ஜனநாயகன் Vs பராசக்தி: சென்சார் பிரச்சினையை விடுங்க!! இத கேளுங்க!! கோடியில தான் டீலிங்கே!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 9, 2026, 13:34 [IST] Share This Article
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகன் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டன. 9ஆம் தேதியான இன்று ஜனநாயகன் திரைப்படமும் 10ஆம் தேதியான நாளை பராசக்தி திரைப்படமும் தியேட்டர்களில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக படங்கள் வெளியிடுவது என்பது தாமதமாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். இந்த சூழலில் ஜனநாயகன் திரைப்படத்திற்கான சென்சார் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் தனிநீதிபதி U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகன் மற்றும் பராசக்தி இரண்டு திரைப்படங்களிலுமே நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்லன. இரண்டு படங்களிலும் எந்த நடிகருக்கு எவ்வளவு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன். 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படமாக இருக்கிறது. விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. அதேபோல அவருடைய சம்பளமும் இந்த படத்திற்கு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. 380 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நடிகர் விஜய்க்கு மட்டும் 220 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
Also Read
2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இவ்வளவு அதிகபட்ச சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. நடிகை பூஜா ஹெக்டே மற்றும் பாபி தியோல் ஆகியோருக்கு தலா 3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறதாம். மமிதா பைஜூவுக்கு இந்த திரைப்படத்திற்காக 60 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் ஹெச். வினோத் 25 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருக்கிறார் என நியூஸ் 18 செய்தி கூறுகிறது. படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் 13 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , ரவி மோகன் , அதர்வா, ஸ்ரீலிலா நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பராசக்தி. இந்தி திணிப்பு என்ற அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
Recommended For You
வருஷ கடைசியில் சம்பவம் செய்த இந்தியர்கள்!! தங்கத்துல நடந்த டிவிஸ்ட்!! ஆடிப்போன உலக நாடுகள்!!
பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதர்வா 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். இயக்குனர் சுதா கொங்கராவுக்கு 15 கோடி ரூபாயும் வில்லனாக நடிக்கும் ரவி மோகனுக்கு 16 கோடி ரூபாயும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. நடிகை ஸ்ரீலீலாவுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பராசக்தி திரைப்படம் 141 கோடி பட்ஜெட்டில் தயார் செய்யப்பட்டிருக்கிறது.
Share This Article English summary
Jana Nayagan Vs Parasakthi: How much Vijay and Siva Karthikeyan paid for their role?
Vijay’ JanaNayagan and SivaKarthikeyan’s Parasakthi movie created huge expectation among the Cinema goers and Fans. Here is how much the cast of both the movie paid for their role. Story first published: Friday, January 9, 2026, 13:34 [IST] Other articles published on Jan 9, 2026
