தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் அங்கீகரித்த ஆர்பிஐ: ஏப்ரல் முதல் வரப்போகும் பெரிய மாற்றம்!! – Allmaa

silverf8-1765881621

  செய்திகள்

தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் அங்கீகரித்த ஆர்பிஐ: ஏப்ரல் முதல் வரப்போகும் பெரிய மாற்றம்!!

News oi-Devika Manivannan By Published: Tuesday, December 16, 2025, 16:12 [IST] Share This Article

இந்தியர்கள் தங்கத்தை நகையான வாங்குவதன் பின்னணியில் மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது . ஏனெனில் ஒரு அவசர தேவை என்றால் உடனடியாக தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் வேறு எந்த ஒரு சொத்தையும் இவ்வளவு வேகமாக நம்மால் பணமாக மாற்ற முடியாது. கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் தங்கத்தை நீங்கள் பணமாக மாற்ற முடியும் .

தற்போது தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது . இந்த சூழலில் தான் இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் போலவே வெள்ளியையும் அடகு வைத்து மக்கள் கடனாக பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியர்கள் தங்கத்தை போலவே வெள்ளியையும் அடமானமாக வைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற முடியும்.

தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் அங்கீகரித்த ஆர்பிஐ: ஏப்ரல் முதல் வரப்போகும் பெரிய மாற்றம்!!

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னரே வந்துவிட்டது இருந்தாலும் வெள்ளியின் விலை உயர்ந்து வரக்கூடிய இந்த சூழலில் வெள்ளியையும் அடகு வைக்கலாம் என்று அறிவிப்பு இந்த சந்தையிலே பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தங்கத்துக்கு நிகரான ஒரு அங்கீகாரம் தற்போது வெள்ளிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

மக்கள் வெள்ளி நகை மற்றும் வெள்ளி நாணயங்களை அடமானமாக வைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற முடியும் ஆனால் சில்வர் ஈடிஎஃப்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், வெள்ளி கட்டிகளை அடமானமாக வைக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது . தற்போது இந்தியர்களிடம் தங்கத்தைப் போலவே வெள்ளியும் நகைகளாகவும் நாணயங்கள் ஆகவும் பொருட்களாகவும் வீடுகளில் குவிந்து கிடக்கின்றன . இதனை வெளிக்கொண்டு வரவேண்டும், ஒரு முறையான கடன் அணுகலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ரிசர்வ் வங்கி இப்படி ஒரு அறிவிப்பை கொண்டு வந்திருக்கிறது.

தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் அங்கீகரித்த ஆர்பிஐ: ஏப்ரல் முதல் வரப்போகும் பெரிய மாற்றம்!!

இனி தங்கத்தைப் போலவே மக்கள் வெள்ளியும் ஒரு முக்கியமான சொத்தாக பார்க்க வேண்டும் என்பதற்கான ஒரு அங்கீகாரமாக தான் வெள்ளியையும் அடமானம் வைத்து கடன் வாங்கலாம் என்ற அறிவிப்பு பார்க்கப்படுகிறது. தற்போது தங்கத்தின் விலை உச்சமடைந்து வரக்கூடிய சூழலில் மக்கள் அதற்கு மாற்றாக வெள்ளியை நோக்கி வருவார்கள்.

Also Readவரலாற்று உச்சத்தில் தங்கம், வெள்ளி..! விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமா அரசு? நிதி அமைச்சகம் பதில்வரலாற்று உச்சத்தில் தங்கம், வெள்ளி..! விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமா அரசு? நிதி அமைச்சகம் பதில்

ஏனென்றால் தற்போது வெள்ளியையும் அடமானமாக வைத்து கடன் வாங்கலாம் என்பதால் மக்களின் கவனம் இனி தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் மீதும் விழும். இது இந்தியாவில் வெள்ளி வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . வெள்ளியை அடமானமாக வைத்து கடன் வாங்குவது இந்தியாவில் ஏற்கனவே பலகாலமாக நடைமுறையில் இருக்கிறது . ஆனால் அது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குபடுத்தப்பட்ட வரைமுறைகளுக்குள் இத்தனை காலம் இல்லை . தற்போது தான் அது ஒழுங்கு படுத்தப்பட்ட ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் வெள்ளிக்கான கடன் தந்தையும் வேகமாக வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது . இந்தியாவில் 2010 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 15 ஆண்டுகளில் 29 ஆயிரம் டன்கள் வெள்ளி நகைகளும் 4000 டன்கள் வெள்ளி நாணயங்களும் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள்தான் இவற்றை அதிகமாக வாங்கி இருக்கிறார்கள்.

Recommended For YouPF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!!PF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!!

சுய தொழில் தொடங்க கடன் வேண்டும், குறுகிய காலத்திற்கு ஒரு கணிசமான தொகை வேண்டும் என இருப்பவர்களுக்கு தங்கள் கைவசம் தங்கம் இல்லையென்றால் கூட வெள்ளியை அடமானமாக வைத்து எளிதாக கடன் வாங்கி விடலாம். வங்கிகள் , கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கத்தை போலவே வெள்ளியையும் அடமானமாக பெற்று கடன் வாங்கலாம். வெள்ளி நகைகள் என்றால் 10 கிலோ வரையிலும், வெள்ளி நாணயங்கள் என்றால் 500 கிராம் வரையிலும் அடகு வைத்து கடன் பெறலாம்.

Share This Article Story first published: Tuesday, December 16, 2025, 16:12 [IST] Other articles published on Dec 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *