ஆரம்பமே அசத்தல்.. வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. ஆர்பிஐ, பெட் கூட்டம் வேற இருக்கு..!! – Allmaa

ஆரம்பமே அசத்தல்.. வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. ஆர்பிஐ, பெட் கூட்டம் வேற இருக்கு..!! – Allmaa

  செய்திகள்

ஆரம்பமே அசத்தல்.. வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. ஆர்பிஐ, பெட் கூட்டம் வேற இருக்கு..!!

News oi-Prasanna Venkatesh By Published: Monday, December 1, 2025, 11:18 [IST] Share This Article

இந்திய பங்குச் சந்தை டிசம்பர் மாதத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது என்றால் மிகையில்ல, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே புதிய உச்சத்தை தொட்டு இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் புத்தாண்டையொட்டி புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தங்கம் விலையும் உயர்வு பாதையில் உள்ளது என்பது தான்.

இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 50 குறியீடு 120 புள்ளிகள் உயர்ந்து 26,326 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இதேபோல் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்து 86,159 புள்ளிகளை எட்டியுள்ளது.

ஆரம்பமே அசத்தல்.. வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. ஆர்பிஐ, பெட் கூட்டம் வேற இருக்கு..!!

இன்றைய உயர்வுக்கு சர்வதேச சந்தையில் உருவான சாதகமான சூழ்நிலையில் காரணமாக இருந்தாலும், இந்த சூழ்நிலை இந்தியாவுக்கு சாதகமாக மாறுவதற்கு இந்தியாவின் 2ஆம் காலாண்டு ஜிடிபி 8.2 சதவீதமாக வளர்ந்திருப்பது முக்கியமான விஷயமாக உள்ளது. இந்த வாரம் ஆர்பிஐ, பெட் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு ஜிடிபி தரவுகள் முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இது சந்தையில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஜிடிபி வளர்ச்சி:
அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவீதம் வளர்ந்துள்ளகு. சந்தை நிபுணர்கள் 7.5 சதவீதம் வரையிலான வளர்ச்சியை தான் இக்காலக்கட்டத்தில் எதிர்பார்த்தனர், ஆனால் விழாக்கால வர்த்தகம், உற்பத்தி ஆகியவை நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளது. இந்த எதிர்பாராத வளர்ச்சி உள்நாட்டுத் தேவையை வலுப்படுத்துவதை காட்டுகிறது, உலக அளவில் பல நாடுகளின் பொருளாதாரம் தடுமாறும் நிலையில் இந்தியா தனித்து நிற்பதை இந்த டேட்டா காட்டுகிறது. விவசாயம், உற்பத்தித் துறை, சேவைத் துறை என அனைத்தும் வளர்ச்சி பாதையில் இருக்கும் காரணத்தால் இந்த வளர்ச்சி சாத்தியமானது. இது பங்குச் சந்தைக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்ததுள்ளது.

வங்கிப் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் பெரிய ஏற்றம் கண்டன. பொருளாதார வளர்ச்சி அதிகரித்தால் கடன் தேவையும் அதிகரிக்கும். இதனால் வங்கிகளின் வருமானம் உயரும் என்ற எதிர்பார்ப்பு இதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. சிறு வங்கிகள் முதல் பெரிய தனியார் வங்கிகள் வரை அனைத்தும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

சென்செக்ஸ் குறியீட்டில் பிஇஎல், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், எச்சிஎல் டெக் ஆகியவை ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன. இதேபோல் பாதுகாப்பு, வாகனம், வங்கி, உலோகம், தொழில்நுட்பம் என பல துறைகளைச் சேர்ந்த பங்குகள் ஏற்றம் கண்டன. இதோடு பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, டைட்டன் மட்டும் சிறிய அளவில குறைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் பெரிய நிறுவன பங்குகள் மட்டுமல்ல, சிறு மற்றும் நடுத்தர பங்குகளும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஸ்மால் கேப் பங்குகள் 0.6 சதவீதமும், மிட் கேப் பங்குகள் 0.4 சதவீதமும் உயர்ந்தன. இன்றைய வளர்ச்சி என்பது முக்கிய நிறுவனங்களில் மட்டும் பதிவு செய்யாமல் ஒட்டுமொத்த சந்தையிலும் இது எதிரொலித்துள்ளது ஆரோக்கியமான வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் 8.2 சதவீத வளர்ச்சி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது, இதனால் இன்றைய வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கும் அதிகரித்துள்ளது. இதேவேளையில் இந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஆகியவை தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை குறைக்க திட்டமிட்டு வருவதாக கணிப்புகள் வெளியாகியிருக்கும் காரணத்தால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் இந்திய சந்தையை மிகவும் லாபகரமான சந்தையாக மாறியுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Sensex, Nifty hit new high today amid GDP data and RBI, FED rate cut speculation

Sensex, Nifty hit new high today amid GDP data and RBI, FED rate cut speculation Story first published: Monday, December 1, 2025, 11:18 [IST] Other articles published on Dec 1, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *