இயற்கையை ரசிக்க மலை உச்சிக்கு சென்ற 4 இளைஞர்கள், கீழே இறங்க முடியாமல் இரவு முழு வதும் பரிதவித்தனர்.

இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கண்ணனூர் விளாகத்தை சேர்ந்தவர் ஜெபவிஜி (வயது 25). இவருடைய நண் பர்கள் வலியவிளையை சேர்ந்த பிரவீன் (23), வர்த்தான்விளையை சேர்ந்த ஜான் கிப்சன் (23), சரல்விளையை சேர்ந்த ஜேக்சன் (23). இவர்கள் + பேரும் நேற்று முன்தினம் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அங்கிருந்து அருகில் உள்ள வேளிமலையின் தொடர்ச்சியான மந்தேரி மலைக்கு செல்லும் காமராஜர் சாலையில் சிறிது தூரம் பயணித்தனர். ஆனால் அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் மலையில் செல்ல முடியாது.

மலை ஏறிய போது பாதை மாறினர்

இதனை தொடர்ந்து அங்கேயே மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு மலை உச்சிக்கு சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் உற்சாகத்துடன் நடந்து சென்றனர். அங்கு நின்றபடி கண்ணுக்கு எட்டிய தூரம் பரந்து விரிந்த இயற்கையையும், ஊரின் அழகையும் ரசித்தனர். பிறகு ஆசை, ஆசையாக செல்போனில் விதவிதமாக படம் எடுத்தனர். ஆர்வமிகுதியில் அங்கு மிங்கும் மலையில் நடந்து சென்றனர். இதற்கிடையே சூரியன் மறையும் தருவாயில், கீழே இறங்க தயாரானார்கள்.

ஆனால் பாதை மாறியதால் மலையின் மற்றொருபுறம் சென்று விட்டனர். அதற்குள் இருட்டி விட்டது. இதனால் பயம் அவர்களுக்கிடையே தொற்றியது. அடர்ந்த காடாக இருந்ததால் அவர்களால் மேற்கொண்டு நடந்து செல்ல முடிய வில்லை.

இரவு முழுவதும் பரிதவிப்பு

ஒரு கட்டத்தில் இரவில் அங்கேயே தங்கி விடலாம் என்ற மனநிலைக்கு வந்தனர். அங்குள்ள பாறைகளுக்கு இடையே தங்கி விடலாம் என்ற முடிவை சேர்ந்து எடுத்தனர். அந்த சமயத்தில் மழை பெய்ததால் அவர்கள் நனைந்தபடியே இருக்க, கடும் சிரமத்திற்கு ஆளாகி நொந்து போனார்கள். மேலும் அந்த இடம் விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி. இது ஒருபுறம் அச்சத்தை அவர்களிடம் விதைக்க, இரவு முழுவதும் கண் அயர்ந்தும், அயராமலும் திக்…திக்…மனநிலை யிலேயே பரிதவித்தனர்.

அந்த கசப்பான சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருக்க. விடிந்ததும் மீண்டும் கீழே இறங்க முயற்சித்தனர். ஆனால் அதில் இருவர் மிகவும் சோர்வாகி விட்டனர். மேலும் பாதையும் சரிவர தெரியவில்லை.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

இதனால் ஊரில் உள்ள நண்பர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளனர். அந்த தகவல் தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு கொடுக்கப்பட்டது.

உடனே நிலைய சிறப்பு அலுவலர் கவிமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மலை உச்சியை நோக்கி நடந்து சென் றனர். ஒருவழியாக அந்த 4 இளைஞர்களையும் தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். அதன் பிறகு தான் இளைஞர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மலைஉச்சியில் இருந்து இளைஞர்களை மீட்டு கீழே கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள். அவர்களுடைய பெற்றோரி டம் ஒப்படைத்தனர். எனினும் இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபடாதீர்கள், சுவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மலை உச்சியில் இரவு முழுவதும் பரிதவித்த இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம் பவம் குமரியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *