தங்கம், வெள்ளி விலை: 24 மணிநேரத்தில் 3 முறை உயர்வு!! இந்த வாரத்துக்குள் பெரிய டிவிஸ்ட் இருக்கு!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 6, 2026, 10:05 [IST] Share This Article
அமெரிக்கா வெனிசுலா மீது நடத்திய ராணுவ நடவடிக்கை மற்றும் அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் வெளியிட்டு வரக்கூடிய அறிவிப்புகள் காரணமாக உலக அளவில் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தங்கம், வெள்ளி விலையை பெருமளவு உயர்த்தி இருக்கிறது.
சென்னையில் 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று முறை தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வு கண்டிருக்கின்றன. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று காலை, மாலை என இருவேளையும் உயர்ந்தது. இன்று காலையில் மீண்டும் விலை உயர்ந்திருக்கிறது . நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து 12,760 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 12,830 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை இன்று 560 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது 1,02,080 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 1,02,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 24 மணி நேரத்தில் கிராமுக்கு 230 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது ஒரு சவரனுக்கு 1840 விலை உயர்ந்திருக்கிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 77 ரூபாய் உயர்ந்து 13,997 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,11,976 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 50 ரூபாய் விலை உயர்ந்து 10,700 ரூபாய்க்கும் ஒரு சவரன் 85,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Also Read
தங்கத்தை கொடுத்து கடன் வாங்கலாம் ஆனா வட்டி கட்ட தேவையில்லை!! இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா?
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நேற்று 266 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளி ஒரு கிராம் இன்று 271 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு 14 ரூபாய் விலை உயர்ந்துள்ளது, ஒரு கிலோ 14000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அமெரிக்கா செய்த செயலால் உலகம் முழுவதுமே தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பல மடங்கு உயர்வு கண்டிருக்கின்றன . சர்வதேச சந்தையில் ஸ்பாட் கோல்டு விலையே இதற்கு சாட்சி. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,446 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விட 3.09% அதிகமாகும். வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 78.86 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று 8.37% அதிகமாகும்.
Recommended For You
பொங்கல் பரிசு தொகையில் டிவிஸ்ட் வைத்த அரசு: உங்களிடம் இந்த ரேஷன் கார்டு இருந்தா பணம் கிடைக்காது!!
சர்வதேச சந்தையில் இப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் இனிவரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலை உயரும். இந்திய எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை இன்று, 1,38,645 ரூபாயை கடந்தது . வெள்ளியை பொருத்தவரை 2,50,200 ரூபாய் உச்சத்தை இன்று தொட்டிருக்கிறது. அதாவது எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் பியூச்சர்ஸ் கான்டிராக்டில் விலை உயர்கிறது என்றால் முதலீட்டாளர்கள் இவற்றின் விலை உயரும் என கணித்து அதிக மதிப்பு கொண்ட கான்டிராக்டுகளை வாங்குகிறார்கள் என அர்த்தம்.
வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கை இதற்கு உலக நாடுகளின் எதிர்வினை, வேறு சில நாடுகள் மீது அமெரிக்கா இதே போன்ற ராணுவ நடவடிக்கை எடுக்க போகிறதா என்பதை பொறுத்து வெள்ளி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும். இந்த வார இறுதிக்குள் எதுவாக இருந்தாலும் தெரிந்துவிடும்.
Share This Article English summary
Gold and Silver rate increased 3 times within 24 hours in Chennai
Gold and silver prices increase both in global and local markets. In Chennai the gold rate has increased 3 times within 24 hours. Story first published: Tuesday, January 6, 2026, 10:05 [IST] Other articles published on Jan 6, 2026
