தங்கத்திலும் கை வைக்க ஆரம்பித்த Gen Z தலைமுறை!! டியர் 90ஸ் கிட்ஸ் உஷாரா இருங்க!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 15, 2026, 9:34 [IST] Share This Article
உலகமே தற்போது Gen Z தலைமுறையினர் குறித்து தான் பரபரப்பாக பேசி வருகிறது. 1997 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களை Gen Z ஜென் ஸீ தலைமுறையினர் என அழைக்கிறோம். தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் அதிகமான எண்ணிக்கையில் ஜென் ஸீ தலைமுறையினர் தான் இருக்கின்றனர்.
Gen Z தலைமுறையினரின் அணுகுமுறையே முந்தைய தலைமுறையோடு ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபடுகிறது. முதலில் தன்னுடைய நலன் என்பதை முன்னிலைப்படுத்தி தான் ஜென் ஸீ தலைமுறையினர் செயல்படுகின்றனர். வேலை வாய்ப்பு ,படிப்பு, செலவினம், சேமிப்பு என ஒவ்வொரு பிரிவிலும் ஜென் ஸீ தலைமுறையினரின் செயல்பாடு அனைவரையும் பேச வைக்கிறது. இந்நிலையில் தங்கத்தை இவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த ஒரு ஆய்வு வெளியாகியிருக்கிறது.

பாரம்பரியமாகவே இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது அதீத காதல் உண்டு. நம்முடைய மூதாதையர் தொடங்கி தற்போது உள்ள தலைமுறைகள் வரை கையில் பணம் சேர்ந்தாலே ]தங்கத்தை நகையாக வாங்கி வைத்து விடுவார்கள். குடும்பமாகவே தங்கத்தை சேமிப்போம். தற்போது உள்ள ஜென் ஸீ தலைமுறையினர் தங்கத்தை எப்படி வாங்குகிறார்கள் என்பது குறித்த ஆய்வினை Smytten PulseAI என்ற அமைப்பு நடத்தி இருக்கிறது.
இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஜென் ஸீ இளைஞர்கள் மத்தியிலும் தங்கத்திற்கு முக்கியத்துவம் இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் தங்கத்தை அவர்கள் வாங்கும் முறை முந்தைய தலைமுறையோடு ஒப்பிடும்போது மாற்றம் அடைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 5000 பேரிடம் இந்த அமைப்பு ஆய்வு நடத்தி இருக்கிறது.
Also Read
பழைய தங்க நகை கொடுத்து புதுசு வாங்க போறீங்களா? – இந்த விஷயங்கள கவனிக்கலனா ஏமாந்து போய்டுவீங்க
அவர்களில் ஏராளமானவர்கள் தங்கம் வாங்குவது ஒரு ஸ்மார்ட்டான தேர்வு என கூறியிருக்கிறார்கள். அதாவது குடும்ப பாரம்பரியமாக தங்கத்தை வாங்க கூடாது அது நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற அணுகுமுறைக்கு ஜென் ஸீ தலைமுறையினர் வந்திருக்கின்றனர். உங்கள் கையில் தற்போது 25 ஆயிரம் ரூபாய் இருக்கிறது எதில் முதலீடு செய்வீர்கள் என கேட்டதற்கு 62% பேர் தங்கத்தில் முதலீடு செய்வோம் என கூறியிருக்கிறார்கள். 15 சதவீதம் பேர் மியூச்சுவல் ஃபண்டுகளிலும், 13 சதவீதம் பேர் ஃபிக்சட் டெபாசிட்டுகளிலும் முதலீடு செய்வோம் என்றும் கூறியிருக்கின்றனர். 7 சதவீதம் பேர் பங்குச்சந்தையிலும் 2 சதவீதம் பேர் கிரிப்டோவிலும் முதலீடு செய்வோம் என தெரிவித்திருக்கின்றனர்.
Recommended For You
30,000 டன் தங்க புதையல்!! அதுவும் இந்தியாவில்!! ஆடிப் போன உலக நாடுகள்..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
நிலையற்ற பொருளாதார சூழல்களில் எந்த முதலீடு உங்களுக்கு பாதுகாப்பு தரும் என்ற கேள்விக்கு 66% பேர் தங்கம் தான் பாதுகாப்பு தருகிறது என பதில் அளித்து இருக்கிறார்கள். அந்த வகையில் ஜென் ஸீ தலைமுறையினர் மத்தியிலும் தங்கம் நீங்கா இடம் பிடித்திருக்கிறது தெரிய வந்திருக்கிறது. 67 சதவீதம் பேர் குடும்பத்தினர் சொல்கிறோம் என்பதற்காக நாங்கள் தங்கம் வாங்குவதில்லை எங்களுடைய சொந்த ஆய்வுகளை நடத்தி அதன் அடிப்படையில் தான் தங்கம் வாங்குகிறோம் என தெரிவிக்கின்றனர். ஜென் ஸீ தலைமுறையினர் பெரும்பாலும் ஐந்து கிராமுக்கும் குறைவான அளவுக்கு தான் தங்கம் வாங்குகிறார்கள்.
Share This Article English summary
Gen Z Chooses Gold as Top Investment Over Crypto and Stocks
The Smytten PulseAI survey shows Gen Z and Millennials prioritizing gold for its safety and flexibility, opting for personal, small-quantity purchases amid modern investment options. Story first published: Sunday, February 15, 2026, 9:34 [IST] See More On: தங்கம், தங்க நகை, gold, gen z Other articles published on Feb 15, 2026
