ஐடி வேலைகளுக்கே டஃப் தரும் புது யுக வேலைகள்! 2024ல் இல்லாத, 2025-ல் லட்சங்களில் சம்பளம் தரும் வேலை! – Allmaa

befunky-collage65-1766143923

  செய்திகள்

ஐடி வேலைகளுக்கே டஃப் தரும் புது யுக வேலைகள்! 2024ல் இல்லாத, 2025-ல் லட்சங்களில் சம்பளம் தரும் வேலை!

News oi-Pugazharasi S By Published: Friday, December 19, 2025, 17:02 [IST] Share This Article

உலகம் சுத்துற வேகத்தை விட, டெக்னாலஜி வளர்ந்து வர்ற வேகம் ரொம்ப அதிகம் பாஸ். 2024ல் இப்படி ஒரு வேலை இருந்தா நல்லா இருந்திருக்குன்னு, நாம் கற்பனை பண்ணி கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் 2025ல் அந்த வேலைகளுக்கு தான் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் தர்றாங்க. அதில் சில வேலைகள் பழைய சிலபஸ்ல இல்லாத, ஆனா இன்னைக்கு மார்க்கெட்டில் பயங்கர டிமாண்ட்ல இருக்குற அந்த New-Age வேலைகள் என்னென்ன? நீங்க ஒரு காலேஜ் ஸ்டூடண்டா இருந்தாலும் சரி, இல்ல கரியரை மாத்த நினைக்கிறவங்களா இருந்தாலும் சரி… உங்கள் தலையெழுத்தையே மாத்தப்போற அந்த 5 வேலைகளைப் பத்தி தெரிஞ்சுக்க ரெடியா? வாங்க பார்க்கலாம்.

ஐடி வேலைகளுக்கே டஃப் தரும் புது யுக வேலைகள்! 2024ல் இல்லாத, 2025-ல் லட்சங்களில் சம்பளம் தரும் வேலை!

என்ன மாற்றம் நடந்திருக்கு?

கடந்த 2024ம் ஆண்டில், இந்த வேலைகள் வெறும் சோதனை கட்டத்திலோ, ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இருந்தன அல்லது மற்ற வேலைகளோடு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு ஆண்டில் அப்படியில்லை. செயற்கை நுண்ணறிவு (AI), சுற்றுச்சூழல் மாற்றங்கள், புதிய அரசு விதிமுறைகள் மற்றும் மக்களின் கற்றல் மற்றும் வேலை செய்யும் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, அவை தெளிவாக வரையறுக்கப்பட்ட அதிக சம்பளம் தரும் பணிகளாக உருவெடுத்துள்ளது. இதில் பலரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், இவற்றில் பெரும்பாலான பணிகள், குறிப்பாக இந்தியாவின் பெருநகரங்களிலும், சர்வதேச அளவில் செயல்படும் நிறுவனங்களிலும், மாதம் 1 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொடக்கச் சம்பளத்தை வழங்குகின்றன. அவற்றை பற்றி விரிவாக ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு

2024-ன் தொடக்கம் முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சம்பந்தமான முடிவுகள், காப்புரிமை மீறல்கள் மற்றும் தரவு தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகள் வெறும் விவாதங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அரசாங்கங்களும், ஏஐ கட்டமைப்புகளை கட்டாயமாக்கத் தொடங்கியதும் நிலைமை வேகமாக மாறியுள்ளது.

AI எதிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகள் சட்டத்துறை, தொழில்நுட்பத் துறை மற்றும் தயாரிப்பு குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். AI அமைப்புகள் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை உறுதி செய்தல், அல்காரிதம்களில் ஏற்படும் பாரபட்சங்களை குறைத்தல் மற்றும் தானியங்கி முடிவுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல் ஆகியவையே அவர்களின் முக்கியப் பணி. இன்னும் இதை தெளிவாக கூற வேண்டுமானால், முன்பெல்லாம் ஏஐ என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது ஏஐ செய்யும் தவறுகளுக்கு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற சட்டம் வந்துவிட்டதால், அதைச் சரியாகக் கண்காணிக்க இந்த ஏஐ எதிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகள் தேவைப்படுகிறார்கள்.

யார் வேலைக்கு எடுக்கிறார்கள்: ஆக ஏஐ-யில் கைதேர்ந்த நிபுணர்களை தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், சுகாதாரத்துறை தளங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் பணியில் அமர்த்தலாம். இவர்களுக்கு சம்பளம் பொதுவாக மாதம் 1.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் ரூபாய் வரை இருக்கும். அவர்கள் மேற்கண்ட பணிகளுக்கான பின்னணி சட்டம் (Law), பொதுக் கொள்கை (Public policy), கணினி அறிவியல் (Computer science) அல்லது தரவு அறிவியல் (Data ethics) உள்ளிட்டவை அடங்கும்.

கிளைமேட் ரிஸ்க் அனலிஸ்ட் (Climate Risk Analyst)

இந்தியா முழுவதும் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகள், திடீர் வெள்ளப் பெருக்குகள் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு பிறகு, 2024-ல் காலநிலை மாற்றம் என்பது வெறும் ஒரு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்த விஷயமாக மட்டும் இல்லாமல், ஒரு நிதி சார்ந்த அபாயமாக பார்க்கப்படுகிறது.

கிளைமேட் ரிஸ்க் அனலிஸ்ட்கள் காலநிலை நிகழ்வுகள் எப்படி ரியல் எஸ்டேட் வணிகம், உள்கட்டமைப்பு துறை, இன்சூரன்ஸ், விவசாயம் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்த ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். அவர்களின் தரவுகள் மற்றும் ஆய்வுகள், இப்போது வங்கிகளின் கடன் வழங்கும் முடிவுகள், காப்பீட்டு பிரீமியம் தொகைகள் மற்றும் நகரத் திட்டமிடல் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆக எதிர்காலத்திலும் இந்த வகையான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

இந்த வகையான ஆய்வாளர்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள், ESG (Environmental, Social, and Governance) ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பணியமர்த்துகின்றன. இவர்களுக்கு சம்பளம் இந்தியாவில் மாதம் 1 லட்சம் ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். அவர்கள் சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental science), பொருளாதாரம் (Economics) அல்லது டேட்டா அனலிஸ்ட் (Data analysis) உள்ளிட்ட படிப்புகளைப் படித்திருக்க வேண்டும்.

ஏஐ ப்ராடக்ட் மேனேஜர் (AI Product Manager)

ப்ராடக்ட் மேனேஜர் என்ற பதவி ஏற்கனவே நடைமுறையில் இருந்தது தான். ஆனால், நிறுவனங்களின் முக்கிய வேலைகளில் ஜெனரேடிவ் ஏஐ கருவிகள் பயன்படுத்த தொடங்கிய பிறகு, ஏஐ-க்கான பிரத்யேக ப்ராடக்ட் மேனேஜ்மென்ட் என்பது ஒரு தனித்துவமான பணியாக உருவெடுத்தது.

ஏஐ ப்ராடக்ட் மேனேஜர்கள், பொறியாளர்கள், டேட்டா சயின்டிஸ்ட் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார்கள். ஒரு ஏஐ மாடலை எப்படி செயல்படுத்துவது, அதை எப்படி கண்காணிப்பது மற்றும் மேம்படுத்துவது போன்ற முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள். அதே நேரத்தில் அந்த அமைப்பின் செயல்பாடு, அறநெறி மற்றும் செலவு ஆகியவற்றை சமமாக நிர்வகிப்பதும் அவர்களின் பொறுப்பாகும்.

அவர்களை சாஸ் (SaaS) நிறுவனங்கள், ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் பெரிய கார்ப்பரேட் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன. அவர்களுக்கான சம்பளம் பொதுவாக 1.5 – 2.5 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். அவர்கள் பொறியியல், ப்ராடக்ட் மேனேஜ்மென்ட் அல்லது அனலிட்டிக்ஸ் கல்வி பின்னணியைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனர்

கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் புதிய வழிமுறைகள் காரணமாக லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனர் பணியானது உருவானது. இவர்கள் ஏ ஐ பயன்படுத்தி ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பார்கள். இது கல்வியை போதிக்கும் முறை, உளவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு பணியாகும். இதுபோன்ற பணியாளர்களை பல்கலைக்கழகங்கள், கார்ப்பரேட் பயிற்சி குழுக்கள், திறன் மேம்பாட்டு தளங்கள் போன்ற இடங்களில் பணியமர்த்துகின்றன. அவர்களுக்கான சம்பளம் 1 – 1.6 லட்சம் ரூபாயாக இருக்கலாம்.

பிராம்ட் இன்ஜினியர்

நடப்பு ஆண்டில் இது ஒரு முறையான வேலையாக மாறியுள்ளது. அவர்கள் நிறுவனங்களுக்காக பிராம்ட் லைப்ரரிகளை உருவாக்குவார்கள். ஏஐ தரும் பதில்கள் துல்லியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வார்கள். அவர்களை டெக் நிறுவனங்கள், கன்சல்டிங் நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன. அவர்களுக்கான சம்பளம் 1 – 1.8 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். அவர்கள் கன்டென்ட் ஸ்ட்ராடஜி, டேட்டா அனாலிசிஸ் உள்ளிட்ட கல்வி பின்னணியை கொண்டிருக்க வேண்டும்.

வெர்னாகுலர் யுஎக்ஸ் டிசைனர் (Vernacular UX designer)

இந்தியாவின் 50 கோடி பயனாளர்கள் ஆங்கிலம் தெரியாதவர்கள். அவர்களுக்காக தாய்மொழியிலேயே டிஜிட்டல் தளங்களை வடிவமைக்க வேண்டிய தேவையானது 2024ல் அதிகரித்தது. இதனால் இந்திய மொழிகளில் சிந்திக்கும், படிக்கும் மக்களுக்காகச் செயலிகளையும், இணையதளங்களையும் கலாச்சார ரீதியாக வடிவமைப்பதே வெர்னாகுலர் யுஎக்ஸ் டிசைனர்களின் வேலையாக இருக்கிறது. குறிப்பாக ஃபின்டெக் நிறுவனங்கள், அக்ரி டெக், அரசுத் திட்டத் தளங்கள் உள்ளிட்டவை அடங்கும். இவர்கள் டிசைனிங், மொழியியல் படித்தவர்களாக இருக்க வேண்டும், இவர்களுக்கும் சம்பளம் 1 லட்சத்திற்கு மேல் இருக்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Which new-age jobs are paying over Rs 1 lakh per month in 2025?

In 2025, new-age roles like AI Ethics Specialists, Climate Risk Analysts, and Prompt Engineers are commanding salaries exceeding ₹1 lakh per month Story first published: Friday, December 19, 2025, 17:02 [IST] Other articles published on Dec 19, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *