ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம், வெள்ளி விலை.. நாளைக்கு எப்படியிருக்கும்..? – Allmaa

gold18-1767800065

  செய்திகள்

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம், வெள்ளி விலை.. நாளைக்கு எப்படியிருக்கும்..?

News oi-Prasanna Venkatesh By Published: Wednesday, January 7, 2026, 21:04 [IST] Share This Article

சென்னை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் காலை நேரத்தில் தங்கம், வெள்ளி இரண்டும் தடாலடியாக உயர்ந்த நிலையில், மாலை வர்த்தகத்தில் டமாள் என சரிந்தது. மாலை வர்த்தகத்தில் சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தடாலடியாக உயர்ந்தது. இந்த உயர்வு சர்வதேச சந்தை போக்கின் எதிரொலியாக நடந்தது.
10 கிராம் 22 கேரட் தங்கம்: ரூ.1,28,700 (ரூ.400 உயர்வு)
10 கிராம் 18 கேரட் தங்கம்: ரூ.1,07,350 (ரூ.350 உயர்வு)
1 கிலோ வெள்ளி: ரூ.2,83,000 (ரூ.12,000 உயர்வு)

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம், வெள்ளி விலை.. நாளைக்கு எப்படியிருக்கும்..?

இன்று மாலை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு கண்டுள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம்: ரூ.1,28,000 (ரூ.700 குறைவு)
10 கிராம் 18 கேரட் தங்கம்: ரூ.1,06,800 (ரூ.550 குறைவு)
1 கிலோ வெள்ளி: ரூ.2,77,000 (ரூ.6000 குறைவு)

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களில் தொடர்ந்து உயர்ந்து வந்ததற்கு முக்கிய காரணம் அமெரிக்கா-வெனிசுலா இடையே ஏற்பட்ட அரசியல் பதட்டமாகும். இந்த மோதல் உலக அளவில் பாதுகாப்பு கவலையை அதிகரித்ததால், முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பான சொத்துகளை நோக்கி திரும்பினர். இதனால் சர்வதேச சந்தையில் இவற்றின் தேவை உயர்ந்து விலை அதிகரித்தது.

ஆனால் தற்போது சூழல் மாறியுள்ளது. அமெரிக்கா-வெனிசூலா பிரச்சினை அமைதியடைந்திருப்பதாலும், வெனிசூலா தரப்பில் எதிர்த்தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லை என்ற உறுதியான நிலை உருவானதாலும், வெனிசூலா பங்குச் சந்தை ஒரே வர்த்தக நாளில் 50 சதவீதம் வரை பெரிய உயர்வைப் பதிவு செய்துள்ளது. இது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக, பொதுவாக நெருக்கடி காலத்தில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளிக்கான உலகளாவிய தேவை குறையத் தொடங்கியுள்ளது. இது ஸ்பாட் சந்தை (உடனடி விற்பனை) மற்றும் ஃபியூச்சர்ஸ் சந்தை (எதிர்கால ஒப்பந்தங்கள்) ஆகியவற்றில் விலை சரிவடைவது தெளிவாகத் தெரிகிறது.

இந்த நிலையில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா வர்த்தகம் துவங்கியிருக்கும் வேளையில் இந்த சரிவு பாதை தொடர்கிறது. இதனால் காலை வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கத்தின் விலை 4490 டாலராக இருந்த நிலையில் மாலை வர்த்தகத்தில் 4426 டாலர் வரையில் குறைந்துள்ளது.

இதேபோல் ஒரு அவுன்ஸ் 82 டாலரில் இருந்து 76.55 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதன் மூலம் நாளை ஆசிய சந்தையில் சிறிய தடுமாற்றம் இருந்தைாலும், இந்திய ரீடைல் சந்தையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிவு பாதையில் தான் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

Share This Article English summary

Gold and Silver Prices Drop Sharply from Morning Levels in India: Latest Rates and January 8, 2026 Forecast

Gold and Silver Prices Drop Sharply from Morning Levels in India: Latest Rates and January 8, 2026 Forecast Story first published: Wednesday, January 7, 2026, 21:04 [IST] Other articles published on Jan 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *