டெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 13:35 [IST] Share This Article
தலைநகர் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை துறையினரின் முதல் கட்ட விசாரணையில் இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டெல்லியில் செங்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கட்கிழமை அன்று இரவு 7 மணி அளவில் பயங்கர சப்தத்தோடு கார் ஒன்று வெடித்து சிதறியது. இதனை அடுத்து அருகில் இருந்த வாகனங்கள் தீ பற்றி கொண்டன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 7. 29 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படையினர் ,காவல் துறையினர் , தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் என பலரும் விசாரணை நடத்தி வருகின்றனர் . இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மருத்துவர் உமர் முகமது என சொல்லப்படுகிறது . அவரின் புகைப்படமும் தற்போது வெளியாகியிருக்கிறது திங்கட்கிழமை மாலை செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய வெள்ளை நிற குண்டாய் ஐ20 காரை உமர் இயக்கிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
Also Read
செங்கோட்டை குண்டுவெடிப்பு.. தீவிரவாத தாக்குதலா..? உள்துறை அமைச்சர் அமித் ஷா பரபரப்பு விளக்கம்..!!
இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் தகவல்கள் நம்மை அதிர்வடையச் செய்கின்றன. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகே திண்பண்டங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்த ஏபி யாதவ், வழக்கம் போல நான் கடையில் இருந்தேன் அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது, என்னுடைய கடையிலிருந்த குடையே சாய்ந்து விழுந்தது , அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறியதை நான் பார்த்தேன் அவ்வளவு தீவிரமாக அந்த வெடி சத்தம் இருந்தது எனக் கூறியிருக்கிறார். இடி விழுந்ததை போல இருந்தது என்ன செய்வது என தெரியாமல் உயிரை காப்பாற்றி கொள்ள அனைவரும் தெறித்து ஓடினோம் என தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் இருந்த வீட்டை சேர்ந்த விக்கி என்ற நபர் திடீரென மிகப் பெரிய அதிர்வுகளை நாங்கள் உணர்ந்தோம். நிலநடுக்கம் வந்துவிட்டதோ என முதலில் நினைத்தோம் ஆனால் பயங்கர சத்தம் கேட்டது அதனை வைத்து தான் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்தது புரிந்து கொண்டோம் என கூறியிருக்கிறார் .
Recommended For You
2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!
சாலைகளில் மனித உடல்களும் வாகனங்களின் கண்ணாடிகளும் சிதறி கிடந்தது அனைத்தும், சில நொடிகளில் நடந்து விட்டது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். கார் வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் ஹரியானா மாநிலத்தின் பரிதாபத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து 3000 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களை கைப்பற்றினர் அதில் பயங்கர வெடிப்பொருட்களை தயாரிக்க கூடிய 350 கிலோ எடையிலான அம்மோனியம் நைட்ரேட் இருந்ததை கண்டுபிடித்தனர் .
Share This Article English summary
Delhi blast: eyewitness recalls thundering sound and scattered bodies
Delhi blast on November 10 that shook the nation is being meticulously probed by investigating agencies. Police suspects it could be a suicide attack. Story first published: Tuesday, November 11, 2025, 13:35 [IST] Other articles published on Nov 11, 2025