செய்ய முடிகிறது.

எங்கே செல்லும் இந்த பாதை?

நடப்பு ஆண்டில் தங்கம் 60%-க்கும் அதிகமான வருமானத்தை கொடுத்துள்ளது. அதே நேரம் வெள்ளி கிட்டத்தட்ட 120% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இந்த ஏற்றம் இன்னும் தொடரும் என கூறும் நிபுணர்கள், தங்கம் விலை 1,50,000 ரூபாயையும், வெள்ளி விலை 2,40,000 ரூபாயையும் எட்ட வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளனர்.

என்ன காரணங்கள்?

நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்கள், டாலரின் பலவீனம், மத்திய வங்கிகளின் கொள்முதல், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் வலுவான தொழில் துறை தேவை என பல காரணிகள் மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது ஏற்றம் கண்டது. குறிப்பாக பியூச்சர் தங்கமானது டெக்னிக்கலாக வலுவான ஏற்றத்தை உறுதி செய்துள்ளது. முக்கிய ரெசிஸ்டன்ஸ் விலைகளை உடைத்து மேலே சென்றுள்ளது.

இதேபோன்று வெள்ளியின் தேவையும் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தொழில்துறை மற்றும் ஆபரணங்கள் பிரிவில் வலுவாக இருந்து வந்தது. இதுவும் விலை ஏற்றத்துக்கு ஆதரவாக இருந்தது. தற்போது தங்கம் – வெள்ளி விகிதமானது (GSR ) விகிதமானது, 65 என்ற நிலையை நெருங்கியுள்ளது. இது வெள்ளியை விட தங்கம் விலை சிறப்பான ஏற்றம் காணலாம் என்ற நிலையை காட்டுகிறது.

இன்னும் அதிகரிக்குமா?

தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே அதிக லாபத்தை கொடுத்திருந்தாலும், இந்த ஏற்றம் இன்னும் முடிவடையவில்லை என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக நடுத்தர காலத்தில் தங்கம் மேலும் 11-13% உயர்ந்து 1,44,000 முதல் 1,50,000 ரூபாய் வரை செல்லக்கூடும். இதேபோல், வெள்ளி 2,01,400 என்ற தடையைத் தாண்டினால் ரூ. 2,40,000 வரை செல்ல வாய்ப்புள்ளதாக பிரித்வி ஃபின்மார்ட் நிறுவனத்தின் மனோஜ் குமார் ஜெயின் கூறுகிறார்.

நல்வாய்ப்பைத் தவறவிட்டீர்களா?

தங்கம், வெள்ளி விலை இவ்வளவு பெரிய விலை ஏற்றத்திற்கு பிறகு, இப்போது முதலீடு செய்வது சரியாக இருக்குமா? என்றால், வாய்ப்பு இன்னும் உள்ளது என கூறும் நிபுணர்கள், என்கின்றனர் நிபுணர்கள். பணவீக்கம் அதிகரிக்கும் சூழலில், தங்கம், வெள்ளியை வைத்திருப்பது அவசியம். வெள்ளி விலை குறையாது என்றாலும், நடுத்தர காலத்தில் தங்கம் அதிக லாபம் தரக்கூடும். ஆக சரியான ஆலோசனையுடன் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை திட்டமிடலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Gold vs. Silver in 2025: Which precious metal is the smarter investment right now?

Gold and silver are on a record-breaking streak this year. Experts predict the uptrend will persist, making it a crucial time for bullion investors. Story first published: Friday, December 19, 2025, 8:34 [IST] Other articles published on Dec 19, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *