ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்தை ரூ.1.7 லட்சமாக மாற்றிய முதலீடு!! இப்போ கூட முதலீடு பண்ணலாம்!! – Allmaa

gold-2025-12-25t132942-860-1766649595

  பர்சனல் பைனான்ஸ்

ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்தை ரூ.1.7 லட்சமாக மாற்றிய முதலீடு!! இப்போ கூட முதலீடு பண்ணலாம்!!

Personal Finance oi-Devika Manivannan By Published: Thursday, December 25, 2025, 13:31 [IST] Share This Article

2025 ஆம் ஆண்டு தங்கத்திற்கான ஆண்டு எனக் கூறும் அளவிற்கு தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டி இருக்கிறது. சில்லறை விற்பனையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை கடந்து விட்டது . 2025 தொடங்கிய போது தங்கத்தின் விலை இவ்வளவு உயரும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் .

தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே கூறலாம். பங்குச்சந்தை, பத்திரங்கள் எல்லாம் பக்கத்தில் கூட வர முடியாது என கூறும் அளவுக்கு இந்த முதலீடு பெரிய லாபம் தந்துள்ளது. தங்கத்தில் முதலீடு என்றால் தங்கத்தை நகையாக வாங்குவது என அர்த்தம் கிடையாது. தங்கத்தை நகையாக வாங்கும்போதே செய்கூலி சேதாரம் என ஒரு 20 சதவீத நஷ்டமாக தான் தங்க நகையாகவே வாங்குகிறோம்.

ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்தை ரூ.1.7 லட்சமாக மாற்றிய முதலீடு!! இப்போ கூட முதலீடு பண்ணலாம்!!

இதனால் முதலீடு நோக்கமாக இருந்தால் தங்கத்தை நகையாக வாங்காமல் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள் என முதலீட்டு துறை நிபுணர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர் . அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு மிகச்சிறந்த லாபம் தந்தவையாக கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் உள்ளன.

ஈடிஎஃப் என்பது எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட்ஸ், இதில் நாம் தங்கத்தை யூனிட்களாக வாங்கலாம். 100 ரூபாய் முதலே தங்கம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த தங்கத்தை நாம் தொட்டு பார்க்கவோ ஆபரணமாகவோ மாற்ற முடியாது. இது ஒரு மெய்நிகர் தங்கம் என வைத்து கொள்ளலாம். இந்த தங்கத்தை பங்குச்சந்தை நடக்கும் சமயங்களில் நாம் வாங்கலாம், விற்கலாம். தங்கம் விலை ஏறுவதற்கு ஏற்ப ஈடிஎஃப்களின் மதிப்பும் ஏறும்.

Also Readவெள்ளி விலை: 2025இல் நடந்தது ஒரு டிரெய்லர் தான்!! 2026இல் தான் சம்பவமே இருக்கு – ராபர்ட் கியோசாகி!!வெள்ளி விலை: 2025இல் நடந்தது ஒரு டிரெய்லர் தான்!! 2026இல் தான் சம்பவமே இருக்கு – ராபர்ட் கியோசாகி!!

இந்தியாவில் பல்வேறு முன்னணி ஈடிஎஃப் திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒரு ஈடிஎஃப் திட்டத்தை தேர்ந்தெடுத்து ஜனவரி 1ஆம் தேதி அதன் மதிப்பு என்ன இன்றைய தேதியில் அதன் மதிப்பு என்ன , ஜனவரி 1ஆம் தேதி அதில் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால் இன்றைய தேதியில் அதன் மதிப்பு என்னவாக வளர்ந்திருக்கும் என்பது குறித்து நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்தை ரூ.1.7 லட்சமாக மாற்றிய முதலீடு!! இப்போ கூட முதலீடு பண்ணலாம்!!

எஸ்பிஐயின் கோல்டு ஈடிஎஃப் திட்டம் இந்தியாவின் முன்னணி ஈடிஎஃப் திட்டமாக உள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி அன்று இதன் ஒரு யூனிட்டின் மதிப்பு 68 ரூபாயாக இருந்தது இன்றைய தினம் இதன் ஒரு யூனிட் மதிப்பு 116.75 ரூபாயாக இருக்கிறது . அதாவது ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து இன்று வரையிலான இந்த 12 மாத காலத்தில் ஒவ்வொரு யூனிட்டின் மதிப்பும் 70.59 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

அப்படி பார்க்கும்போது நீங்கள் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று இதில் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால் இன்றைய தேதியில் அதன் மதிப்பு 1, 71, 729 ரூபாயாக இருந்திருக்கும். அதாவது உங்களுக்கு 71 ஆயிரம் ரூபாய் லாபமாக மட்டுமே கிடைத்திருக்கும். ஈடிஎஃப் திட்டங்கள் செபியின் கட்டுக்குள் வருவதால் நம்பி இவற்றில் முதலீடு செய்யலாம்.

Recommended For Youநடப்பாண்டில் 100% லாபம் தந்த Silver ETF: எப்படி முதலீடு செய்வது? விரிவான வழிகாட்டிநடப்பாண்டில் 100% லாபம் தந்த Silver ETF: எப்படி முதலீடு செய்வது? விரிவான வழிகாட்டி

தங்கத்தை நான் முதலீடாக மட்டும் தான் பார்க்கிறேன் என்பவர்களுக்கு தங்க நகைகளுக்கு மாற்றாக மிகச்சிறந்த வாய்ப்புகளாக கோல்டு etf திட்டங்கள் இருக்கின்றன. தற்போது உள்ள நிலைமையில் பார்க்கும்போது 110 ரூபாயில் இருந்தே நம் முதலீட்டை தொடங்க முடியும் . எனவே தற்போது கூட தாமதம் கிடையாது. தங்கத்தின் விலை ஒவ்வொரு ஆண்டும் உயர தான் போகிறது என்பதால் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என முதலீட்டு துறை நிபுணர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர் .

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

How much Gold ETFs have returned year to date: your 1 lakhs in now?

Gold has given a massive return to the investors in 2025. Here is how much a person earned by investing in gold etfs schemes. Story first published: Thursday, December 25, 2025, 13:31 [IST] Other articles published on Dec 25, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *