எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் ஊழியர்கள் தான் நிறுவனத்தின் இதய துடிப்பு: Verizon CEO உருக்கம்
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 15:46 [IST] Share This Article
உலகம் முழுவதும் பல டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்த வண்ணம் இருக்கின்றன. அன்றாடம் ஒரு நிறுவனம் பணி நீக்கம் என்ற அறிவிப்பை வெளியிடுகிறது. அமெரிக்காவை சேர்ந்த வெரிசான் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 13 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.
அமேசான், ஆப்பிள், ஹெச்பி, இண்டெல் என தொடர்ச்சியாக நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வெரிசான் நிறுவனம் ஒரே அடியாக 13,000 பேரை நீக்குவது என அறிவித்தது அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வெரிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான எர்வின் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு உணவுப்பூர்வமான ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.

இன்றைய பொழுது இப்படி விடிந்திருக்க கூடாது என கூறி தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அவர், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றம் தேவைப்படுகிறது என்பதை மறுக்க முடியாது, ஆனால் ஒரு சிறந்த நிறுவனத்தின் இதயமாக எப்போதுமே அதன் ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார் .
ஒரு சாதாரண ஊழியராக இருந்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற பொறுப்பு வரை உயர்ந்த எர்வின் , 2022ஆம் ஆண்டு தான் அந்த பதவியில் இருந்து விலகினார். வெரிசான் நிறுவன கட்டமைப்பில் முக்கிய பங்காற்றியவர் என்ற முறையில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர் வேலை என்பது ஒரு நபரின் அடையாளம், அந்த அடையாளம் இல்லை என்பது தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு என கூறியுள்ளார்.
Also Read
அமேசான், ஆப்பிளை தொடர்ந்து HP நிறுவனத்திலும் பணிநீக்கம்..! எல்லாம் AI படுத்தும் பாடு!!
ஆனால் ஊழியர்கள் துவண்டுபோக கூடாது, இங்கே கிடைத்த அனுபவம் நிச்சயம் மற்ற இடங்களில் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் , புதிய கதவுகள் உங்களுக்காக திறக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கே உங்களுக்கு கிடைத்த அனுபவம் ஒருபோதும் உங்களை விட்டு மறைந்துவிடாது இதுவே உங்களுக்கு புதிய வாய்ப்புகளை தேடி தரும் என அவர் குறிப்பிடுகிறார் .
Recommended For You
மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!!
வெரிசான் நிறுவனத்தில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் அகற்ற முடியாது என கூறியிருக்கும் அவர் மனிதநேயமே இல்லாத மாற்றங்கள் சிறந்த தலைமைத்துவத்தை குறிப்பிடாது என சுட்டிக்காட்டியுள்ளார். தொழில்நுட்பம் ஒரு நிறுவனத்தை மாற்றாது மனிதர்கள் தான் மாற்றுவார்கள் என தெரிவித்திருக்கிறார். இந்த ஏஐ தொழில்நுட்ப காலத்தில் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் மனிதநேயத்துடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் உங்களுடைய கதை உங்களுடைய வெரிசானோடு முடிந்துவிடவில்லை எனக் கூறியிருக்கும் அவர் இனி உங்களுக்கு பிரகாசமான வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.
Share This Article English summary
Verizon ex CEO says that technology doesn’t transform a company, People do.
As Verizon announces 13,000 job cut, the former CEO says technological advancement is needed but “people remain the heart of every great company”. Story first published: Wednesday, November 26, 2025, 15:46 [IST] Other articles published on Nov 26, 2025