சீனாவை மிஞ்ச துடிக்கும் இந்தியா! பாதுகாப்புத் துறையில் காத்திருக்கும் ரூ.7 ட்ரில்லியன் வாய்ப்பு!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 18:48 [IST] Share This Article
உலக அரங்கில் இந்தியா தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி வருகிறது. இதுவரை ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான பெரும்பாலும் அயல் நாடுகளைச் சார்ந்து நின்ற காலம் போய், சொந்தமாக உற்பத்தி செய்யும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே இதற்காக இந்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தற்போது சீனாவை விஞ்சும் அளவுக்கு, இந்தியா பாதுகாப்பு துறையில் முன்னேற்றம் உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்க பிரமாண்ட திட்டங்களைத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஆத்ம நிர்பார் திட்டத்தின் உந்துதலால், முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக மாறியுள்ளது.
வரும் ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தையானது, இந்திய ராணுவத்திற்கு மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியையும் தாங்கிப் பிடிக்கும் ஏணியாக இருக்கலாம். இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு ஐந்து முக்கிய காரணிகள் அடிப்படையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களின் முதலீட்டு பயணத்திலும் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் இருக்கலாம். இது குறித்து தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் சமீபத்தில் 5 முக்கிய காரணிகளை சுட்டிக் காட்டியது.

உள்ளூர் உற்பத்தி
இந்தியா பாதுகாப்பு துறையானது தற்போது உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து அதிகளவிலான உபகரணங்களை வாங்கி வருகிறது. கொரோனாவுக்கு முன் பாதுகாப்பு சம்பந்தமான கொள்முதல்களில் 54% மட்டுமே உள்நாட்டில் இருந்து வாங்கப்பட்டது. ஆனால் இந்த விகிதமானது 2026ம் நிதியாண்டு பட்ஜெட்டில் 75% ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஒப்பந்தங்களில் 92% பாதுகாப்பு துறையிடம் இருந்தே கிடைத்துள்ளது. பெரும்பாலான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்குள்ளேயே கிடைப்பதால், நிறுவனங்கள் செலவுகளைச் சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதியும் குறைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய பாதுகாப்பு துறை நிறுவனங்களின் லாப வரம்பையும் அதிகரிக்க காரணமாக அமையலாம். இது அவற்றின் பங்கு விலையும் நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்க காரணமாக அமையலாம்.
ஏற்றுமதி தேவை
இந்திய பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்வதோடு, ஏற்றுமதியையும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் தற்போது ஏற்றுமதி செலவுகளைச் அதிகரிக்க தொடங்கியுள்ள சூழலில், வலுவான ஆர்டர்களும் இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கலாம்.
குறிப்பாக பிரம்மோஸ், ஆகாஷ், பினாகா மற்றும் 155மிமீ போன்ற அம்சங்களுக்கு வெளிநாடுகளில் தேவை உள்ளது. ஆக இதுபோன்ற வாய்ப்புகள் இந்திய நிறுவனங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகளை அள்ளித் தரலாம்.
மசகான் டாக், கார்டன் ரீச் மற்றும் கொச்சின் ஷிப்யார்டு போன்ற கப்பல் கட்டும் தளங்கள் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாங்குபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இந்த ஆர்டர்கள் இந்திய சந்தைக்கு வெளியே பெரிய வாய்ப்புகளை வாரி வழங்கலாம்.
அவசர காலக் கொள்முதல்கள்
அவசர காலக் கொள்முதல்களுக்கான 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதிக்கு விரைவான ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது. இது இந்திய நிறுவனங்களுக்கு விரைவான ஆர்டர்களையும் வழங்கி வருகிறது. இந்த அவசரகால கொள்முதலில் ஏவுகணை அமைப்புகள், ராக்கெட்டுகள், வான்வழிப் பாதுகாப்பு அம்சங்கள், ரேடார், தகவல் தொடர்பு சாதனங்கள், எலக்ட்ரானிக் போர் முறை கருவிகள் மற்றும் ஏவியோனிக்ஸ் போன்ற பிரிவுகளில் உடனடி வாய்ப்புகளைத் உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பல ஆண்டு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இது அதன் நீண்ட கால வருவாயை உறுதி செய்துள்ளது.
மூலதனச் செலவு
பாதுகாப்பு துறையில் தொடர்ந்து வலுவான விரிவாக்கச் சுழற்சி நடைபெறுவதாக கூறும் அறிக்கைகள், கப்பல் கட்டும் தளங்கள், ஏவுகணை நிறுவனங்கள், மின்சாதன பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் என பலவும் பலனடையலாம். இது அடுத்து வரும் ஆண்டுகளில் நிறுவனங்களுக்கு நிலையான உற்பத்தி ஆர்டர்களுக்கு வழிவகுக்கலாம். இது தொடர்ந்து பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கலாம். அவற்றின் லாப வரம்பையும் ஊக்கப்படுத்தலாம்.
நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி
பாதுகாப்பு துறையானது நீண்ட கால உற்பத்தி கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்று கூறும் தரகு நிறுவனம், தொடர்ந்து நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் உற்பத்தி திறனை தேவைக்கு ஏற்ப அதிகரித்து வருகின்றன. இது பாதுகாப்பு துறை நிறுவனங்களின் நீண்ட கால வளர்ச்சிக்கு ஆதரவாக அமையலாம். இது பாரத் டைனமிக்ஸ் போன்ற நிறுவனங்கள் சிறந்த வளர்ச்சி காண வழிவகுக்கலாம்.2028ம் நிதியாண்டிற்குள் அதன் இபிஎஸ் (EPS) வளர்ச்சி 37.3% அதிகரிக்கும் என கணித்துள்ளது. இந்த சுழற்சி வெறும் அனுமானங்களால் அல்ல, உண்மையான பணிகளின் ஆதரவுடன் உள்ளதாக தரகு நிறுவனம் கூறியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Is India’s Defence Sector Ready for the ₹7 Trillion Opportunity?
India’s Defence Sector’s ₹7 trillion opportunity will likely prove to be a long-term benefit for Indian defence companies Story first published: Monday, December 15, 2025, 18:48 [IST] Other articles published on Dec 15, 2025
