கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது” – Allmaa

கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது”  – Allmaa

  செய்திகள்

கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது”

News oi-Prasanna Venkatesh By Published: Tuesday, November 25, 2025, 21:05 [IST] Share This Article

கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களின் மூலம் மொத்தம் 43,844 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக 1,00,709 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு கோயம்புத்தூரை உலகத் தரம் வாய்ந்த தொழில்மயமாக மாற்றும் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

மு.க. ஸ்டாலின் அதிரடி பேச்சு
TN Rising முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். உண்மையான புள்ளிவிவரங்களை நான் இங்கே வைக்கிறேன்” என்று தொடங்கினார். அவர் மேலும் கூறுகையில், “திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 11 லட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி ரூபாய் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாதவை” என்று அவர் உரத்துச் சொன்ன வார்த்தைகள் எதிரொலித்தன.

இம்மாநாட்டில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்
மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்தன. கோயம்புத்தூரில் பிரபலமான ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல்ஸ் நிறுவனம் மத்திய சமையலறை அமைக்க 300 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும்.

சாண்ட்பிட்ஸ் பவுண்டரீஸ் நிறுவனம் (Sandfits Foundries) வாகன உதிரிபாகங்கள் மற்றும் டக்டைல் இரும்பு வார்ப்பு தயாரிப்பில் 117 கோடி ரூபாய் முதலீடு தெய்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஜெய் ஜெய் மில்ஸ் நிறுவனம் ஒருங்கிணைந்த நெசவுத் தொழிற்சாலை அமைக்க 405 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதன் மூலம் 3,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும்.

அதேபோல் ஜனாடிக்ஸ் இந்தியா நிறுவனம் (Janatics India) தொழிற்சாலை ஆட்டோமேஷன் உதிரிபாகங்கள் மற்றும் பவுண்டரி தயாரிப்புக்கு 250 கோடி ரூபாய் செலவிட்டு 250 பேருக்கு வேலை உருவாக்குகிறது.

இந்த மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கோயம்புத்தூரை மட்டும் செழிப்பாக்கவில்லை; ஈரோடு, திருப்பூர் போன்ற அண்டை மாவட்டங்களுக்கும் பயனளிக்கின்றன. கோயம்புத்தூர் இனி வெறும் “மான்செஸ்டர் ஆஃப் சவுத் இண்டியா” இல்லை; ஐடி, ஆட்டோமொபைல், செமிகண்டக்டர், ஏரோஸ்பேஸ் என பல புதிய துறைகளின் மையமாகவும் மாறி வருகிறது.

Share This Article English summary

MK Stalin speech in Coimbatore TN rising conclave stunned people

MK Stalin speech in Coimbatore TN rising conclave stunned people Story first published: Tuesday, November 25, 2025, 21:05 [IST] Other articles published on Nov 25, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *