கோடிக்கணக்கான டன் தங்கம் எங்கே? இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் எவ்வளவு? அதிர வைக்கும் உண்மைகள்? – Allmaa

befunky-collage-2026-02-24t181950-469-1771937449

  செய்திகள்

கோடிக்கணக்கான டன் தங்கம் எங்கே? இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் எவ்வளவு? அதிர வைக்கும் உண்மைகள்?

News oi-Pugazharasi S By Published: Tuesday, February 24, 2026, 18:24 [IST] Share This Article

மனித நாகரிகம் தோன்றியது முதல் தங்கம் என்பது ஒரு வசீகரமான உலோகமாகவே இருந்து வருகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) அறிக்கையின் படி, பூமி தங்கத்தால் நிரம்பி வழிகிறது. இருப்பினும் வரலாற்றில் மனிதர்களால் பாறைகள் மற்றும் ஆறுகளில் இருந்து 2,60,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதால், வரம்பற்றதாகத் தோன்றும் இந்த வளமும் வேகமாக தீர்ந்து போகக் கூடும் என்ற அச்சமும் எழுப்பப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான டன் தங்கம் எங்கே? இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் எவ்வளவு? அதிர வைக்கும் உண்மைகள்?

மனித குலத்தால் இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தின் ஒட்டுமொத்த அளவானது, உலகில் அதிக தங்க இருப்பு வைத்துள்ள முதல் 10 நாடுகளின் மொத்த இருப்பை விடவும் அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட தங்கத்தில் பெரும்பாலானவை நகைகள் மற்றும் இதர அலங்காரப் பொருட்கள் செய்வதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சமீப காலம் வரை இந்த மஞ்சள் உலோகத்திற்கு தொழில்நுட்ப ரீதியான பயன்பாடுகள் ஏதும் இருக்கவில்லை என்று USGS அறிக்கை தெரிவித்துள்ளது.

USGS அறிக்கையின் படி, தொழில் மயமாக்கலுக்கு பிறகு பூமியின் தங்க இருப்பு வேகமாக குறைந்து விட்டது. இருப்பினும், உலகம் முழுவதும் லாபகரமான முறையில் வெட்டி எடுக்கக்கூடிய நிலையில் இன்னும் சுமார் 70,550 டன் தங்கம் எஞ்சி இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. மேலும் தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இன்னும் பயன்படுத்தப்படாத (வெட்டியெடுக்கப்படாத) உலகின் மிகப்பெரிய தங்க இருப்பை கொண்டுள்ளன. அதற்கு காரணம் தங்கம் பூமிக்கு அடியில் ஆழமாக இருப்பதால், அதற்கு ஆகும் செலவு மிக இருக்கலாம் என்பதாலும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
15 ஆண்டுகளில் ரூ.5 கோடி சாத்தியமா? உங்கள் கோடீஸ்வர கனவை நனவாக்கும் முதலீட்டு ஃபார்முலா?
சர்வதேச தங்க கவுன்சில் அறிக்கையின் படி, உலகில் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தில் சுமார் 45% நகைகளாகவும், 22% தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களாகவும் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் மிகக் குறைந்த அளவாக 17% தங்கம் மட்டுமே பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி, சீனா உலகிலேயே அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும், தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் பல நாடுகளுக்கு பின்னால் உள்ளது. தரவுகளின் படி, தங்க இருப்பில் அமெரிக்கா 8,133.46 டன்களுடன் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் ஜெர்மனி 3,351.53 டன்களையும், இத்தாலி 2,451.84 டன்களையும், பிரான்ஸ் 2,436.97 டன்களும், ரஷ்யா: 2,335.85 டன்களையும் கொண்டுள்ளன. அதில் சீனாவின் நிலை தற்போது 2,264.32 டன்கள் தங்க இருப்பை கொண்டு, இப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் சீனா தனது பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்த, எதிர்காலத்தில் தனது தங்க இருப்பை 5,000 டன்களாக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share This Article English summary

Which nations lead in underground gold reserves as global supply dwindles in 2026?

Humans have mined 2,60,000 tonnes of gold. 70,550 tonnes remain underground with Australia, Russia, and South Africa holding the largest reserves. Story first published: Tuesday, February 24, 2026, 18:24 [IST] See More On: gold, gold reserves, தங்கம் Other articles published on Feb 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *