சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற போகிறது!! விரைவில் வருகிறது IKEA..!! – Allmaa

ikea-1767006746

  செய்திகள்

சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற போகிறது!! விரைவில் வருகிறது IKEA..!!

News oi-Devika Manivannan By Published: Monday, December 29, 2025, 16:44 [IST] Share This Article

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் நிறுவனம் தான் ஐகியா. உலகின் பல்வேறு நகரங்களிலும் இந்த நிறுவனம் கடை திறந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது., ஐகியாவில் வாங்க கூடிய பொருட்கள் தரமானதாக இருக்கும் என்பது மக்களின் நீண்ட கால நம்பிக்கை.

இந்தியாவில் இந்த நிறுவனம் தன்னுடைய கடைகளை விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தன்னுடைய கடையை நிறுவுவதற்கு முடிவு செய்து இருக்கிறது. ஐகியா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கடைகளை அமைத்துள்ளது.

சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற போகிறது!! விரைவில் வருகிறது IKEA..!!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக இந்தியாவிற்கான இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பேட்ரிக் தெரிவித்திருக்கிறார் . இதன் அடிப்படையில் தங்களுடைய விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மற்றும் புனேவில் பெரிய பெரிய கடைகளை திறப்பதற்கு இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

சென்னையில் தங்களின் கடையை நிறுவுவதற்கு இடம் தேடி வருவதாக ஐகியா நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்னையில் மெட்ரோ இணைப்பு உள்ள பகுதியில் 4 முதல் 5 ஏக்கர் நிலத்தையோ அல்லது 3000 சதுர அடிக்கு குறையாத கட்டிடத்தையோ ஐகியா நிறுவனம் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Also Readவெள்ளியில் முதலீடு செஞ்சு மாட்டிக்காதீங்க!! இவரே இப்படி சொல்லிட்டாரே!! இப்போ என்ன செய்யுறது?வெள்ளியில் முதலீடு செஞ்சு மாட்டிக்காதீங்க!! இவரே இப்படி சொல்லிட்டாரே!! இப்போ என்ன செய்யுறது?

ஐகியா நிறுவனம் ஹைதராபாத் , நவிமும்பை மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் தன்னுடைய கடைகளை நிறுவி இருக்கிறது. கூடிய விரைவில் நொயிடா மற்றும் குரு கிராம் பகுதிகளில் கடை மற்றும் அலுவலக இடங்கள் சார்ந்த ஒரு கட்டிடத்தையும் கட்டி வருகிறது. அடுத்த கட்டமாக தென்னிந்தியாவின் சென்னையில் தன்னுடைய கடையை திறப்பதற்கு ஐகியா நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

சென்னை பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உற்பத்தி ரீதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனையொட்டி பல்வேறு பெரிய பெரிய நிறுவனங்களின் முதலீடு அதிகரிப்பது உள்ளிட்டவை ஐகியா நிறுவனம் சென்னையில் முதலீடு செய்ய வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

Recommended For Youரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் வருமானம் பார்ப்பது எப்படி? உடனே போஸ்ட் ஆபீஸுக்கு போங்க!!ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் வருமானம் பார்ப்பது எப்படி? உடனே போஸ்ட் ஆபீஸுக்கு போங்க!!

ஏற்கனவே டிமார்ட் நிறுவனம் பல இடங்களில் கடைகளை நிறுவி இருக்கிறது. லூலூ மார்க்கெட்டும் வருகை தர இருக்கிறது. இந்நிலையில் ஐகியாவும் சென்னையில் கடையை நிறுவினால் சென்னை சர்வதேச நகரங்களுக்கு இணையான பெயரை பெறும் என்பது உறுதி.

Share This Article English summary

IKEA plans to enter Chennai and looking for land says report

Reports say that IKEA is planning to open a store in Chennai and it is actively looking for land across the city. Story first published: Monday, December 29, 2025, 16:44 [IST] Other articles published on Dec 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *