இன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்? – Allmaa

gold29-1770525840

  பர்சனல் பைனான்ஸ்

இன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்?

Personal Finance oi-Devika Manivannan By Published: Sunday, February 8, 2026, 10:16 [IST] Share This Article

உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கம் விலை கடந்த 5 ஆண்டுகளில் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. தங்கம் முன் கூட்டியே வாங்கி வைத்தவர்கள் எல்லாம் தற்போது பெரிய லாபம் பார்த்துவிட்டனர். பலரும் நாம் அப்போதே தங்கம் வாங்காமல் விட்டுவிட்டோமே என வருத்தப்படுகின்றனர்.

தங்கத்தை பொறுத்தவரை எப்போதுமே விலை உயர கூடிய ஒரு பொருள் தான். அதனால் தான் தங்கம் விலை மேலும் குறையும் என காத்திருக்காமல் கையில் பணம் வந்தாலே தங்கத்தை வாங்கி வைத்துவிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது.

இன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்?

உதாரணமாக 2020 ஆம் ஆண்டில் சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சராசரியாக 4000 ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது. அதாவது 10 கிராம் தங்கம் 40,000 ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது. இதுவே தற்போது சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 15,731 ரூபாய். அதாவது 10 கிராம் விலை 1, 57,310 ரூபாய் என உயர்ந்து நிற்கிறது.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இன்று தங்கத்தின் விலை உயர்வை பார்த்தால் தலையே சுத்துகிறது. இந்த 6 ஆண்டுகளில் தங்கத்தின் சிஏஜிஆர் அதாவது ஆண்டுக்கான சராசரி காம்பவுண்டிங் வளர்ச்சி விகிதம் 25.32% ஆகும். வழக்கமாக தங்கத்தின் சிஏஜிஆர் விகிதம் 8 முதல் 10% ஆக தான் இருக்கும். ஆனால் கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் மின்னல் வேகத்தில் விலை உயர்ந்ததே இந்த அளவு வளர்ச்சிக்கு காரணம்.

Also Readஇனி தங்கம் விலை உயர்வை யாராலும் தடுக்க முடியாது: வேலையை காட்ட தொடங்கியது சீனா!!இனி தங்கம் விலை உயர்வை யாராலும் தடுக்க முடியாது: வேலையை காட்ட தொடங்கியது சீனா!!

சரி அடுத்த 5 ஆண்டுகள் அதாவது 2030ஆம் ஆண்டு வரை தங்கம் விலை இதே அளவில் உயர்ந்தால் அதாவது ஆண்டுக்கு 25.32% சிஏஜிஆர் வளர்ச்சி அடைந்தால் இன்று நாம் செய்யக்கூடிய 10 லட்சம் ரூபாய் முதலீடு 2030இல் என்னவாக இருக்கும் என கணக்கிடலாம். அதாவது இன்றைய தினம் 10 லட்சம் ரூபாய் கொடுத்து நீங்கள் 24 கேரட் தங்க கட்டிகளை வாங்கி வைத்தால் 2030ஆம் ஆண்டில் அந்த தங்கத்தின் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும் என தெரிந்து கொள்ளலாம்.

Recommended For Youதங்க சந்தையே தலைகீழா மாறி இருக்கு..!! முதலீட்டாளர்களே உஷார்..!! எச்சரிக்கும் நிபுணர்..!!தங்க சந்தையே தலைகீழா மாறி இருக்கு..!! முதலீட்டாளர்களே உஷார்..!! எச்சரிக்கும் நிபுணர்..!!

இன்று நீங்கள் 10 லட்சம் ரூபாய் கொடுத்து 24 கேரட் தங்கம் வாங்கி வைக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 15,731 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 லட்சம் ரூபாய் கொடுத்து நீங்கள் 24 கேரட் தங்கத்தை வாங்குகிறீர்கள் என்றால் இதே சிஏஜிஆர் விகிதத்தில் தங்கம் விலை வளர்ச்சி அடைந்தால் 2030ஆம் ஆண்டில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 3.88 லட்சமாக அதிகரித்திருக்கும்.

அப்படி பார்த்தால் இன்று 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கும் தங்கத்தின் மதிப்பு 2030இல் 24.72 லட்சம் ரூபாய் என வளர்ந்திருக்கும்.இதை கொண்டு 22 கேரட் ஆபரண தங்கத்திற்கு கணக்கிட்டு பார்த்தால் இன்று 14,420 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 2030இல் ஒரு கிராம் விலை 34,800 ரூபாயாக உயர்ந்திருக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Gold: what will the worth of your Rs.10 lakhs gold purchase today, will be in 2030?

From 2020 February to now, the gold has given 25% CAGR returns, if the same CAGR applies for next 4 years, then what will be the gold price in 2030. Let us calculate in this article. Story first published: Sunday, February 8, 2026, 10:16 [IST] See More On: gold, silver, investment, தங்கம், வெள்ளி Other articles published on Feb 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *