ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு கிரீன் சிக்னல்?? அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்ட குட் நியூஸ்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 21, 2026, 11:28 [IST] Share This Article
தமிழ்நாடு அரசு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக ஓசூர் பாகலூர் பகுதியில் இடத்தை தேர்வு செய்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்தது.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஓசூருக்கு அருகிலேயே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான வான்வெளி தளம் இருப்பதால் அங்கே சர்வதேச விமான நிலையத்தை அமைப்பது பொருத்தமாக இருக்காது எனக் கூறி ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்தது. இது தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஓசூர் நகரம் தொழில் ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் சர்வதேச விமான நிலையம் அமைத்தால் அந்த நகரம் பொருளாதார ரீதியாக இன்னும் மேம்படும், மேற்கொண்டு பல்வேறு நிறுவனங்களும் அங்கே முதலீடு செய்வதற்கு முன் வரும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. மத்திய அரசு கூறக்கூடிய தொழில்நுட்ப ரீதியிலான காரணங்களுக்கு ஏற்ப ஹெச்ஏஎல் வான்வெளிக்கு எந்த பாதகமும் ஏற்படாத வகையில் ஓசூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதற்கான காரணங்கள் அடங்கிய புதிய அறிக்கையை தயாரிக்கும் பணியில் தமிழ்நாடு அரசு தற்போது ஈடுபட்டு இருக்கிறது.
Also Read
நகை கடன், வேளாண் கடன் தள்ளுபடி? அடுத்தடுத்த மெகா அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்?
இந்த சூழலில் கோவை விமான நிலையத்தில் உதான் யாத்ரி கஃபே எனப்படும் மலிவு விலை உணவு உணவகங்களை திறந்து வைப்பதற்காக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஓசூர் விமான நிலையம் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்ட போது மத்திய அரசு சென்னைக்கு அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு முழுமையான ஒப்புதல் தந்துவிட்டது, அதே வேளையில் ஓசூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம் என தெரிவித்திருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்னர் தான் ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்து விட்டோம் என கூறிய அவர் தற்போது ஆலோசித்து வருகிறோம் என கூறி இருப்பது ஒரு பாசிட்டிவ் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதை வேளையில் கோயம்புத்தூர் விமான நிலையத்தையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப் போவதாக அவர் கூறியிருக்கிறார்.
Recommended For You
ஓசூரே அடியோடு மாறப் போகுது!! டைடல் பார்க் முதல் பேருந்து நிலையம் வரை அடுத்தடுத்த மெகா அறிவிப்புகள்!!
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என கூறும் அவர் கோயம்புத்தூர் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டெர்மினல் அங்கு கட்டப்படும் என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பான ஒப்பந்த புள்ளியை கோருவதற்கு முன்னால் முன்பாக அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டி இருக்கிறது அடுத்த ஐந்து மாதங்களில் கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கிவிடும் என உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.
Share This Article English summary
Hosur Airport: Government is evaluating the proposal says Minister Ram Mohan Naidu
Civil Aviation Minister Ram Mohan Naidu says the govt is evaluating the proposal for Hosur Airport and Coimbatore airport expansion will take off in 5 months. Story first published: Saturday, February 21, 2026, 11:28 [IST] See More On: hosur, airport, election, ஓசூர், விமான நிலையம் Other articles published on Feb 21, 2026
