ஜனநாயகன் Vs பராசக்தி: இது அண்ணன் தம்பி பொங்கலா? அரசியல் பொங்கலா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, January 6, 2026, 14:45 [IST] Share This Article
2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு பொங்கலாக இருக்க போகிறது . இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைக்கு வருகிறது. இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பராசக்தி திரைப்படம் வெளியாகிறது.
வழக்கமாக பொங்கல், தீபாவளி பண்டிகை என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் ரேஸ் சற்றே மாறுபட்டது. இது அரசியல் பொங்கலாக இருக்க போகிறது என்பது தான் உண்மை. விஜய் நடிப்புக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியலில் இறங்குவதாக கூறி தன்னுடைய கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார்.

விஜய் குடும்ப ஆடியன்ஸை கொண்டவர், அதிக ரசிகர்களையும் கொண்டவர். எனவே ஜனநாயகன் படம் எமோஷ்னலாகவும், அரசியல் ரீதியாகவும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். விஜயின் கடைசி படம் என்பதால் விஜய் ரசிகர்கள் மிக ஆர்வமாக இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர் . அதே வேளையில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்டோரின் வித்தியாசமான நடிப்பு மற்றும் ஹிந்தி மொழி திணிப்பு தொடர்பான படம் என்பதால் பராசக்தி திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பொங்கல் பண்டிகையில் இது வெறும் இரண்டு திரை நட்சத்திரங்களுக்கு இடையிலான ஒரு போட்டியாக இல்லாமல் அரசியல் கலந்த ஒரு போட்டியாக மாறி இருக்கிறது. ஏனெனில் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கி திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். எனவே ஜனநாயகன் படத்தில் மக்கள் அவரை நடிகராக மட்டுமில்லாமல் அரசியல் வாதியாகவும் பார்ப்பார்கள்.

பராசக்தி திரைபடம், திமுகவின் மிக நெருங்கிய குடும்ப உறுப்பினரால் தயாரிக்கப்படும் அதிக பட்ஜெட் கொண்ட படம். கலைஞர் கருணாநிதியின் பேத்தியின் கணவர் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பட்ஜெட் கொண்டு தயாரிக்கும் ஒரு படம் பராசக்தி. இது இந்தி திணிப்பை எதிர்த்த வரலாற்றையும் சமகால அரசியலையும் கலந்து பேசும் படமாக இருக்க போகிறது.
Also Read
நிக்கோலஸ் மதுரோவின் ஒற்றை புகைப்படம்.. பல லட்சம் பிஸ்னஸ் செய்த NIKE!! இது லிஸ்ட்லயே இல்லையே!!
இரண்டு திரைப்படங்களில் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதியே ரிலீஸ் ஆகிறது, பராசக்தி திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸ் ஆகிறது . இந்த இரண்டு நாட்களுமே சமூக வலைத்தளங்கள் தொடங்கி தியேட்டர் வாசல்கள் வரை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கொண்டாட்டமாக தான் நிறைந்து இருக்க போகிறது.
இது உண்மையில் விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான போட்டியாக இல்லாமல் அரசியல் போட்டியாக தான் இருக்க போகிறது. சமூகவலைதளங்களில் இரண்டு படத்திற்கு இடையே வியூஸ், கமெண்ட்ஸ் போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. பராசக்தி படத்தின் போஸ்டர்கள் கிளிப்பு, பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் தவெக என முழக்கம் எழுப்பப்பட்டது உள்ளிட்டவற்றை நாம் கவனிக்க வேண்டும்.

இந்நிலையில் தான் சிவகார்த்திகேயன் இது அண்ணன் – தம்பி பொங்கல் என கூறி பிரச்சினையை முடிக்க பார்த்தார். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஜனநாயகன் திரைப்படத்திற்கு 500 லிருந்து 600 ஸ்கிரீன்களையும், பராசக்திக்கு 400 இல் இருந்து 450 ஸ்கிரீன்களையும் ஒதுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா, கேரளாவில் எல்லாம் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விலையே 2000 ரூபாய்க்கு மேல் விற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம். விஜயின் கடைசி படம் என்பதால் முதல் நாள் காட்சியை காண போட்டி இருக்கும். ஜனநாயகன் கமர்சியல் அதே வேளையில் விஜயின் அரசியல் வருகையை குறிக்கும் படமாகவும், பராசக்தி இந்தி திணிப்பு அரசியலையும் பேசும் படமாகவும் இருக்கும். மக்கள் எந்த படத்தை ஏற்கிறார்கள் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
Recommended For You
ஜனநாயகன்: தொடங்கியது தளபதி கச்சேரி!! வெளியாவதற்கு முன்னரே பல கோடிகளை குவித்து சாதனை!!
இந்த திரையுலக மற்றும் அரசியல் மோதல் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நல்ல வருமானம் தரப்போகிறது. ஏனெனில் 9ஆம் தேதியே ஜனநாயகனும் 10ஆம் தேதியே பராசக்தியும் வெளியாகி விடுகிறது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறை வரப்போகிறது என்பதால் நல்ல வசூல் வேட்டை தரும் பொங்கலாக இது இருக்க போகிறது. ஓடிடி வருகையால் மக்கள் திரையரங்குகளுக்கு வருகை தருவது குறைந்த நிலையில் மீண்டும் மக்களை திரை அரங்குகள் நோக்கி வரவழைக்கும் வாய்ப்பை இந்த படங்கள் ஏற்படுத்தியுள்ளன.
Share This Article English summary
Jana nayagan Vs Parasakthi: Not only a Pongal clash, Also a politics Clash
Tamilnadu movie goers to celebrate Pongal one week earlier as the Jana nayagan and ParaSakthi clash is widely seen as political clash. Story first published: Tuesday, January 6, 2026, 14:36 [IST]
