சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!!
Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 14:50 [IST] Share This Article
2025ஆம் ஆண்டில் தங்கத்தின் மதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடைந்த நிலையில், 2026 ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு வளர்ச்சி நீடிக்குமா, தங்கத்தின் விலை இதே போல வரலாற்று உச்சங்களை எட்டுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடிக்கிறது.
இப்பொழுது தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாமா அல்லது புதிய ஆண்டில் இன்னும் மக்கள் வாங்க முடியாத விலைக்கு தங்கத்தின் விலை சென்று விடுமா என மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக திருமணத்திற்கு தயாராகி வரக்கூடிய குடும்பங்களில் எல்லாமே இது அதிகமாகவே காணப்படுகிறது . இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 93,760 ரூபாய் , சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,118 டாலர்கள்.

அமெரிக்காவை சேர்ந்த பேங்க் ஆப் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் 2026 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,358 டாலரிலிருந்து 5,000 டாலர்கள் வரை உயரக்கூடும் என தெரிவித்திருக்கிறது. மேக்ரோ பொருளாதார சூழல் மற்றும் பாதுகாப்பான முதலீடாக தொடர்ந்து தங்கம் தன்னை நிலை நிறுத்தி இருப்பது ஆகிய இரண்டும் தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்தும் என தெரிவித்திருக்கிறது.
Also Read
அடேங்கப்பா தங்கத்த வச்சு இவ்வளவு பெரிய பிஸ்னஸ் நடக்குதா!! இந்தியாவுல இதுதான் இப்போ டிரெண்ட்!!
கடந்த இரண்டு வாரங்களாக ஏற்று இருக்கத்துடன் இருந்த தங்கம் சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இரண்டு சதவீதம் உயர்ந்திருக்கிறது, இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை ஒரு சதவீதம் என உயர்வு கண்டிருக்கிறது . டிசம்பர் மாதத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை கையில் எடுக்கப் போகிறது என வெளியான தகவல் தங்கத்தின் இந்த சமீப விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது .

தற்போது தங்கம் அதிகம் வாங்கப்பட்ட நிலையில் இருந்தாலும் அதற்கான டிமாண்ட் குறையவில்லை என பேங்க் ஆஃப் அமெரிக்கா அறிக்கை குறிப்பிடுகிறது. 2026இல் இப்போதுள்ள விலையை விட 21.42% தங்கம் விலை உயரும் என கூறுகிறது. அப்படி பார்த்தால் ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்றைய விலையுடன் கணக்கிட்டால் 1,14,000 என்ற விலையை எட்ட வாய்ப்புள்ளது.
Recommended For You
10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன?
அரசின் அமெரிக்க அரசின் கடன் அளவு அதிகமாக இருப்பது, பணவீக்கம் அதிகரிப்பது, வட்டி விகிதங்கள் குறைப்பு, சீனா உள்ளிட்ட நாடுகள் அதிகம் தங்கம் வாங்குவது ஆகியவை தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாக முன் வைக்கப்படுகிறது. 2026இல் தங்கம் விலை 50% மேல் லாபம் தந்த நிலையில் அப்படி ஒரு வளர்ச்சி இல்லாவிட்டாலும் மிதமான வளர்ச்சி இருக்கும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு வேளை டிரம்ப் வர்த்தக மோதலை அதிகப்படுத்தி உலக பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தினார் எனும் போது தங்கம், இந்த ஆண்டை போலவே உயரும்.
Share This Article English summary
Gold price may climb to $5,000 in 2026 predicts Bank of America
Bank of America (BofA) now forecasts gold to average $4,538 per ounce in 2026, with a potential climb to $5,000, supported by macro tailwinds and sustained safe-haven demand. Story first published: Tuesday, November 25, 2025, 14:50 [IST] Other articles published on Nov 25, 2025