தங்கத்தை ஒப்படைத்த தங்கத்துக்கு பரிசு!! நேரில் அழைத்து பாராட்டி ரஜினிகாந்த சொன்ன அந்த ஒரு வார்த்தை!!

rajini5-1770119238

  செய்திகள்

தங்கத்தை ஒப்படைத்த தங்கத்துக்கு பரிசு!! நேரில் அழைத்து பாராட்டி ரஜினிகாந்த சொன்ன அந்த ஒரு வார்த்தை!!

News oi-Devika Manivannan By Published: Tuesday, February 3, 2026, 17:18 [IST] Share This Article

தற்போது தங்கம் விற்கும் விலைக்கு சாலையில் உங்களிடம் உங்களுக்கு தங்கம் கிடைத்தால் என்ன செய்வீர்கள் மனது அலைபாய தான் செய்யும். ஆனால் நேர்மை என ஒன்று இருக்கிறது அல்லவா. அதனை தேர்ந்தெடுத்து நேர்மையின் அடையாளமாகவும் அனைவருக்கும் முன் உதாரணமாகவும் மாறி இருக்கிறார் தூய்மை பணியாளர் பத்மா.

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பத்மா. இவர் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். தி.நகரின் வண்டிக்காரன் பகுதியில் கடந்த மாதம் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையில் ஒரு பை கிடந்திருக்கிறது. அதனை அவர் எடுத்து பார்த்த போது 45 பவுன் தங்க நகைகள் இருந்தது. உடனடியாக அதனை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார்.

தங்கத்தை ஒப்படைத்த தங்கத்துக்கு பரிசு!! நேரில் அழைத்து பாராட்டி ரஜினிகாந்த சொன்ன அந்த ஒரு வார்த்தை!!

விசாரணையில் அந்த தங்க நகைகள் நங்கநல்லூரை சேர்ந்த பரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. நகையை காவல்துறையினர் உரியவரிடம் ஒப்படைத்தனர். அதே வேளையில் நேர்மையுடன் 45 பவுன் தங்க நகையை கொண்டு வந்து ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவையும் பாராட்டினர். முதலமைச்சர் மு க ஸ்டாலினும் தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில் தன்னுடைய நேர்மைக்கு மிகப்பெரிய பரிசு பெற்றிருக்கிறார் தூய்மை பணியாளர் பத்மா. நடிகர் ரஜினிகாந்த் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி ஒரு பரிசையும் வழங்கி இருக்கிறார். தூய்மை பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து குடும்பத்தினரோடு அவரை நேரில் அழைத்த நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கி பாராட்டி இருக்கிறார்.

தங்கத்தை ஒப்படைத்த தங்கத்துக்கு பரிசு!! நேரில் அழைத்து பாராட்டி ரஜினிகாந்த சொன்ன அந்த ஒரு வார்த்தை!!

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற செயல்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணத்தை அனைவரிடமும் விதைக்கும் என பலரும் பாராட்டி வருகின்றனர். தூய்மை பணியாளர் பத்மாவும் அவருடைய நேர்மையும் கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ந்து இருக்கிறது நடிகர் ரஜினிகாந்தின் செயல்.

Also Readஇனி தங்கம் வாங்க இந்தியர்கள் துபாய்க்கு படையெடுக்க போறாங்க!! விதிகளை தளர்த்திய மத்திய அரசு!!இனி தங்கம் வாங்க இந்தியர்கள் துபாய்க்கு படையெடுக்க போறாங்க!! விதிகளை தளர்த்திய மத்திய அரசு!!

அனைவரும் வேகமாக இருக்கக்கூடிய இந்த உலகில் இன்னும் மனித நேயமும் நேர்மையும் நீடித்து நிலைத்து நிற்கிறது என்ற நம்பிக்கையை விதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது பத்மாவின் செயல். நடிகர் ரஜினிகாந்த் பத்மாவிற்கு தங்க சங்கிலி கொடுத்து தட்டிக் கொடுத்து பாராட்டியதோடு “நீங்கள் செய்தது பெரிய சேவை அனைவரும் உங்களைப் போன்றே நல்ல மனதோடு இருக்க வேண்டும். உங்களுடைய இந்த புண்ணியம் எல்லாம் உங்களுடைய பேரப்பிள்ளைகளுக்கு பெரிய சந்தோஷமாக திரும்ப கிடைக்கும்” என மனப்பூர்வமாக வாழ்த்தினாராம்.

Recommended For Youமீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை!! பாபா வாங்கா சொன்னது அப்படியே நடந்திடும் போல இருக்கே!!மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை!! பாபா வாங்கா சொன்னது அப்படியே நடந்திடும் போல இருக்கே!!

தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மை , நகைகளை இழந்த குடும்பத்திற்கு அவற்றை மீட்டு தந்திருக்கிறது. எந்த தருணத்திலும் நேர்மையை கைவிட கூடாது என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்திடம் பாராட்டு பெற்றதன் மூலம் பத்மாவின் குடும்பமே வாழ்நாளில் மறக்க முடியாத நாளை பெற்றுள்ளனர்.

Share This Article English summary

Rajinikanth Honors Honest Sanitation Worker with Gold Chain Gift

Rajinikanth met Chennai sanitation worker Padma at his residence and gifted her a gold chain for returning 45 sovereigns of gold jewelry she found in a trash heap in T Nagar. Story first published: Tuesday, February 3, 2026, 17:18 [IST] Other articles published on Feb 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *