தங்கம் விலை தொடர்ந்து உயர போகிறதா? திருமணத்திற்கு நகை வாங்க வேண்டியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Wednesday, February 25, 2026, 10:31 [IST] Share This Article
இந்தியாவில் தற்போது திருமண சீசன் என்பதால் தங்கம் விலை உயர்ந்தாலும் மக்கள் தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஜனவரி மாதத்தில் உச்சத்தை தொட்ட தங்கம் பிப்ரவரி மாதம் முழுவதும் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.
சென்னையில் ஜனவரி 29ஆம் தேதி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1.33 லட்சத்தை தொட்டது. அதன் பின்னர் சரிந்த தங்கம் விலை 1.13 லட்சம் முதல் 1.20 லட்சம் வரை விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. இதனால் தங்கம் விலை இனி ஏறுமா, இல்லை இன்னும் இறங்குமா இப்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் மக்களிடையே இருக்கிறது.

குறிப்பாக திருமண நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் நிலைமை இன்னும் மோசம். இன்று விலை குறைந்துள்ளதே மேலும் ஒரு நாள் காத்திருக்கலாமா என இருந்தால் அடுத்த நாள் விலை கூடி விடுகிறது. விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பதால் நிறைய தங்கம் வாங்க வேண்டியவர்களுக்கு இன்னும் விலை குறைந்தால் மேலும் பல ஆயிரங்களை சேமிக்கலாமே என எண்ணுகின்றனர். அப்படி விலை குறையட்டும் என காத்திருக்கலாமா அல்லது இப்போதே நகை வாங்கி விட வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக இன்றைய தங்கம் விலை நிலவரத்தை பார்க்கலாம்.
சென்னையில் கடந்த சனிக்கிழமை தொடங்கி இன்று வரையிலான நான்கு வர்த்தக நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக தான் இருக்கிறது. இந்த மாதத்தில் தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் ஏறுமுகமாக இருப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்பு ஒரு நாள் விலை ஏறினால் ஒரு நாள் விலை குறையும். ஆனால் அந்த போக்கு மாறியுள்ளது.
நேற்று 14,890 ரூபாய்க்கு விற்பனையான 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று ஒரு கிராம் 40 ரூபாய் விலை உயர்ந்து 14 , 930 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று 1,19,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 400 ரூபாய் விலை உயர்ந்து 1,49,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Also Read
தங்க நகை வாங்குவோருக்கு அரசு எச்சரிக்கை!! இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்!!
ஆபரண தங்கத்தை பொருத்தவரை கடந்த நான்கு வர்த்தக நாட்களிலும் ஒரு கிராமுக்கு 510 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது ஒரு சவரன் என பார்க்கும்போது 4,080 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது. இனிவரும் நாட்களில் தங்கம் விலை உயர்வு குறையுமா என்ற குழப்பம் மக்களிடையே இருக்கிறது. இந்தியாவில் தங்கம் விலை நிலவரம் என்பது சர்வதேச சூழல்களை பொறுத்துதான் மாறுபடுகிறது. அமெரிக்கா அரசாங்கம் எடுக்கக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையும் தங்கத்தின் விலை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வரி தொடர்பான டிரம்பின் அறிவிப்புகள், ஈரான் அமெரிக்கா புவிசார் பதற்றங்கள் ஆகியவை தான் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலையை மாற்ற போகின்றன. ஏற்கனவே தன்னுடைய இறக்குமதி வரிகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் டிரம்ப் அதிருப்தியில் இருக்கிறார். இதனால் தினமும் ஒரு புதிய வரி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் போர் தொடுப்பேன் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைக்கு முதலீட்டாளர்கள் காத்திருக்கும் மனநிலையில் இருக்கின்றனர். அதாவது வரி உயர்வு, ஈரான் மீது தாக்குதல் ஆகியவை நிகழ்ந்தால் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என சர்வதேச முதலீட்டாளர்கள் wait and watch அணுகுமுறையை கையில் எடுத்துள்ளனர். எனவே தான் தங்கம் விலைஏறுமுகமாக இருந்தாலும் பெரிய அளவிலான விலை உயர்வு இல்லை. வீட்டில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் மேலும் விலை குறையும் என காத்திருக்காமல் இப்போதே வாங்கி கொள்ளுங்கள் என நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். ஏனெனில் டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் வரியை உயர்த்தலாம் அல்லது ஈரான் மீது தாக்குதலை நடத்தலாம் என்பதால் விலை குறையும் என காத்திருக்க வேண்டாம் என்கின்றனர்.
Recommended For You
தங்கம்: பழசுக்கு புதுசு வாங்கலாமா? பணமாக மாற்றி கொள்ளலாமா? எது பெஸ்ட் ?
ஆபரண தங்கம் மட்டுமில்லாமல் இன்று 24 கேரட் ஆபரண தங்கமும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 16,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் 1,30,304 ரூபாய்க்கும், 10 கிராம் 1,62,880 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 35 ரூபாய் விலை உயர்ந்து 12,765 ரூபாய்க்கும் ஒரு சவரன் 280 விலை உயர்ந்து 1,02,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் விலை குறைந்த வெள்ளி இன்றைய தினம் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 290 ரூபாய்க்கு விற்பனையான வெள்ளி இன்று ஐந்து ரூபாய் விலை உயர்ந்து 295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ விலை 5000 ரூபாய் உயர்ந்து 2.95 லட்சத்துக்கு விற்பனையாகிறது. திருமணத்திற்கு வெள்ளி வாங்க வேண்டியவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Gold rate in Chennai increases for fourth consecutive day, silver rate also surged
Gold rate in Chennai increases for fourth consecutive day, experts says that people should use this as an opportunity to buy gold instead of waiting. Story first published: Wednesday, February 25, 2026, 10:09 [IST] See More On: gold, silver, investment, தங்கம், வெள்ளி
