இன்று முதல் ரயில் டிக்கெட்டுகளுக்கு 6% தள்ளுபடி: இந்திய ரயில்வேயின் சலுகையை பெறுவது எப்படி?

railway-1768372343

  வகுப்புகள்

இன்று முதல் ரயில் டிக்கெட்டுகளுக்கு 6% தள்ளுபடி: இந்திய ரயில்வேயின் சலுகையை பெறுவது எப்படி?

Classroom oi-Devika Manivannan By Published: Wednesday, January 14, 2026, 12:04 [IST] Share This Article

ரயில் பயணிகளுக்காக பல்வேறு சலுகைகளை வெளியிட்டு வருகிறது இந்திய ரயில்வே. அந்த வகையில் ரயில் டிக்கெட் கட்டணத்தில் 6% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இன்று தொடங்கி 6 மாதங்களுக்கு அதாவது ஜூலை மாதம் 14ஆம் தேதி வரை இந்த டிக்கெட் சலுகை கிடைக்கும்.

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். குறைந்த கட்டணம் தான் மக்கள் ரயில் பயணங்களை விரும்ப முக்கிய காரணம். இந்திய ரயில்வே வெளியிட்டிருக்கும் இந்த ஒரு சலுகையால் ரயில் கட்டணம் இன்னும் குறைய போகிறது. ஆம், RailOne செயலி வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி என அறிவித்துள்ளது.

இன்று முதல் ரயில் டிக்கெட்டுகளுக்கு 6% தள்ளுபடி: இந்திய ரயில்வேயின் சலுகையை பெறுவது எப்படி?

ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவுக்கு ஒரு செயலி, ரயில் லைவ் ஸ்டேட்டஸ் பரிசோதிக்க ஒரு செயலி, உணவு ஆர்டர் செய்வது, புகார் பதிவு செய்வது என தனித்தனி செயலிகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து இந்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செயலி தான் RailOne செயலி.

Also Readபத்த வச்சிட்டியே பரட்ட!! குறைய போகும் வட்டி!! எகிறப் போகும் தங்கம், வெள்ளி விலை!!பத்த வச்சிட்டியே பரட்ட!! குறைய போகும் வட்டி!! எகிறப் போகும் தங்கம், வெள்ளி விலை!!

இந்த ரயில் ஒன் செயலி வாயிலாக அன்ரிசர்வடு ஜெனரல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் மூன்று சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை இன்று தொடங்கி ஆறு மாதங்களுக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் இன்று முதல் ஜூலை 14ஆம் தேதி வரையிலான ஆறு மாத காலத்தில் பயணிகள் ரயில் ஒன் செயலியின் மூலம் அன்ரிசர்வ்டு ஜெனரல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் மூன்று சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

இன்று முதல் ரயில் டிக்கெட்டுகளுக்கு 6% தள்ளுபடி: இந்திய ரயில்வேயின் சலுகையை பெறுவது எப்படி?

எனவே ரயில் ஒன் செயலியில் R wallet மட்டும் இல்லாமல் யுபிஐ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பேமென்ட்களை பயன்படுத்தக்கூடிய அனைத்து பயணிகளுக்கும் 3% தள்ளுபடி கிடைக்கும். ஏற்கனவே R wallet பயன்படுத்துவோருக்கு மட்டுமே 3% கேஷ் பேக் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து கிடைக்கும் இது மட்டும் இல்லாமல் டிஜிட்டல் பேமண்டுகளுக்கு மூன்று சதவீத தள்ளுபடியும் கிடைக்கும்.

எனவே ரயில் ஒன் செயலி வாயிலாக ஒரு பயணி R wallet பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தால் 6 சதவீதம் வரை டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி ரயில் ஒன் செயலி வாயிலாக மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Recommended For You2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!

பயணிகள் பிளே ஸ்டோர் வாயிலாக ரயில்ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து மொபைல் நம்பரை உள்ளிட்டு லாகின் செய்து கொள்ள வேண்டும். இதனை அடுத்து எம்-பின் செட் செய்து கொண்டால் போதும் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மக்களிடம் ரயில் ஒன் செயலியை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

Share This Article English summary

Want to get 6% discounts on Train tickets? – Use RailOne App

From Today onwards passengers using RailIOne app to book unreserved (general) tickets will get 3% discount, if they use R-Wallet payments they will get 6% discount which includes 3% cashback. Story first published: Wednesday, January 14, 2026, 12:04 [IST] Other articles published on Jan 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *