சிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது? – Allmaa

jan1-1766976977

  செய்திகள்

சிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது?

News oi-Devika Manivannan By Published: Monday, December 29, 2025, 8:29 [IST] Share This Article

2025ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு வியாழக்கிழமை அன்று பிறக்க இருக்கிறது . ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கப் போகின்றன.ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு மக்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது .

சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களின் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றங்களை அறிவிக்கும். அதாவது எல்பிஜி விலை ஏறலாம் அல்லது குறையலாம் . டிசம்பர் மாதத்தில் வணிக சிலிண்டர்களுக்கான விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டது, வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலை நீண்ட காலமாக குறையாமலேயே இருக்கிறது.

சிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது?

1ஆம் தேதி அன்று இந்த விலைகள் அப்படியே நீடிக்கலாம் அல்லது ஏறவும், இறங்கவும் செய்யலாம் இதில் எது நடந்தாலும் நம்முடைய மாதாந்திர பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் மக்கள் இந்த செய்தி குறித்து கவனமாக இருப்பது நல்லது.

கிரெடிட் ஸ்கோர்: இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் புதுப்பிக்கப்படும் காலம் மாறுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக கிரெடிட் ஸ்கோர் மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது இனி இது மாதத்திற்கு இரண்டு முறை புதுப்பிக்கப்படும் என இந்தியா டாட் காம் செய்தி குறிப்பிடுகிறது. அதாவது சரியான நேரத்தில் நீங்கள் கடன் அல்லது கிரெடிட் கார்டு பணத்தை செலுத்தவில்லை என்றால் உடனடியாக உங்களின் கிரெடிட் ஸ்கோரில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் . சரியான நேரத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு அவர்களின் இது புதிதாக கடன் வாங்குவது உள்ளிட்டவற்றுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Also Readஜனவரி 10ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு விநியோகம்? பணிகளை தீவிரப்படுத்தும் அரசு!!ஜனவரி 10ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு விநியோகம்? பணிகளை தீவிரப்படுத்தும் அரசு!!

பான் கார்டு: இந்தியர்கள் அனைவரும் தங்களுடைய பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டுகள் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் செயல் இழந்து போய்விடும். எனவே குறிப்பிட்ட அந்த நபர் வங்கி சேவை மற்றும் அரசு சேவை மற்றும் பிற நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வது சிக்கலை ஏற்படுத்தும் .

Recommended For Youஇந்த ஒரு ஆவணம் இருந்தா குறைந்த வட்டியில் தங்க நகை கடன் கிடைக்கும் தெரியுமா?இந்த ஒரு ஆவணம் இருந்தா குறைந்த வட்டியில் தங்க நகை கடன் கிடைக்கும் தெரியுமா?

ரயில் டிக்கெட்: ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம் ஜனவரி 12 முதல் அமலாகிறது. இதன்படி 60 நாட்களுக்கு முன் தொடங்கும் பொது டிக்கெட் முன்பதிவில் முதல் நாள் முழுவதும் ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் இணைக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதாவது முதல் நாளில் ஆதார் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி பயனர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

Share This Article English summary

Major Changes from Jan 1, 2026 Impacting Daily Life people should be aware

From January 1, 2026, India rolls out key reforms subsidized LPG price adjustments, mandatory PAN-Aadhaar linking deadlines, and train ticket reservation. Story first published: Monday, December 29, 2025, 8:29 [IST] Other articles published on Dec 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *