இது என்னப்பா Safety Pin-க்கு வந்த வாழ்வு..! செம பிஸ்னஸ் ஐடியாவா இருக்கே!! – Allmaa

இது என்னப்பா Safety Pin-க்கு வந்த வாழ்வு..! செம பிஸ்னஸ் ஐடியாவா இருக்கே!! – Allmaa

  செய்திகள்

இது என்னப்பா Safety Pin-க்கு வந்த வாழ்வு..! செம பிஸ்னஸ் ஐடியாவா இருக்கே!!

News oi-Devika Manivannan By Published: Thursday, November 6, 2025, 16:39 [IST] Share This Article

உலகளவில் புகழ்பெற்ற ஆடம்பர ஃபேஷன் பிராண்ட் Prada (பிரதா) . அண்மைக்காலமாக பல்வேறு சாதாரண பொருட்களை கூட தங்களுடைய பிராண்டின் கீழ் அதிக விலை வைத்த விற்பனை செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த வகையில் Prada நிறுவனம் இந்தியாவில் ஒரு ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய ஒரு பொருளை பல ஆயிரம் ரூபாய் என விலை வைத்து விற்பனை செய்வது இந்தியர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்தியர்கள் வீட்டில் கொட்டி கிடக்க கூடியது ஒரு பொருள் தான் Safety Pin . பின் ஊக்கு என்று நாம் இதனை அழைக்கிறோம். இங்கே ஒரு ரூபாய்க்கே வாங்க கூடிய இந்த பின் ஊக்கை பிரதா நிறுவனம் 69,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. சமூக வலைதளங்களில் தற்போது இது தான் ஹாட்டான டாபிக்.

இது என்னப்பா Safety Pin-க்கு வந்த வாழ்வு..! செம பிஸ்னஸ் ஐடியாவா இருக்கே!!

பிரதா நிறுவன இணையதளத்தில் Brooch என்ற பெயரில் சேஃப்டி பின்கள் விற்கப்படுகின்றன. இதன் விலை 69,000 ரூபாய். இதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு நபர் பணக்காரர்களே நான் ஒன்று கேட்கிறேன் உங்களுடைய பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வேன் என தெரியாமல் இருக்கிறீர்களா, எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் ஆராய்ந்து பார்த்து வாங்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பியிருக்கிறார். பிரதாவின் இந்த மோசடியை பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா என்று எனக்கு தெரியவில்லை என கூறியிருக்கிறார் .

பிரதா நிறுவனம் வெறும் கோல்டு நிற சேஃப்டி பின், பிளாஸ்டிக் பூ பொருத்தப்பட்ட சேஃப்டி பின், ஆகியவற்றை இப்படி பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. ஒன்றும் இல்லை இந்த சேஃப்டி பின்னில் உல்லன் நூல்களால் அலங்கரித்து அது ஒரு புதிய பேஷன் பொருள் என விற்பனை செய்கிறது. மெட்டல் சேஃப்டி ப்ரூச் என்ற பெயரில் இது பலவண்ணங்களில் உல்லன் நூல் கொண்டு அலங்கரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது இதில் எந்த ஒரு விலைமதிப்புள்ள பொருளும் சேர்க்கப்படவில்லை வழக்கமாக நாம் பயன்படுத்தக்கூடிய சேஃப்டி பின் தான், அதில் உல்லன் நூலை கொண்டு ஒரு டிசைனை செய்துவிட்டு அதனை 69 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.

Also ReadAI தொழில்நுட்பத்தை மிஞ்சும் Super Intelligence..!! எந்திரன் கதை உண்மையாகுதா? மனிதகுலத்திற்கே ஆபத்தா?AI தொழில்நுட்பத்தை மிஞ்சும் Super Intelligence..!! எந்திரன் கதை உண்மையாகுதா? மனிதகுலத்திற்கே ஆபத்தா?

இந்தியாவில் வெறும் ஒரு ரூபாய்க்கு இது கடையில் கிடைக்கும் போது பிரதா நிறுவனம் இதை தங்கள் பிராண்டின் கீழ் ள்ளையடிப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர் . பிரதா நிறுவனம் இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே இந்தியாவின் பாரம்பரியமான கோலாப்புரி செப்பல்களை ஆயிரம் டாலர்கள் வரை விற்பனை செய்து சர்ச்சையில் சிக்கியது. அது இந்திய பாரம்பரியத்தை கொண்டது என்ற அங்கீகாரத்தை கூட வழங்கவில்லை.

Share This Article English summary

Luxury fashion brand Prada in controversy for selling safety pin for rs. 69,000

Luxury fashion brand Prada recently made headlines for charging an exorbitant amount for a safety pin . Story first published: Thursday, November 6, 2025, 16:39 [IST] Other articles published on Nov 6, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *