ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 9:25 [IST] Share This Article
இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை விரைவில் உயர்த்தப் போகின்றன என சில தினங்களுக்கு முன்னர் தான் தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் ஏர்டெல் நிறுவனம் சைலன்டாக அதனை நடைமுறைக்கு கொண்டு வந்து கொண்டு வந்து இருக்கிறது.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குவதில் ஏர்டெல், ஜியோ,வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் படிப்படியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துகின்றன. ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய மினிமம் ரீசார்ஜ் திட்டத்தை திடீரென நீக்கி இருக்கிறது.

தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அனைத்துமே டேட்டா அடிப்படையிலான ரீசார்ஜ் திட்டங்களை நோக்கி வாடிக்கையாளர்களை கொண்டு வருவதற்காக பேசிக் ரீசார்ஜ் திட்டங்களை படிப்படியாக நீக்கி வருகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வேறு வழி இல்லாமல் கூடுதல் கட்டணத்திற்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய 189 ரூபாய் மதிப்பிற்கான வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் பிளானை திடீரென நீக்கி இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான பட்ஜெட் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த ஒரு ரீசார்ஜ் திட்டம் தான் இந்த 189 ரூபாய் ரீசார்ஜ் பிளான். இணைய வசதி தேவையில்லை, வாய்ஸ் கால் வசதி மட்டும் இருந்தால் போதும் என இருந்த வாடிக்கையாளர்கள் , குறிப்பாக வயதானவர்கள் பட்டன் போன் பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் பயன்படுத்திய 189 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் தான் தற்போது நீக்கப்பட்டிருக்கிறது.
Also Read
மிடில் கிளாஸ் மக்களே இனி மாத பட்ஜெட் எகிறப் போகுது!! ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல், ஜியோ!!
எனவே தற்போது ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமே 199 ரூபாயாக இருக்கிறது . இதுநாள் வரை 189 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இனி இந்த 199 ரீசார்ஜ் திட்டத்தை தான் பயன்படுத்தியாக வேண்டும். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மொத்தமாக 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதிகள் இருக்கின்றன.
ஏர்டெல் , ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் வெளிப்படையாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாமல் இப்படி பேசிக் ரீசார்ஜ் திட்டங்களை நீக்குவதன் மூலம் வேறு வழி இல்லாமல் வாடிக்கையாளர்களை அதிகபட்ச தொகை கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை நோக்கி தள்ளுகின்றன. அப்படி ஒரு நடவடிக்கை தான் இது.
Recommended For You
2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!
குறிப்பாக டேட்டா வழங்கக்கூடிய பிளான்களை அடிப்படையாகக் கொண்டு வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களை அனைத்தையும் இந்த தனியார் தொலைதொடர்வு சேவை நிறுவனங்கள் நீக்கி வருகின்றன. அண்மையில் தான் ஏர்டெல் ,ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்களை 15 லிருந்து 20% வரை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதனை வெளிப்படையாக மேற்கொள்ளாமல் இப்படி சைலண்டாக நடைமுறைக்கு கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
Share This Article English summary
Airtel is discontinuing its voice only plan impacting budget users
Airtel has recently phased out its Rs 189 voice-only recharge plan, impacting budget-conscious users who relied on it for unlimited calling without the need for internet. Story first published: Wednesday, November 12, 2025, 9:25 [IST] Other articles published on Nov 12, 2025
