இன்னும் பொங்கல் பரிசு ரூ.3000 வாங்கலையா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! உடனே புறப்படுங்க
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 13, 2026, 15:26 [IST] Share This Article
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை 3,000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் ஜோராக நடைபெற்று வருகின்றன.
கடந்த 8ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய அனைத்து ரேஷன் கடைகள் வாயிலாகவும் பொங்கல் பரிசுத் தொகை 3000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கு பணிகள் தொடங்கப்பட்டன. தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதால் மாநிலம் முழுவதுமே சீரான முறையில் பொங்கல் பரிசு விநியோகம் என்பது நடைபெற்றது.

தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் மற்றும் நாளில் ரேஷன் கடைகளுக்கு வந்து சுமூகமான முறையில் பொங்கல் பரிசு தொகையையும் பொங்கல் பரிசு தொகுப்பையும் மக்கள் வாங்கி சென்றார்கள். பல ரேஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொங்கல் பரிசு பெறுவதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு நாளையும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
தமிழக முழுவதும் நியாய விலை கடைகளில் ஜனவரி 14-ஆம் தேதியான நாளையும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்காதவர்கள் வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் நாளைக்குள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பரிசு தொகையை வாங்கிக் கொள்ளலாம்.
Also Read
பொங்கல் பரிசு: கை விரல் ரேகை பதிவாகாத முதியவர்களுக்கு பணம் வழங்குவது எப்படி? அரசு முக்கிய உத்தரவு
டோக்கன் கிடைக்காதவர்கள், டோக்கன் பெற்றும் உரிய தேதியில் கடைக்கு சென்று பரிசு வாங்க முடியாதவர்கள் என அனைவருக்கும் இன்றும் நாளையும் பொங்கல் பரிசு பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசினை பொறுத்தவரை அனைத்து பயனாளிகளுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகையான 3 ஆயிரம் ரூபாயும் பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவையும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது.
ஏராளமானவர்கள் இன்னும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லாமல் இருக்கின்றனர் என்பதை கருத்தில் கொண்டும் பலரும் இன்று தான் ஊருக்கு புறப்படுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு அரசு நாளை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகையும் பொங்கல் பரிசு தொகுப்பும் கிடைக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
Recommended For You
பொங்கலில் பெண்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிடுவார் முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர் ஐ பெரியசாமி!!
ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் வந்து தான் கைவிரல் ரேகை அல்லது கரு விழி சரிபார்ப்பு மூலம் பொங்கல் பரிசு தொகை பெற முடியும். எனவே மக்கள் நாளைக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கான பொங்கல் பரிசு தொகையை தவறாமல் பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Share This Article English summary
Pongal prize will be distributed in all ration shops on Jan 14- Tamilnadu govt
Tamilnadu government has announced that tomorrow also pongal prize will be distributed in all ration shops. Those staying out of the station can get their Pongal cash gift even tomorrow. Story first published: Tuesday, January 13, 2026, 15:26 [IST] Other articles published on Jan 13, 2026
