உங்க PF கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குனு தெரிஞ்சுக்கனுமா? ஒரே SMS போதும்..!! – Allmaa

pfbalance-1770547189

  வகுப்புகள்

உங்க PF கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குனு தெரிஞ்சுக்கனுமா? ஒரே SMS போதும்..!!

Classroom oi-Devika Manivannan By Published: Sunday, February 8, 2026, 16:11 [IST] Share This Article

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தான் இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் நாம் வேலை செய்யும்போது நம்முடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை பிஎஃப் (pf) கணக்கில் பங்களிப்பாக செய்து விடுவார்கள்.

அதே போல நாம் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் நமக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். ஒவ்வொரு மாதமும் இந்த தொகை நம்முடைய pf கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு அரசு ஆண்டுதோறும் வட்டியும் வழங்குகிறது. இப்படி நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை பணி ஓய்வு பெற்ற பின்னர் தான் எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் கிடையாது.

உங்க PF கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குனு தெரிஞ்சுக்கனுமா? ஒரே SMS போதும்..!!

ஏதேனும் ஒரு அவசர பண தேவை ஏற்படுகிறது என்றாலும் விண்ணப்பம் செய்து ஒரு குறிப்பிட்ட அளவிலான பணத்தை நாம் எடுத்து பயன்படுத்த முடியும். அவ்வப்போது உங்களுடைய பிஎஃப் கணக்கில் உங்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் நிறுவனம் சார்பாக பங்களிப்பு செய்ய வேண்டிய தொகையும் வரவு வைக்கப்படுகிறதா என்பதை பரிசோதனை செய்து பார்த்துக்கொள்வது நல்லது.

அந்த வகையில் உங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை ஒரு எஸ்எம்எஸ் வாயிலாகவே மிக எளிமையாக தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். உங்களுடைய பிஎஃப் கணக்கோடு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து பின் வரக்கூடிய முறையில் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். EPFOHO UAN ENG என்ற முறையில் இந்த 7738299899 எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.

Also Readஇன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்?இன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்?

உதாரணமாக உங்களின் யுஏஎன் நம்பர் 12345678910 என வைத்து கொள்வோம் , உங்களுக்கு விருப்பமான மொழி ஆங்கிலம் என வைத்து கொள்வோம், அப்படி என்றால் நீங்கள் EPFOHO 12345678910 ENG என 7738299899 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.

நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்பிய உடனே பிஎப் அமைப்பு உங்களுக்கு உங்களுடைய கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரத்தை எஸ்எம்எஸ் வாயிலாகவே உங்களுக்கு அனுப்பி வைத்து விடும். இதற்கு உங்களுக்கு ஒரு நிமிடம் கூட தேவைப்படாது. அடுத்ததாக உங்களுடைய மொபைல் ஃபோனில் மிஸ்டு கால் வாயிலாகவும் நம் பேலன்ஸ் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Recommended For Youநான் தங்கம் மட்டும் வாங்கவே மாட்டேன்: தங்கத்தில் முதலீடு செய்யாமலேயே உலக பணக்காரரான வாரன் பஃபெட்..!!நான் தங்கம் மட்டும் வாங்கவே மாட்டேன்: தங்கத்தில் முதலீடு செய்யாமலேயே உலக பணக்காரரான வாரன் பஃபெட்..!!

உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் ஒரு ரிங்கிலேயே கால் கட்டாகிவிடும். இதனை அடுத்து உங்களுடைய ரிஜிஸ்டர் மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் முறையில் உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று விவரம் தெரிய வந்துவிடும்.

இல்லை என்றால் உங்களுடைய ஃபோனில் Umang செயலி பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் இபிஎப்ஓ என கிளிக் செய்து பாஸ்புக் என்ற ஆப்ஷனில் கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய யுஏஎன் நம்பரை உள்ளீடு செய்தால் உங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

Share This Article English summary

3 Easy Mobile Methods to Check PF Balance from Home in Minutes

These are the three straightforward ways to verify your Employees’ Provident Fund (EPF) balance using just your mobile phone, without visiting an office. Story first published: Sunday, February 8, 2026, 16:11 [IST] See More On: pf, epfo, balance, பிஎஃப், பேலன்ஸ் Other articles published on Feb 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *