டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு: செபி வெளியிட்ட எச்சரிக்கை!! முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:02 [IST] Share This Article
தங்கம் என்றாலே நகை, நாணயம், தங்க கட்டிகளாக தான் வாங்க வேண்டும் என்று அவசியம் கிடையாது , மாற்று வழிகளிலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற விழிப்புணர்வு இந்தியா முழுவதும் அதிகரித்து இருக்கிறது.
குறைந்த விலையில் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகளை டிஜிட்டல் கோல்டு மற்றும் கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் நமக்கு வழங்குகின்றன. குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்ய முடியும் . பல்வேறு நகை விற்பனை செய்யும் நிறுவனங்களே ஆன்லைன் வாயிலாக டிஜிட்டல் கோல்டு திட்டங்களை நமக்கு வழங்குகின்றன. 10 ரூபாயிலிருந்து தங்கத்தை வாங்க முடியும் என்ற ஒரு நம்பிக்கையை இந்த டிஜிட்டல் தங்கம் திட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன.

டிஜிட்டல் கோல்டு என்பவை டிஜிட்டல் வடிவில் இருக்கும் தங்கம் என கொள்ளலாம், அதாவது நாம் பணம் கொடுத்து டிஜிட்டல் வடிவில் தங்கத்தை வாங்குவது. நமக்கு தேவைப்படும் போது இதனை விற்று பணமாக்கலாம் அல்லது பிசிக்கல் கோல்டாக மாற்றி நமக்கு டெலிவரி செய்ய சொல்லலாம் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
ஆனால் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. செபி தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் ,பல்வேறு ஆன்லைன் தளங்கள் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் கோல்டு திட்டங்களில் முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள் என கூறியிருக்கிறது .

இந்த டிஜிட்டல் கோல்டு முதலீடு என்பது பத்திர சந்தை கட்டமைப்பின் கீழ் கட்டுப்படுத்தப்படவில்லை எனவே அதற்கே உரிய அபாயங்கள் இருக்கின்றன என கூறி இருக்கிறது. நாட்டில் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து இருக்கக்கூடிய சூழலில் செபி இப்படி ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது .
சில டிஜிட்டல் அல்லது ஆன்லைன் தளங்கள் முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் அல்லது இகோல்ட் தயாரிப்புகளை வழங்கி முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கின்றன. ஆனால் அத்தகைய டிஜிட்டல் கோல்டு திட்டங்களை செபி ஒழுங்குபடுத்தவில்லை , அதாவது டிஜிட்டல் தங்கம் திட்டங்களை செபி பத்திரங்களாகவோ அல்லது பொருட்களின் வழி தோன்றல்களாகவோ ஒழுங்குபடுத்தவில்லை என சுட்டிக்காட்டி இருக்கிறது. டிஜிட்டல் கோல்டு திட்டங்கள் செபியின் எல்லைக்கு வெளியே செயல்படுகின்றன, இத்தகைய டிஜிட்டல் பொருட்களில் முதலீடு செய்யும்போது அதற்கே உரிய அபாயங்களும் இருக்கின்றன என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
Also Read
தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்
டிஜிட்டல் தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்து இருக்கிறீர்கள் அதில் ஏதேனும் மோசடி நடந்துவிட்டது என்றால் பத்திர சந்தை வரம்பிற்குட்பட்ட முதலீட்டாளர் பாதுகாப்பு வழிமுறைகள் எதுவும் இந்த குறிப்பிட்ட முதலீட்டாளர்களுக்கு கிடைக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என செபி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் டிஜிட்டல் கோல்டு திட்டங்களை வழங்குகின்றன.
தனிஸ்க், எம்எம்டிசி, ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் ,போன் பே , கேரட் லேன், ஜோஸ் ஆலுக்காஸ் , ஸ்ரீராம் பைனான்ஸ் என பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய இணையதளங்கள் வாயிலாக டிஜிட்டல் கோல்டு முதலீட்டு வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இவை அனைத்தும் நாட்டில் புகழ்பெற்ற பல ஆண்டுகளாக செயல்படக்கூடிய நிறுவனங்களாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் இவற்றில் முதலீடு செய்து இந்த நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்றாலோ அல்லது மோசடி செய்தாலோ சட்ட பாதுகாப்பு கிடைக்காது என சொல்லப்படுகிறது.
Recommended For You
2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?
இந்தியாவில் நகை கடை நிறுவனங்கள் நடத்தும் நகைசீட்டு திட்டங்கள் கூட எந்த ஒரு ஒழுங்குமுறையின் கீழும் கொண்டு வரப்படவில்லை. இருந்தாலும் மக்கள் நம்பிக்கை என்ற ஒன்றை கொண்டு தான் நகை சீட்டு கட்டுகிறார்கள். இருந்தாலும் இந்த திட்டங்களிலும் மோசடிகள் நடக்கின்றன,. எனவே எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் புகழ்பெற்ற நல்ல வரலாறு கொண்ட நிறுவனமாக செய்வது ந்ல்லது என நிபுணர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
Share This Article English summary
Planning to invest in digital gold? – read this SEBI statement before taking decision
SEBI cautioned investors that the digital gold or e-gold products are not regulated and one should be very careful in such investments. Story first published: Saturday, November 8, 2025, 16:02 [IST] Other articles published on Nov 8, 2025
