இடியாப்ப சிக்கலில் இந்திய வங்கிகள்!! கடைசியில நம்ம கடன்ல தான் கை வைக்க போறாங்க!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 6, 2026, 8:43 [IST] Share This Article
இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தான் மக்களின் மிக முக்கியமான கடன் ஆதாரமாக செயல்படுகின்றன. ஆர்பிஐ-ஆல் ஒழுங்குபடுத்தப்பட்டு இருப்பதால் நம்பிக்கையோடு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன் ,தொழில் புரிவதற்கான கடன் , தனிநபர் கடன் உள்ளிட்டவற்றை நாம் வாங்குகிறோம்.
வங்கிகள் ஒருபுறம் மக்களிடம் இருந்து டெபாசிட்டாக பணத்தை பெறுகிறது, அந்த பணத்தை பயன்படுத்தி தான் மற்றவர்களுக்கு கடன் வழங்குகிறது. இது ரொடேஷன் முறையில் செயல்படுகிறது. தற்போது இதில் தான் பெரிய சிக்கலே உண்டாகி இருக்கிறது. இந்தியாவில் தற்போது மக்கள் கடன் வாங்கும் விகிதம் அதிகரித்து டெபாசிட் செய்யும் விகிதம் குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதைதான் loan to deposit ratio என அழைக்கிறார்கள். ஒரு வங்கி தன்வசம் இருக்கும் எவ்வளவு டெபாசிட் பணத்தை கடன் வழங்குவதற்காக பயன்படுத்துகிறது என்பதை குறிக்கும் ஒரு குறியீடு. இதனை பயன்படுத்தி அந்த வங்கியிடம் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். வங்கியால் சீரான செயல்பட முடியுமா என்பதையும் கணக்கிட முடியும். தற்போது இந்தியாவில் செயல்படக்கூடிய பல்வேறு வங்கிகளிலும் இந்த லோன் டு டெபாசிட் ரேஷியோ வரலாற்றில் இல்லாத உச்சமாக 81% என்ற அளவை எட்டி இருக்கிறது.
டிசம்பர் மாத காலாண்டில் லோன் டூ டெபாசிட் ரேஷியோ அதிகமாகி இருக்கிறது. எனவே இந்திய வங்கிகளில் கடன் வளர்ச்சிக்கும், வைப்பு தொகைக்கும் இடையிலான தொடர்ச்சியான வேறுபாடை அடிக்கோடிட்டு காட்டுகிறது இது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-இல் 2024 டிசம்பருடன் ஒப்பிடும்போது 2025 டிசம்பரில் கடன் வழங்கும் அளவு 12 சதவீதமாக உயர்ந்தது ஆனால் டெபாசிட்டுகள் பெற விகிதம் வெறும் 11.5 சதவீதமாக இருக்கிறது. இது அதற்கு முந்தைய காலாண்டில் இது 16 சதவீதமாக இருந்தது.

இந்தியாவில் தற்போது பல்வேறு வங்கிகளிலும் இதேதான் நிலைமை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இந்திய வங்கி அமைப்பை பொருத்தவரை தற்போது டெபாசிட் எனப்படும் வைப்பு தொகை கணிசமான அளவு குறைந்து கடன் வழங்கும் அளவு வேகமாக வளர்ச்சி அடைகிறது என தெரிவிக்கின்றனர் . பேங்க் ஆப் பரோடா வங்கியை பொறுத்தவரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு டிசம்பரில் கடன் அளவு 14.57% என வளர்ச்சி அடைந்திருக்கிறது ஆனால் டெபாசிட் வீதம் 10.25% ஆக தான் இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வழங்குவது 11% டெபாசிட் வருகை 8.5% வளர்ச்சி தான் எட்டி இருக்கின்றன.
Also Read
தங்கத்தை கொடுத்து கடன் வாங்கலாம் ஆனா வட்டி கட்ட தேவையில்லை!! இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா?
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கடன் வழங்கும் விகிதம் 7.13 சதவீதமாகவும் டெபாசிட் வபெரும் விகிதம் 3.4 சதவீதம் என்றுமே வளர்ச்சி அடைந்திருக்கின்றன. தற்போது இந்தியாவின் பெரும்பாலான வங்கிகளில் இந்த லோன் டு டெபாசிட் விகிதம் என்பது 81 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது என கூறும் நக்வாரி கேப்பிட்டல் தலைவரான சுரேஷ் கணபதி இந்த நிலைமை நீடித்தால் வங்கிகள் டெபாசிட்களுக்கான வட்டிகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் அல்லது ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்புக்கு ஏற்ப கடன்களுக்கான வட்டிகளை குறைக்காமல் இருக்கலாம் என கூறுகிறார்.
இந்திய வங்கிகளில் டெபாசிட் விகிதங்கள் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 1.5% என குறைத்தன. இதனால் வங்கிகள் தங்களுடைய வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிகளை குறைத்தன அதேவேளையில் டெபாசிட்டுகளுக்கு வழங்கி வந்த வட்டிகளும் குறைந்தன.
Recommended For You
இனி கர்நாடகா நெனச்சா கூட ஓசூர் ஏர்போர்ட் வருவதை தடுக்க முடியாது!! மத்திய அமைச்சரே சொல்லிட்டாரு!!
மக்களுக்கு தற்போது மியூச்சுவல் ஃபண்ட், பங்கு சந்தை முதலீடுகள் மற்றும் மாற்று முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வங்கி டெபாசிட் திட்டங்களை விட அதிக வருமானம் தரக்கூடிய தபால் நிலையத் திட்டங்கள் மற்றும் பிற முதலீடுகளை நாட தொடங்கி இருக்கின்றனர். இது வங்கிகளுக்கான டெபாசிட் வருகையை கணிசமாக குறைத்து இருக்கிறது இந்த போக்கு இன்னும் நீடிக்கும் பட்சத்தில் வங்கிகளின் பேலன்ஸே ஆட்டம் காணும் என எச்சரிக்கப்படுகிறது.
Share This Article English summary
Bank Loan-to-Deposit Ratios Hit Record 81% Highs, Sparking Liquidity Concerns
India’s banking system’s loan-to-deposit ratios reached an all-time high of 81% in the December quarter, driven by faster credit growth outpacing deposit accretion across major lenders. Story first published: Tuesday, January 6, 2026, 8:43 [IST] Other articles published on Jan 6, 2026
