சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 12:52 [IST] Share This Article
இந்தியாவின் சிலிக்கான் வேலி, ஸ்டார்ட் அப் தலைநகரம் என பல பெயர்கள் பெங்களூருக்கு இருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக பெங்களூருவில் இருக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல் , மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவது மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு பிரச்சனைகளால் பலரும் பெங்களூருவை விட்டு மாற்று நகரங்களை தேட தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் பெங்களூருக்கு மாற்று நகரமாக சென்னை படிப்படியாக உருவெடுத்து வருகிறது. Knot dating நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான ஜஸ்வீர் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பெங்களூருடன் ஒப்பிடும்போது சென்னை தான் பெஸ்ட் என கூறியிருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது .

நான் இதை எதிர்பார்க்கவே இல்லை சென்னை மிகவும் அழகாக இருக்கிறது பெங்களூருவை விட சிறப்பாக இருக்கிறது என கூறியிருக்கிறார். இங்கே தூய்மையான காற்று கிடைக்கிறது. குருகிராமில் பெரிய பெரிய கட்டிடங்களும் பெரிய பெரிய பால்கனிகளும் தான் இருக்கும் ஆனால் தரமான காற்று சென்னையில் தான் கிடைக்கிறது என தன்னுடைய பதிவில் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது . இது வைரலான நிலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகம் அவருக்கு இன்னும் அழகான வியூ கொண்ட அறைக்கு அப்கிரேட் செய்துள்ளது. இதனையும் அவர் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
ஏராளமானவர்கள் சென்னையின் சிறப்புகளை பதிவு செய்து இருக்கின்றனர். இதை படிக்கும்போது குருகிராமில் இருப்பவர்கள் அனைவரும் காற்று மாசால் இருமிக் கொண்டிருக்கிறார்கள் என ஒரு நபர் பதிவு செய்திருக்கிறார் .ஒரு நபர் சென்னைக்கு வருபவர்கள் ஒருபோதும் வேறு நகரங்களுக்கு திரும்பி செல்லவே விரும்ப மாட்டார்கள் நான் உட்பட என பதில் தெரிவித்திருக்கிறார்.
சென்னை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ்நாடும் அழகு தான் என கூறி இருக்கும் ஒரு பயனர் இங்கே நகரங்கள் கிராமங்கள் என எங்கு சென்றாலும் இயற்கையையும் தூய்மையையும் உங்களால் அனுபவிக்க முடியும் என கூறியிருக்கிறார். சிலர் வெயில் காலத்தில் அதிக வெயில் தவிர மற்ற அனைத்துமே சென்னையில் சிறப்பாக இருக்கிறது என கூறி இருக்கிறார்.
Also Read
அடேங்கப்பா தங்கத்த வச்சு இவ்வளவு பெரிய பிஸ்னஸ் நடக்குதா!! இந்தியாவுல இதுதான் இப்போ டிரெண்ட்!!
பெங்களூரு, புனே ,ஹைதராபாத் நகரங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு சென்னையின் சாலைகளும் உள்கட்டமைப்பும் பிரமிப்பை தரும் என ஒரு நபர் பதில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் பெங்களூரு, குருகிராம் ஆகியவை இருந்தாலும் உள்கட்டமைப்பு, காற்று மாசு, வாழ்க்கை செலவினங்கள் உயர்வு ஆகியவை பெரிய பிரச்சினைகளாக உள்ளன. காற்றின் தரத்தில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது.
Share This Article English summary
Chennai is better than Bengaluru & Gurugram says Knot dating company CEO
Knot dating company CEO’s post praising Chennai’s beauty and air quality has triggered a discussion about how Indian cities compare in terms of lifestyle and liveability. Story first published: Tuesday, November 25, 2025, 12:52 [IST] Other articles published on Nov 25, 2025