ஓலா, ஊபருக்கு குட் பை!! பயன்பாட்டுக்கு வந்தது பாரத் டாக்ஸி!! மக்களுக்கு என்ன பயன்?

taxi1-1764760942

  செய்திகள்

ஓலா, ஊபருக்கு குட் பை!! பயன்பாட்டுக்கு வந்தது பாரத் டாக்ஸி!! மக்களுக்கு என்ன பயன்?

News oi-Devika Manivannan By Published: Wednesday, December 3, 2025, 16:53 [IST] Share This Article

நம் நாட்டில்டாக்ஸி சேவையில் ஓலா , ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில் தான் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக மத்திய அரசு பாரத் டாக்ஸி என்ற டாக்ஸி சேவை வழங்கும் செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது .

இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்ஸி சேவை தளமாக இந்த பாரத் டாக்ஸி இயங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. முதல் கட்டமாக டெல்லி மற்றும் குஜராத் ஆகிய நகரங்களில் இந்த பாரத் டாக்ஸி தன்னுடைய முதல் கட்ட சோதனை ஓட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு நகரங்களிலும் இந்த சேவைக்கு கிடைக்கும் வெற்றியை தொடர்ந்து இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் பாரத் டாக்ஸி சேவை என்பது விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.

ஓலா, ஊபருக்கு குட் பை!! பயன்பாட்டுக்கு வந்தது பாரத் டாக்ஸி!! மக்களுக்கு என்ன பயன்?

முழுக்க முழுக்க கார் ஓட்டுநர்களால் இயக்கப்படக்கூடிய ஒரு சேவையாக பாரத் டாக்ஸி இருக்கும் என சொல்லப்படுகிறது. சஹாரிகா கூட்டுறவு என்று அமைப்புதான் பாரத் டாக்ஸியை இயக்கும். இதன் உறுப்பினர்கள் அனைவருமே கார் ஓட்டுநர்கள். இந்த செயலியில் 10 நாட்களிலேயே டெல்லி மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியத்தில் 51 ஆயிரம் ஓட்டுநர்கள் இந்த யில் தங்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சோதனை ஓட்டமாக செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் பாரத் டாக்ஸி சேவை தொடங்கப்பட்டிருக்கிறது . ஆண்ட்ராய்டு வெர்ஷனில் தற்போது கிடைக்கிறது. நாம் எப்படி ஓலா ,ஊபர் செயலிகளை பயன்படுத்துகிறோமோ அதேபோல பாரத் டாக்ஸி சேவையிலும் டாக்ஸி புக் செய்து கொள்ளலாம். நிகழ் நேரத்தில் வாகன நகர்வை நாம் கண்காணித்துக் கொள்ளலாம்.

Also Readதங்கம் வாங்கும் போதே லாபம் பார்க்கணுமா? இந்த இரண்டு ஆப்ஷன் தான் பெஸ்ட்!!தங்கம் வாங்கும் போதே லாபம் பார்க்கணுமா? இந்த இரண்டு ஆப்ஷன் தான் பெஸ்ட்!!

சோதனை ஓட்டத்தில் இந்த செயலியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் வாடிக்கையாளர்கள் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இது ஐஓஎஸ் தளத்திலும் கொண்டுவரப்பட இருக்கிறது. சஹாகார் டாக்ஸி கூட்டுறவு சங்கத்தின் தலைவரான ஜெயன் மேத்தா ஓட்டுனர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என கூறியிருக்கிறார்.

Recommended For Youதங்க நகைகளை போலவே கோல்டு ஈடிஎஃப், கோல்டு பார்களை அடகு வைத்து கடன் வாங்க முடியுமா?தங்க நகைகளை போலவே கோல்டு ஈடிஎஃப், கோல்டு பார்களை அடகு வைத்து கடன் வாங்க முடியுமா?

தனியார் செயலிகளில் ஒவ்வொரு ரைடுக்கும் ஒரு கமிஷன் என்பது டாக்ஸி செயலிகளுக்கு செல்லும், ஆனால் இதில் ஜீரோ கமிஷன் அதாவது வாடிக்கையாளர் செலுத்தும் மொத்த பணமும் ஓட்டுநருக்கு தான் செல்லும். மத்திய அரசின் நேஷனல் இ கவர்ன்மென்ட் பிரிவுதான் இப்படி ஒரு முன்னோட்டம் எடுத்திருக்கிறது. இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்ஸி நெட்வொர்க்காக இது செயல்படும் .

இந்த மாத இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பாரத் டாக்ஸி செயலி என்பது கொண்டுவரப்பட இருக்கிறது. தனியார் செயலிகளை போல பீக் அவர்களின் அதிக கட்டணம் எல்லாம் இதில் கிடையாது. எப்போதுமே குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரே கட்டணம் தான் என்பதால் வாடிக்கையாளருக்கும் இது லாபம் தர கூடியது.

Share This Article English summary

Bharat Taxi competing Ola, Uber and Rapido, has begun trials in Delhi and Gujarat

Bharat Taxi, India’s new cooperative ride-hailing platform, is launching with a zero-commission model started Pilot runs in Delhi and Gujarat. Story first published: Wednesday, December 3, 2025, 16:53 [IST] Other articles published on Dec 3, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *