தங்கம், வெள்ளி விலை: ஒரு வாரத்தில் நடந்த டிவிஸ்ட்..!! ரூட்டு மாறாம இருந்த நிம்மதி..!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, February 6, 2026, 10:03 [IST] Share This Article
ஆபரண தங்கம் விலை சென்னையில் இரண்டாவது நாளாக குறைந்து பொதுமக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது. இந்த இரண்டு வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 6,240 ரூபாய் விலை குறைந்திருக்கிறது வெள்ளியை பொருத்தவரை ஒரு கிலோவுக்கு 40,000 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது.
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இந்த வெள்ளிக்கிழமை வரையிலான இந்த ஒரு வார காலத்தில் மட்டும் சென்னை விலை பல ஏற்ற இறக்கங்களை கண்டிருக்கிறது. சென்னையில் கடந்த வாரம் வியாழக்கிழமை என்று ஆபரண தங்கத்தின் விலை வரலாற்று உச்சபட்ச விலையை தொட்டது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 16,800 ரூபாய் உச்சம் தொட்டது. ஒரு சவரன் 1,30,000 ரூபாய் கடந்து விற்பனை ஆனது.

ஆனால் அதன் பின்னர் அதாவது கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, சனி மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்களிலும் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு தலா 950 ரூபாய் என தடாலடியாக சரிந்தது. தங்கம் விலை இனி சரியும் என எண்ணுவதற்குள் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்களும் மீண்டும் விலை உயர தொடங்கியது. செவ்வாய்க்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 320 ரூபாய் உயர்ந்து 14,270 ரூபாய்க்கும், புதன்கிழமை அன்று ஒரு கிராம் 630 ரூபாய் உயர்ந்து 14,090 ரூபாய் என்றும் மீண்டும் விலை ஏறு முகத்தை நோக்கி திரும்பியது.
தங்கம் விலை உயர தொடங்கி விட்டதே விலை ,குறைந்திருந்த போதே வாங்கி இருக்கலாமே, மேலும் விலை குறையுமா என காத்திருந்தது தவறு என மக்கள் நினைப்பதற்குள் நேற்றிலிருந்து மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கியிருக்கிறது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 550 ரூபாய் விலை குறைந்து 14,320 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் கிராமுக்கு 200 ரூபாய் சரிந்து 14,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Also Read
தங்கம் விலையை பத்தி கவலைப்படாதீங்க..! இத ஃபாலோ பண்ணா உங்க பணம் பெருகும்- முகேஷ் அம்பானி அறிவுரை
அதாவது கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரையிலான ஏழு வர்த்தக நாட்களில் ஐந்து நாட்கள் தங்கத்தின் விலை சரிந்திருக்கிறது, இரண்டு நாட்கள் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று 1, 14,560 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 1,12,960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
24 கேரட் தங்கம் சென்னையில் இன்று ஒரு கிராம் 218 ரூபாய் குறைந்து 15,404 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் 1844 ரூபாய் குறைந்து 1,23,232 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,100 க்கும் ஒரு சவரன் 96 ,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Recommended For You
இனி தங்கம் வாங்க இந்தியர்கள் துபாய்க்கு படையெடுக்க போறாங்க!! விதிகளை தளர்த்திய மத்திய அரசு!!
வெள்ளியை பொருத்தவரை இன்றைய தினம் விலை சரிவடைந்திருக்கிறது .நேற்று 300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று 20 ரூபாய் சார்ந்து 280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று இன்று ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு 40 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 40 ஆயிரம் ரூபாயும் விலை குறைந்திருக்கிறது. வெள்ளியின் விலை கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரையிலான ஏழு வர்த்தக நாட்களில் ஆறு நாட்கள் விலை சரிந்தும் ஒரு நாள் விலை உயர்ந்தும் காணப்பட்டிருக்கிறது. கடந்த 29ஆம் தேதி அன்று இருந்த 4.25லட்சம் ரூபாய் உச்சபட்ச விலையுடன் ஒப்பிடும்போது வெள்ளியின் விலை ஒரு கிலோ இன்றைய தினம் 1, 45,000 ஆயிரம் ரூபாய் சரிந்து இருக்கிறது.
Share This Article English summary
Gold and Silver rate in roller coaster mode: Here is how much the price changed since last week.
After two days of increasing gold and silver rate is dropping for the second consecutive day. Here is how much one gram gold and silver cost in Chennai today. Story first published: Friday, February 6, 2026, 10:03 [IST] See More On: gold, silver, investment, தங்கம், வெள்ளி Other articles published on Feb 6, 2026
