இனி ஹெச்1பி விசாவே கிடையாதா? – புதிய மசோதா கொண்டு வரும் டிரம்ப் கட்சி எம்பி..!! – Allmaa

இனி ஹெச்1பி விசாவே கிடையாதா? – புதிய மசோதா கொண்டு வரும் டிரம்ப் கட்சி எம்பி..!! – Allmaa

  செய்திகள்

இனி ஹெச்1பி விசாவே கிடையாதா? – புதிய மசோதா கொண்டு வரும் டிரம்ப் கட்சி எம்பி..!!

News oi-Devika Manivannan By Published: Friday, November 14, 2025, 16:52 [IST] Share This Article

அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களிலும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் . மைக்ரோசாப்டின் சத்ய நாதெல்லா தொடங்கி கூகுளின் சுந்தர் பிச்சை வரை ஹெச்1பி விசாவில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று செட்டிலானவர்கள் தான்.

அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றுவது ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு வருகை தந்தவர்கள். ஆனால் டிரம்பும் அவருடைய குடியரசு கட்சியினரும் ஹெச்1பி விசாவுக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றனர். வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நுழைந்து அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள் என ட்ரம்பும் அவர் சார்ந்த குடியரசு கட்சியினரும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர் .

இனி ஹெச்1பி விசாவே கிடையாதா? – புதிய மசோதா கொண்டு வரும் டிரம்ப் கட்சி எம்பி..!!

ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்துவது விசா நடைமுறைகளிலேயே பல்வேறு கட்டுப்பாடுகளையும் கொண்டு வருவது பல நடவடிக்கைகளை எடுத்துள்ள டிரம்ப் அரசு. அமெரிக்காவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறி வருகிறார் டிரம்ப். ஆனால் டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் திறன்மிகு ஊழியர்கள் கிடைக்காமல் நிறுவனங்கள் தவிக்கின்றன.

எனவே இரு தினங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் ஹெச்1பி விசாவில் திறன்மிகு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வருகை தர வேண்டும் என தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருந்தார். இது ஒரு புறம் இருக்க அதிபர் டிரம்புக்க சொந்தமான குடியரசு கட்சியினர் ஹெச்1பி விசாவை முற்றிலும் ஒழிக்கும் வகையிலான ஒரு திட்டத்தை கையில் எடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

Also Readமெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..

குடியரசு கட்சி எம்பி மர்ஜோரி டெய்லர் கிரீம், ஹெச்1பி விசா திட்டத்தை முழுமையாக நீக்குவது தொடர்பான புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தான் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் ஹெச்1பி விசாவை இந்தியர்கள் தான் பயன்படுத்துகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டின் நிலவரப்படி அமெரிக்காவில் இந்த விசா பெற்றவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் இந்தியர்கள்.

எனவே இந்த விசாவில் கொண்டு வரப்படுகிற எந்த ஒரு மாற்றமும் இந்திய ஐடி நிபுணர்களையும் டெக் நிறுவனங்களையும் பெரிய அளவில் பாதிக்கும். இந்த சூழலில் தான் அமெரிக்க குடியரசு கட்சி எம்பி டெய்லர் கிரீன் அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்கள் ஹெச்1பி விசா திட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறுகிறார்.

Recommended For Youதாறுமாறாக உயர்ந்த உணவு பொருட்களின் விலை..! இறக்குமதி வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப்!!தாறுமாறாக உயர்ந்த உணவு பொருட்களின் விலை..! இறக்குமதி வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப்!!

இதன் மூலம் அமெரிக்க ஊழியர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என கூறும் அவர் இதனால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் ஓரம் கட்டப்படுகிறார்கள் என்கிறார். தான் ஹெச்1பி விசாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மசோதாவை கொண்டு வர இருப்பதாகவும், இந்த மசோதா சட்டமானால் ஹெச்1பி விசா திட்டமே முழுமையாக நிறுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் ஹெச்1பி விசா திட்டம் முழுமையாக நிறுத்தப்படுகிறது என்றால் அது அமெரிக்காவிற்கு தான் பெரிய நஷ்டமாக அமையும். பொதுவாக இதுபோல தனி நபர்கள் கொண்டு வரக்கூடிய மசோதாக்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருந்தாலும் இது குடியரசு கட்சியினரின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Share This Article English summary

Bill to end H1B visa program? – Trump’s republican MP says so

Trump’s Republican Congresswoman Marjorie Taylor Greene said she would be introducing a bill to end the H-1B visa program, claiming US companies were misusing it to replace American workers. Story first published: Friday, November 14, 2025, 16:52 [IST] Other articles published on Nov 14, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *