தங்கம் விலை உயர்வால் மக்கள் கதறல்.. இனி ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தானா..? மார்கெட்டில் என்ன நடக்கிறது..?!

gold23-1770612049

  செய்திகள்

தங்கம் விலை உயர்வால் மக்கள் கதறல்.. இனி ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தானா..? மார்கெட்டில் என்ன நடக்கிறது..?!

News oi-Prasanna Venkatesh By Published: Monday, February 9, 2026, 10:13 [IST] Share This Article

இன்று வார்த்தின் முதல் வர்த்தக நாளான சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,982 ஆக வர்த்தகமாகிறது, இன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.251 உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,650 கிராமுக்கு ரூ.230 உயர்ந்துள்ளது. மேலும் தங்கம் விலை உயர்வால் மக்கள் தற்போது 18 காரட் தங்க நகைகளை வாங்க துவங்கியுள்ளனர். இதனால் 18 காரட் தங்கம் விலையும் மக்களுக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ரூ.12,520 ஆக உள்ளது.

தங்க விலை தொடர்ந்து உயரும் போக்கில் இருப்பதால், திருமணம், முதலீடு, பண்டிகை வாங்குதல் திட்டமிடுபவர்கள் இப்போதே கவனமாக இருப்பது நல்லது.

தங்கம் விலை உயர்வால் மக்கள் கதறல்.. இனி ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தானா? மார்கெட்டில் என்ன நடக்கிறது?

தங்கம் விலை உள்நாட்டு சந்தையிலும், வெளிநாட்டு சந்தையிலும் தங்கம் விலை உயர்வதற்கான அடிப்படை காரணங்கள் ஃபெடரல் ரிசர்வ்-வின் சுதந்திரம் குறித்த கேள்வியும், அச்சமும் தொடர்ந்து அதிகரித்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. இதேபோல் தங்கம் வாங்குவதில் சீனா-வின் நடவடிக்கை மற்றும் அமெரிக்கா – ஈரான் மத்தியிலான அணுஆயுத பேச்சுவார்த்தையும் தங்கம், வெள்ளி விலையை தாறுமாறாக உயர்த்தப்போகிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (09 பிப்ரவரி 2026) தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலைகள் பின்வருமாறு உள்ளன. விலைகள் 1 கிராம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன (மாற்றங்கள் GST, செய்கூலி போன்றவற்றைத் தவிர்த்து உள்ளூர் சந்தை அடிப்படையில் சற்று வேறுபடலாம்).

Also Readதங்கம் விலை மீண்டும் எகிறியது.. வாரத்தின் முதல் நாளே இப்படியா..? தங்கம் விலை மீண்டும் எகிறியது.. வாரத்தின் முதல் நாளே இப்படியா..?

சென்னை
சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,982-ஆகவும், 22 கேரட் ரூ.14,650-ஆகவும், 18 கேரட் ரூ.12,520-ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராம் ரூ.300 (1 கிலோ ரூ.3,00,000) என்ற அளவில் நிலையாக இருக்கிறது. பிளாட்டினம் 10 கிராம் ரூ.60,910-ஆக பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவில் தங்க விலை சற்று உயரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை
மும்பையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,884-ஆகவும், 22 கேரட் ரூ.14,560-ஆகவும், 18 கேரட் ரூ.11,913-ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராம் ரூ.300 (1 கிலோ ரூ.3,00,000) என்ற நிலையில் உள்ளது. பிளாட்டினம் 10 கிராம் ரூ.60,910-ஆக நிலையான விலையில் வர்த்தகமாகிறது.

டெல்லி
டெல்லியில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,899-ஆகவும், 22 கேரட் ரூ.14,575-ஆகவும், 18 கேரட் ரூ.11,928-ஆகவும் பதிவாகியுள்ளது. வெள்ளி 1 கிராம் ரூ.300 (1 கிலோ ரூ.3,00,000) என்ற அளவில் உள்ளது. பிளாட்டினம் 10 கிராம் ரூ.60,910-ஆக மற்ற நகரங்களுடன் ஒத்த விலையில் உள்ளது.

கொல்கத்தா
கொல்கத்தாவில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,884-ஆகவும், 22 கேரட் ரூ.14,560-ஆகவும், 18 கேரட் ரூ.11,913-ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராம் ரூ.300 (1 கிலோ ரூ.3,00,000) என்ற நிலையில் இருக்கிறது. பிளாட்டினம் 10 கிராம் ரூ.60,910-ஆக நிலையாக உள்ளது.

Recommended For Youநான் தங்கம் மட்டும் வாங்கவே மாட்டேன்: தங்கத்தில் முதலீடு செய்யாமலேயே உலக பணக்காரரான வாரன் பஃபெட்..!!நான் தங்கம் மட்டும் வாங்கவே மாட்டேன்: தங்கத்தில் முதலீடு செய்யாமலேயே உலக பணக்காரரான வாரன் பஃபெட்..!!

பெங்களூர்
பெங்களூருவில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,884-ஆகவும், 22 கேரட் ரூ.14,560-ஆகவும், 18 கேரட் ரூ.11,913-ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராம் ரூ.300 (1 கிலோ ரூ.3,00,000) என்ற அளவில் உள்ளது. பிளாட்டினம் 10 கிராம் ரூ.60,910-ஆக மற்ற முக்கிய நகரங்களுடன் ஒரே விலையில் வர்த்தகமாகிறது.

ஹைதராபாத், கேரளா, புனே
ஹைதராபாத், கேரளா மற்றும் புனே ஆகிய நகரங்களில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,884-ஆகவும், 22 கேரட் ரூ.14,560-ஆகவும், 18 கேரட் ரூ.11,913-ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராம் ரூ.300 (1 கிலோ ரூ.3,00,000) என்ற நிலையில் உள்ளது. பிளாட்டினம் 10 கிராம் ரூ.60,910-ஆக நிலையான விலையில் உள்ளது.

வடோதரா மற்றும் அகமதாபாத்
வடோதரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,889-ஆகவும், 22 கேரட் ரூ.14,565-ஆகவும், 18 கேரட் ரூ.11,918-ஆகவும் சற்று உயரமாக உள்ளது. வெள்ளி 1 கிராம் ரூ.300 (1 கிலோ ரூ.3,00,000) என்ற அளவில் உள்ளது. பிளாட்டினம் 10 கிராம் ரூ.60,910-ஆக மற்ற நகரங்களைப் போலவே நிலையாக இருக்கிறது.

Share This Article English summary

Gold, silver rates for today in India: Check 24K, 22k, 28k gold rates, Silver rates and platinum rates in retail Market

Gold, silver rates for today in India: Check 24K, 22k, 28k gold rates, Silver rates and platinum rates in retail Market Story first published: Monday, February 9, 2026, 10:13 [IST] See More On: gold, silver, investment, தங்கம், வெள்ளி Other articles published on Feb 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *