தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்?

தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்?

  பர்சனல் பைனான்ஸ்

தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்?

Personal Finance oi-Devika Manivannan By Published: Monday, November 10, 2025, 16:12 [IST] Share This Article

மண்ணிலும் , பொன்னிலும் போடக்கூடிய பணம் எப்போதுமே வீண் போகாது என நம்முடைய முன்னோர்கள் கூறுவது உண்டு. அந்த வகையில் இந்தியாவில் பாரம்பரியமாகவே முதலீடு என்றாலே நம் நினைவிற்கு வரக்கூடியவை தங்கமும் ரியல் எஸ்டேட்டும் தான். தற்போதைய பொருளாதார சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது சிறந்ததா என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தங்கம் : இந்த ஆண்டு அதிவேக வளர்ச்சியை அடைந்து விட்டது . ஒரு பாதுகாப்பான முதலீடாக தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏறி இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. தங்க முதலீட்டில் உள்ள சாதகமே இதில் முதலீடு செய்ய பல லட்சங்கள் தேவை என்பது கிடையாது. குறைந்த விலைக்கே நம்மால் வாங்க முடியும். அதேபோல நமக்கு தேவைப்படும் போது உடனடியாக விற்று பணமாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.

தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்?

முதலீட்டு நோக்கத்தில் தங்கம் வேண்டும் என்பவர்கள் எஸ்.ஜி.பி எனப்படும் தங்க முதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்யலாம் இதில் நமக்கு கிடைக்க கூடிய லாபத்திற்கு வரி கிடையாது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக தங்க பத்திரங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டது என்பதால் செகண்டரி மார்க்கெட்டில் மட்டுமே இந்த தங்க பத்திரங்கள் கிடைக்கின்றன. அடுத்ததாக கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம் அதாவது குறைந்தது நூறு ரூபாயில் இருந்து தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பினை இவை வழங்குகின்றன.

தங்கத்தை நகையாக வாங்கும் போது தங்கத்தின் மதிப்போடு மட்டுமில்லாமல் செய்கூலி சேதாரம் என ஒரு கணிசமான தொகையை செலவிட வேண்டி இருக்கும் . அந்த பணம் உங்களுக்கு நஷ்டம்தான் . எனவே தங்கம் நகையாக தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் நகையாகவும், முதலீடாக தான் தங்கத்தை வாங்குகிறேன் என்பவர்கள் தங்க பத்திர திட்டங்களிலும் , ஈடிஎஃப்களிலும் முதலீடு செய்யலாம் .

Also Read45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

இந்த முதலீடுகளில் தங்கத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும் என்று கவலை இல்லை . மேலும் நாம் வழங்கக்கூடிய பெரும்பாலான பணம் முதலீடாகவே சென்றுவிடும். ஆனால் தங்கத்திலிருந்து நமக்கு எந்த ஒரு வருமானமும் வராது. அன்றைய நாளின் சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப தான் விலை ஏற்ற இறக்கம் என்பது இருக்கும். நகை, நாணயம், கட்டிகளாகவும் வாங்கி வைத்திருந்தால் அதை சேமிப்பதற்கும் பாதுகாப்பதற்குமே நீங்கள் ஒரு கணிசமான தொகையை செலவிட வேண்டும்.

ரியல் எஸ்டேட் : கையில் ஒரு கணிசமான தொகை இருந்தால் தான் முதலீடு செய்ய முடியும். குறிப்பிட்ட தொகையை வழங்கி விட்டு மீதமுள்ள பணத்திற்கு வங்கியில் கடன் வாங்கி கொள்ளலாம். ரியல் எஸ்டேட்டில் உங்களுக்கு இரண்டு விதமான வருமானம் வரும். ஒன்று அதை நீங்கள் வாடகைக்கு விடுத்து வாடகை வருமானம் பார்க்கலாம், மற்றொன்று காலப்போக்கில் அந்த சொத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே வரும்.

அடுத்த ஏழு முதல் 10 ஆண்டுகளுக்கு இந்த பணம் எனக்கு தேவையில்லை இதை முதலீடு செய்து நான் ஒரு கணிசமான வருமானம் பார்க்க விரும்புகிறேன் என்பவர்கள் ரியல் எஸ்டேட் முதலீடுக்கு செல்லலாம். ஆனால் ரியல் எஸ்டேட் முதலீடுகளை உடனடியாக நீங்கள் நினைத்த நேரத்தில் விற்று பணமாக்க முடியாது. இதில் பல்வேறு ஆவண சரிபார்ப்பு உள்ளிட்ட சிக்கல்கள் இருக்கின்றன எனவே அவற்றை கவனமாக கையாள்வது நல்லது. முக்கியமாக கவனிக்க வேண்டியது எந்த இடத்தில் வாங்குகிறோம் , அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடையக்கூடிய இடமாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

Recommended For Youதங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் - வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்

தங்கம் Vs ரியல் எஸ்டேட் : தற்போதைய சூழலில் தங்கமா ரியல் எஸ்டேட்டா என பார்க்கையில் என் கையில் குறைந்த அளவு தான் பணம் இருக்கிறது அதை தான் முதலீடு செய்ய விரும்புகிறேன் என்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம் . அதாவது இந்த பணம் எப்போது வேண்டுமானாலும் எனக்கு தேவைப்படும் என்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

என்னிடம் ஒரு கணிசமான பணம் இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளுக்கு அது எனக்கு தேவை படாது என்பவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம் . இல்லையென்றால் உங்கள் கையில் இருக்கும் பணத்தில் பாதியை தங்கத்திற்காகவும் மீதமுள்ள ஒரு பகுதியை ஒரு சொத்து முதலீடுக்காகவும் என பிரித்தும் முதலீடு செய்யலாம் .

ஆனால் இவற்றை செய்வதற்கு முன்னர் உங்களுக்கென எமர்ஜென்சி ஃபண்ட் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதாவது உங்களுடைய குடும்பத்தின் மாதாந்திர செலவின தொகையில் ஆறு மாதத்திற்கான தொகையை நீங்கள் கட்டாயம் எமர்ஜென்சி ஃபண்டாக வைத்துக் கொள்ள வேண்டும் , அடுத்ததாக வீட்டில் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு , வீட்டில் வருமானம் ஈட்டும் நபருக்கு டெர்ம் இன்சூரன்ஸ் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். இல்லை என்றால் முதலில் இதனை செய்துவிட்டு அதன் பின்னர் முதலீட்டுக்கு செல்லலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share This Article English summary

Gold vs Real estate: Which is the best investment option at current scenario?

Gold, real estate both investments have given massive returns to the investors, But in this current situation let us check which is best for investment. Story first published: Monday, November 10, 2025, 16:12 [IST] Other articles published on Nov 10, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *