சென்னை மக்களே இனி பறக்கலாம்!! வருகிறது புல்லட் ரயில் திட்டம்!! ரெடியானது அறிக்கை!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 11:00 [IST] Share This Article
இந்தியாவில் பல்வேறு நகரங்களையும் இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. முதல்கட்டமாக மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதே போன்ற புல்லட் ரயில் இணைப்புகளை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் நோக்கத்தில் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்கான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்திருக்கிறது .

இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு இடையிலான பயண நேரம் வெறும் 2.20 மணி நேரமாக குறைந்து விடும். சென்னை மற்றும் ஐதராபாத் இடையிலான புல்லட் ரயில் சேவைக்கான ஆரம்பகட்ட ஆய்வுப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகின்றன . இந்த வழித்தடம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்திருக்கிறது .தற்போது தமிழ்நாடு அரசிடம் அது வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னை ஐதராபாத் புல்லட் ரயில் சேவைக்கான இந்த விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்யும் . கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இந்த ஆய்வு நடத்தப்படும் என்றும் இதனை அடுத்து தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தால் திட்டம் இறுதி செய்யப்படும். பின்னர் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
இனி ரயில்களில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. Pre wedding Shoot செய்யலாம்..! கட்டணம் எவ்வளவு தெரியுமா?
முன்னதாக திருப்பதி வழியாக புல்லட் ரயில் சேவை செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறியதை எடுத்து அதற்கு ஏற்ற வகையில் திட்ட அறிக்கையை மாற்றி அமைத்திருக்கிறார்கள். சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல தற்போது சுமார் 12 மணி நேரம் ஆகிறது புல்லட் ரயில் இயக்கப்பட்டால் இந்த 778 கிலோமீட்டர் தூரத்தை 2.20 மணி நேரத்திலேயே சென்று விட முடியும்.
சென்னையில் புல்லட் ரயில் நிலையங்களை அமைப்பதற்கு ஒவ்வொரு ரயில் நிலையத்தை சுற்றியும் 50 ஏக்கர் நிலம் தேவை என தமிழ்நாடு அரசிடம் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இடங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டால் அடுத்து நிலம் கையகப்படுத்துவதற்கான கொள்கை ரீதியிலான ஒப்புதலை விரைந்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
Recommended For You
இனி வீடே வாங்க கூடாது என தடை விதிக்கும் அளவுக்கு சொத்து வாங்கிய நடிகர்!! யார் இந்த பி.யு.சின்னப்பா?
தமிழ்நாட்டில் புல்லட் ரயிலுக்கு சுரங்க பாதை அமைக்க வேண்டியும் இருப்பதால் இடம் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்குவது சவால் நிறைந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ரயில் வழித்தடம் மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்க இருக்கும் பகுதிகளில் வீடுகள் , அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இருப்பதால் அவற்றுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் எப்படி கட்டுமான பணிகளை திட்டமிடுவது என்பது பெரிய சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
Share This Article English summary
Chennai- Hyderabad Bullet train service: Railway submits final report to Tamilnadu
The 778-km Hyderabad–Chennai high-speed rail corridor has picked up momentum, with South Central Railway submitting its final alignment to Tamil Nadu for approval. Story first published: Monday, November 24, 2025, 11:00 [IST] Other articles published on Nov 24, 2025