காலை, மாலை என இரு வேளையும் போட்டி போட்டுக் கொண்டு உயரும் தங்கம் விலை!! அப்போ நாளைக்கு என்ன ஆகும்?

gold76-1767612415

  செய்திகள்

காலை, மாலை என இரு வேளையும் போட்டி போட்டுக் கொண்டு உயரும் தங்கம் விலை!! அப்போ நாளைக்கு என்ன ஆகும்?

News oi-Devika Manivannan By Published: Monday, January 5, 2026, 16:59 [IST] Share This Article

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்வு கண்டிருக்கிறது . சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 80 ரூபாய் விலை உயர்ந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை காலை ஒரு கிராம் 12,680 ரூபாயாக விற்கப்பட்டது. ஆனால் மாலையில் திடீரென தங்கத்தின் விலை மேலும் 80 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது இன்று காலை தொடங்கி மாலை வரையிலான இந்த எட்டு மணி நேரத்திலேயே சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது.

காலை, மாலை என இரு வேளையும் போட்டி போட்டுக் கொண்டு உயரும் தங்கம் விலை!! அப்போ நாளைக்கு என்ன ஆகும்?

தற்போது சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 12, 760 ரூபாயை எட்டிருக்கிறது . ஒரு சவரன் தங்கம் என பார்க்கும்போது 1,02,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1280 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது. தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைதான்.

வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்ட திடீர் இராணுவ நடவடிக்கை உலகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழலை உண்டாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து ரஷ்யா, சீனா, கியூபா ஆகியவை ஓரணியில் நிற்கின்றன. அதேவேளையில் டிரம்ப் நிர்வாகமும் வெனிசுலா அதிபரை சிறை பிடித்து நாடு கடத்தி இருக்கிறது . அத்துடன் வெனிசுலா நாட்டில் இருக்கும் எண்ணெய் வளங்களை பயன்படுத்த போவதாக அறிவிப்பு செய்திருக்கிறது.

Also Readதங்கத்தை கொடுத்து கடன் வாங்கலாம் ஆனா வட்டி கட்ட தேவையில்லை!! இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா?தங்கத்தை கொடுத்து கடன் வாங்கலாம் ஆனா வட்டி கட்ட தேவையில்லை!! இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா?

இது அமெரிக்காவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஒரு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. மறுபுறம் பல்வேறு நாடுகளும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்து வருகின்றன. எனவே உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த பதற்றமான சூழல் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி வர செய்திருக்கின்றன.

இந்தியாவில் இன்று எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. அதாவது 10 கிராம் தங்கத்தின் விலை இன்று 1,38,200 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. அதே வேலையில் வெள்ளியின் விலை ஒரு கிலோ இன்றைய நாளில் 2 , 49,090 ரூபாய் என உச்சத்தை தொட்டது .தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த விலை உயர்வு சர்வதேச காரணிகளால் தான் நிகழ்ந்துள்ளது என்பதை இது தெளிவாக காட்டுகிறது.

Recommended For Youஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வெனிசுலா அதிபரை டிரம்ப் தட்டி தூக்கியதன் பின்னணியில் சீனாவா?ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வெனிசுலா அதிபரை டிரம்ப் தட்டி தூக்கியதன் பின்னணியில் சீனாவா?

சென்னையில் 24 கேரட் தங்கமும் ஒரே நாளில் கிராமுக்கு 174 ரூபாய் உயர்ந்து 13 , 920 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,11,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து 10,650 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1200 ரூபாய் விலை உயர்ந்து 85 ,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் விலை உயர்ந்து 266 ரூபாயாகவும் ஒரு கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த கட்டமாக டிரம்ப் நிர்வாகம் வெனிசுலா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது, ரஷ்யாவும் சீனாவும் இந்த விவகாரத்தை எப்படி கையாள போகின்றன என்பதை பொறுத்துதான் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தாக்கம் ஏற்படும் . ஆனால் அடுத்து வரக்கூடிய சில தினங்களுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் என்பது தான் நிபுணர்களின் கருத்து.

Share This Article English summary

Gold rate sees double increase within 8 hours in Chennai

As the US attack against Venezuela and its leader is escalating global gold and silver markets see investment flow thus increasing the price. So does the Chennai market. Story first published: Monday, January 5, 2026, 16:59 [IST] Other articles published on Jan 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *