ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனத்தை வாங்குகிறாரா எலான் மஸ்க்? பரபரக்கும் எக்ஸ் பதிவு!!

musk5-1768973566

  செய்திகள்

ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனத்தை வாங்குகிறாரா எலான் மஸ்க்? பரபரக்கும் எக்ஸ் பதிவு!!

News oi-Devika Manivannan By Published: Wednesday, January 21, 2026, 11:13 [IST] Share This Article

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா, விண்வெளி தொழில்நுட்பத்தில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ், இணைய சேவை வழங்கக்கூடிய ஸ்டார்லிங்க், சமூக வலைதள செயலியான எக்ஸ் என பல்வேறு நிறுவனங்களுக்கு உரிமையாளராக இருக்கிறார் எலான் மஸ்க். உலகின் நம்பர் ஒன் பணக்காரராகவும் செயல்பட்டு வருகிறார்.

எலான் மஸ்க் திடீரென ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனத்தை வாங்கலாமா என்பது குறித்து எக்ஸ் பக்கத்தில் நடத்திய விவாதம் சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஐரோப்பாவில் சேர்ந்த மிகப்பெரிய விமான சேவை வழங்கக்கூடிய நிறுவனம் ரியான் ஏர். அயர்லாந்தை தலைமை இடமாகக் கொண்டு இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவை நடத்தி வருகிறது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனத்தை வாங்குகிறாரா எலான் மஸ்க்? பரபரப்பில் எக்ஸ்

1984 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனம் 235 இடங்களுக்கு விமான சேவையை வழங்குகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் மைக்கேல் லியரி. ரியான் ஏர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மைக்கேலுக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே வார்த்தை மோதல்கள் நீடித்து வருகின்றன.

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை ரியான் ஏர் நிறுவன விமானங்களில் பயன்படுத்திக் கொள்ளுமாறு எலான் மஸ்க் நிறுவனம் கேட்டிருக்கிறது. இதன்மூலம் ரியான் ஏர் நிறுவனத்தின் 600க்கும் அதிகமான விமானங்களில் பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு வைஃபை உள்ளிட்ட அதிவேக இணைய சேவை கிடைக்கும் என ஸ்டார்லிங்க் கூறியது.

Also Readசாமானியர்கள் வாங்க முடியாத விலையில் தங்கம்!! ஒரு சவரன் ரூ.1.25 லட்சத்தை நெருங்கியதுசாமானியர்கள் வாங்க முடியாத விலையில் தங்கம்!! ஒரு சவரன் ரூ.1.25 லட்சத்தை நெருங்கியது

ஆனால் ரியான் ஏர் நிறுவனம் தங்களுடைய பயணிகள் பெரும்பாலும் குறைந்த தூரத்தில் குறைந்த கால அளவில் பயணம் செய்பவர்கள் அவர்களுக்கு வைஃபை தேவை இல்லை என்றும் தற்போது ஸ்டார்லிங்க் இணைப்பை ஏற்படுத்தி வைஃபை வசதி கொடுத்தால் விமான சேவை கட்டணத்தை உயர்த்த வேண்டி இருக்கும் எங்களுக்கு அது கூடுதல் செலவையும் கூடுதல் எரிபொருள் செலவையும் ஏற்படுத்தும் என கூறி ஸ்டார்லிங்கின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இது எலான் மஸ்கிற்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரியான் ஏர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஒரு முட்டாள் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும் ரியான் ஏர் விமான சேவை நிறுவனத்தை நான் வாங்கட்டுமா என அவர் கேட்டிருந்தார். அதற்கு 9 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர் பலரும் வாங்குங்கள் என கூறி இருக்கின்றனர்.

Recommended For You EPS-95 ஓய்வூதிய தொகையை ரூ.10,000ஆக உயர்த்துகிறதா மத்திய அரசு? பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறதா? EPS-95 ஓய்வூதிய தொகையை ரூ.10,000ஆக உயர்த்துகிறதா மத்திய அரசு? பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறதா?

ஆனால் எலான் மஸ்க் அத்தனை எளிதாக ரியான் ஏர் நிறுவனத்தை வாங்கி விட முடியாது. ஐரோப்பா ஒன்றிய நாடுகளின் ஒழுங்குமுறை விதிகளின்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த ஒரு நிறுவனத்தை வாங்க வேண்டும் என்றால் அந்த நபர் ஐரோப்பிய ஒன்றிய தேசிய நாட்டவராக இருக்க வேண்டும்.

இதற்கிடையே ரியான் ஏர் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் பணக்காரர், ஆனால் அவர் ஒரு முட்டாள் என கூறியுள்ளார். அவரின் உளறல் பேச்சுகளை பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள் என தெரிவித்துள்ளார். முன்னதாக எலான் மஸ்க் இப்படி தான் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து டிவிட்டரை கைப்பற்றினார் அதனை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார்.

Share This Article English summary

Elon Musk Proposes Buying Ryanair,After CEO Clash regarding starlink

Elon Musk suggested acquiring Ryanair following a public online dispute with CEO Michael O’Leary over Starlink satellite internet for aircraft. Story first published: Wednesday, January 21, 2026, 11:13 [IST] Other articles published on Jan 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *