இந்த கடையில அப்படி என்ன தான் இருக்கு? அலப்பறையை கூட்டும் கோவில்பட்டி மக்கள்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Wednesday, December 17, 2025, 17:12 [IST] Share This Article
கோவில்பட்டி, தூத்துக்குடி: இந்திய மக்களிடையே சூப்பர் மார்க்கெட்களுக்கு சென்று பொருட்கள் வாங்கும் பழக்கம் தொற்றி கொண்டது. வழக்கமாக மளிகை கடைக்கு சென்றால் நாம் கூறும் பொருட்களை அவர்கள் எடுத்து கொடுப்பார்கள். ஆனால் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை தொட்டு பார்த்து தேர்வு செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இதனால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகமாகவே உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் டி மார்ட் நிறுவனம் தன்னுடைய கடையை திறந்து இருக்கிறது . டிசம்பர் 10ஆம் தேதி அன்று கோவில்பட்டியில் டிமார்ட் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது. இதனை அடுத்து ஒட்டுமொத்த கோவில்பட்டியே டிமார்ட்டில் இருக்கிறது என கூறும் அளவுக்கு தினமும் இந்த கடையில் கூட்டம் அள்ளுகிறது.

இந்தியாவை சேர்ந்த முன்னணி சூப்பர் மார்க்கெட் நிறுவனம்தான் அவன்யூ சூப்பர் மார்கெட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் டி மார்ட் என்ற பெயரில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தன்னுடைய சில்லறை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. வீட்டு உபயோகப் பொருட்களில் தொடங்கி ,துணிமணி , மளிகை பொருட்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் டிமார்டுக்கு சென்றால் வாங்கிவிடலாம்.
பொதுவாக நகர் புறங்களில் தான் டிமார்ட் கடைகள் என்றால் மிகவும் பிரபலம் . தற்போது டி மார்ட் இரண்டாம் நிலை நகரங்களிலும் , மூன்றாம் நிலை நகரங்களிலும் தன்னுடைய கடைகளை விரிவாக்கம் செய்து வருகிறது .அந்த வகையில் தன்னுடைய 440வது கடையை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிறுவி இருக்கிறது. டி மார்ட் கடை திறக்கப்பட்டது முதலே தினமும் கூட்டம் அலை மோதுகிறது.
Also Read
ஏஐ முதல் ஏலியன்கள் வரை: 2026இல் என்னவெல்லாம் நடக்கும்? பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!!
கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மக்களும் திரளாக சென்று கடையில் பொருட்களை வாங்குகிறார்கள். பார்ப்பதற்கே திருவிழா கூட்டம் போல கடையில் காட்சி தருகிறது. நாள்தோறும் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது . இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.
இதுநாள் வரை தூத்துக்குடிக்கு சென்று டிமார்ட்டில் மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது தங்கள் ஊரிலேயே டிமார்ட் கடை வந்து விட்டதால் திருவிழாவுக்கு கிளம்புவதைப் போல அனைவரும் கிளம்பி விடுகிறார்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Recommended For You
சென்னை தான் H1B விசா மோசடியின் தலைநகரம்!! முன்னாள் தூதரக அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு!!
டிமார்ட் நிறுவனம் பெரிய நகரங்களை அடுத்து சிறு நகரங்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. ஆனாலும் இது போன்ற கடைகளால் சிறு வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்ற ஒரு அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் டி மார்ட் போன்ற கடைகள் வந்துவிட்டால் மக்கள் சிறு மற்றும் நடுத்தர கடைகளுக்கு செல்லாமல் இது போன்ற கடைகளுக்கு சென்று தான் பொருட்களை வாங்குவார்கள், இதனால் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படும் .
Share This Article English summary
Kovilpatti DMart store sees uncontrollable crowd everyday: video goes viral
DMart has opened its store in Kovilpatti, Now all over the thoothukudi district people are rushing to the D mart for Shopping. Story first published: Wednesday, December 17, 2025, 17:10 [IST]
