– காஸா மக்களுக்கு இஸ்ரேலின் கடைசி எச்சரிக்கை!
காஸா நகரத்தில் உள்ள மக்கள் இப்போதே வெளியேற வேண்டும் என்றும், தெற்கு பகுதிக்குச் செல்ல இதுவே கடைசி வாய்ப்பு எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கட்ஸ் எச்சரித்துள்ளார். காஸா நகரை விட்டு வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகளாகவோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களாகவோ கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
காஸா நகரத்தை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்துள்ள நிலையில், ஹமாஸை தனிமைப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸா நகரத்தை விட்டு தெற்கே செல்லும் மக்கள் இஸ்ரேலிய ராணுவ சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
