டிஜிட்டல் இந்தியா 2.0: பட்ஜெட்டில் AI துறைக்கு மெகா பூஸ்ட் கிடைக்குமா? வரப்போகும் சலுகைகள்? – Allmaa

befunky-collage-2026-01-08t203532-594-1767884746

  செய்திகள்

டிஜிட்டல் இந்தியா 2.0: பட்ஜெட்டில் AI துறைக்கு மெகா பூஸ்ட் கிடைக்குமா? வரப்போகும் சலுகைகள்?

News oi-Pugazharasi S By Published: Thursday, January 8, 2026, 20:36 [IST] Share This Article

2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் வெறும் எண்களுக்கானது மட்டுமல்லாமல், இந்தியாவின் AI எதிர்காலத்திற்கான ஒரு பட்ஜெட் ஆக இருக்கலாம். மேக் இன் இந்தியா திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்தியாவில் ஏஐ என்பதற்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்கலாம். குறிப்பாக டேட்டா சென்டர்கள் போன்ற துறையில் முதலீடுகளை அதிகரிக்க அரசு கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுக்கலாம்.

எதிர்பார்ப்புகள்?

குறிப்பாக 10,300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ஏஐ மிஷன் (IndiaAI Mission) திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய டெக் ஜாம்பவான்களை ஈர்க்க மெகா வரிச் சலுகைகள், மற்றும் டேட்டா சென்டர்களுக்குத் தேவையான பசுமை மின்சாரம் தொடர்பான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் முக்கிய இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா 2.0: பட்ஜெட்டில் AI துறைக்கு மெகா பூஸ்ட் கிடைக்குமா? வரப்போகும் சலுகைகள்?

ஆரம்பத்தில் வெறுமனே ஒரு தொழில்நுட்பமாக இருந்த செயற்கை நுண்ணறிவை, இந்தியாவின் முதுகெலும்பாக மாற்றும் இந்த டிஜிட்டல் இந்தியா 2.0 வியூகம், நாட்டின் பொருளாதாரத்தை எப்படி மாற்றப்போகிறது? வேலைவாய்ப்புகளில் ஏற்படப்போகும் புதிய புரட்சிகள் என்ன? முழுமையான பட்ஜெட் எதிர்பார்ப்புகளை இங்கே பார்ப்போம்!

வரி விலக்கு இருக்குமா?

வரும் ஆண்டுகளில் ஏஐ துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடுகள் ஈர்க்கப்படலாம். குறிப்பாக 2027ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சர்வதேச டெக் நிறுவனங்கள் மற்றும் ஏஐ தொடர்பான நிறுவனங்களை ஈர்க்க கூடிய கொள்கைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக குறிப்பிட்ட அளவு வேலை வாய்ப்பு மற்றும் பசுமை ஆற்றல் இலக்குகளை எட்டும் டேட்டா சென்டர்களுக்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது. அதேபோன்று டேட்டா சென்டர்களுக்கு தேவையான முக்கிய உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டேட்டா சென்டர்களுக்கான மூலதனச் சொத்துக்களை வாங்கும் போது, அதற்காக இன்புட் டேக்ஸ் கிரெடிட் ரீஃபண்ட் வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சலுகைகள் இந்தியாவில் மேலும் முதலீடுகளை அதிகரிக்க உதவலாம்.

இந்தியா AI மிஷன்

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 10,372 கோடி ரூபாய் நிதியுடன், அடுத்த 5 ஆண்டுகளில் 30,000க்கும் மேற்பட்ட GPUs (Graphics Processing Units) கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் (ஒரு மணிநேரத்திற்கு 65 ரூபாய் என) GPU வசதிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. குறைந்தபட்சம் 1000 GPUs வாங்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, சிறு நிறுவனங்களும் எளிதாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வழிவகை செய்யப்படலாம்.

புதிய ஸ்டார்ட் அப்கள் கிளவுட் வசதிகளைப் பயன்படுத்த அரசு மானியம் வழங்கலாம். இந்தியாவின் பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு, பிராந்திய மொழிகளில் இயங்கும் AI மாடல்களை உருவாக்கத் தனி நிதி ஒதுக்கப்படும்

Share This Article English summary

Budget 2026 is expected to introduce fiscal measures to draw international AI investments

budget 2026 Financial Incentives expectations: New policies to attract tech giants (like Microsoft and Amazon) to build their AI stacks and data centers in India. Story first published: Thursday, January 8, 2026, 20:36 [IST] Other articles published on Jan 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *