கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!!

கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!!

  செய்திகள்

கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!!

News oi-Devika Manivannan By Published: Tuesday, November 25, 2025, 16:06 [IST] Share This Article

கோவை: கோவை மக்கள் 15 ஆண்டுகளாக காத்திருந்த செம்மொழி பூங்கா திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார்.

கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடி ரூபாய் செலவில் உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டிருக்கிறது. இன்று கோயம்புத்தூருக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த செம்மொழி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!!

செம்மொழி பூங்கா கோயம்புத்தூர் நகரத்தின் புதிய அடையாளமாக மாறப்போகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் , காந்திபுரத்தின் அடையாளமாக இது இருக்கும் என அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த முதலமைச்சர் ஸ்டாலின் கோவை செம்மொழி பூங்கா திட்டத்திற்கு உயிர் கொடுத்தார். தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் அரிய வகையிலான தாவரங்கள் ,செடி, கொடிகள் மர வகைகளுடன் இந்த செம்மொழி பூங்காவை வடிவமைத்துள்ளனர். பூங்காவை சுற்றிலும் நடை பயிற்சி செல்லும் வகையில் சுற்றுப்பாதை அமைத்துள்ளனர்.

Also Readகாலரை தூக்கும் கோவையன்ஸ்! டிரெண்டாகும் KovaiAnthem! நம்ம கோவைக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?காலரை தூக்கும் கோவையன்ஸ்! டிரெண்டாகும் KovaiAnthem! நம்ம கோவைக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

பசுமை நிறைந்த ஒரு தளமாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு இடமாகவும் இந்த செம்மொழி பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் பல்வேறு கல்வெட்டுகளும் கடையேழு வள்ளல்களின் சிலைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் பூங்காவை திறந்து வைத்து சிற்பங்களையும் சிலைகளையும் பார்வையிட்டார். மேலும் பூங்காவில் என்னென்ன வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதையும் அவர் சுற்றிப் பார்த்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சரோடு பல்வேறு விஐபிகளும் பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டனர். மொத்தம் 165 ஏக்கர் பரப்பளவில் பூங்கா திட்டமிடப்பட்டுள்ளது இதில் முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. 2023 டிசம்பர் 18 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார் .

Recommended For Youசென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!!சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!!

செம்மொழி வனம் ,மூலிகை வனம், மகரந்த தோட்டம், பாலைவனத் தோட்டம், மூங்கில் தோட்டம் ,ரோஜா தோட்டம் என 23 வகையான தோட்டங்கள் இதில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ரோஜா தோட்டத்தில் 1000க்கும் அதிகமான வகை கொண்ட ரோஜா செடிகள் வைக்கப்பட்டுள்ளன. செண்பக மரம், மிளகு மரம், கடல் திராட்சை என பல்வேறு அரிய வகை மரங்களும் இங்கே நடப்பட்டிருக்கின்றன.

தோட்டங்கள், சிலைகள், சிற்பங்களை விளக்கும் வகையில் கியூஆர் கோடு கொண்ட பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை ஸ்கேன் செய்தாலே குறிப்பிட்ட அந்த செடி தோட்டம் உள்ளிட்டவற்றின் தகவல்களை ஆடியோ வடிவில் நம்மால் கேட்க முடியும் . இது தவிர பெரிய திறந்தவெளி அரங்கம் , உணவகம் கட்டப்பட்டுள்ளன. உடற்பயிற்சி கருவிகள் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் உருவாக்கப்பட்டிருக்கிறது, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் பூங்காவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.

Share This Article English summary

Tamil Nadu Chief Minister Stalin inaugurate much awaited Coimbatore Semmozhi Poonga

Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurates Much awaited Semmozhi Poonga, in Gandhipuram, Coimbatore city. Story first published: Tuesday, November 25, 2025, 16:06 [IST] Other articles published on Nov 25, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *